Manivasan M Vasan

Drama

4.9  

Manivasan M Vasan

Drama

வாழ்வின் தூரம்

வாழ்வின் தூரம்

3 mins
132


என் பெயர் மணி நான் ஒரு சிறிய கிராமத்தில் வாழ்ந்து வருகிறேன்.நானும் எனது நண்பன் சிவாவும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகின்றோம்.இவன் என்னுடைய பள்ளி மற்றும் கல்லுரி நண்பன்.இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள்.வேலைக்கு சேர்ந்து ஐந்து மாதங்கள் நன்றாகவே போனது அதன்பின் ஒரு நாள் நான் இரவு நேர பணி முடித்து விட்டு வந்து உறங்கினேன்.சிவாவுக்கு பகல் நேர வேலை அவன் சென்றுவிட்டன்.சிறது நேரம் கழித்து விழித்து எழுந்தேன் அந்த வீட்டில் நாங்களேதன் சமைத்து உன்கிறோம்.நான் அன்று சமையல் வேலையை பார்த்துகொண்டு இருந்தேன்.திடீரென இதயம் படபடத்து வலி ஏற்பட்டது சமையல் வேலையை நிறுத்திவிட்டு சிறிது நேரம் ஓய்வு எடுத்தேன்.ஆனால் வலி கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டே இருந்தது ஒரு கட்டத்திற்கு மேல் என்னால் முடியவில்லை.பக்கத்திலுள்ள கிளினிக்கில் பரிசோதித்து பார்த்தேன் அவர் பரிசோதித்து பார்த்து விட்டு சில மருந்து மாத்திரைகளை எழுதிக் கொடுத்தார் மற்றும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார்.


ஆனால் நானோ மருந்து மாத்திரைகள் சாப்பிட்டால் சரியாகிவிடும் என்று நினைத்து விட்டு விட்டேன்.ஆனால் இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் வலி ஏற்பட்டது இந்த மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்துப் பார்த்தேன் அவர் பரிசோதித்து பார்த்துவிட்டு ஸ்கேனிங் செய்து பார்க்கவேண்டும் என்று சொன்னார்.என்னிடம் அப்பொழுது இரண்டாயிரம் ரூபாய் மட்டும் இருந்தது பின்பு ஸ்கேனிங் செய்து பார்த்துவிட்டு மருத்துவர் என்னை அழைத்தார்.ஸ்கேனிங் முடிவுகளை பார்த்துவிட்டு உன்னுடைய நுரையீரல் மிகவும் பாதிப்படைந்துள்ளது உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறினார்.அதற்கு 3 அல்லது 4 லட்சம் ரூபாய் தேவைப்படும் என்று கூறினார்.உனக்கு புகைபிடிக்கும் பழக்கம் இருக்கிறதா என்று கேட்டார் இல்லை என சொன்னேன் மீண்டும் மீண்டும் கேட்டார் கண்டிப்பாக இல்லை என கூறினேன்.


ஏன் அப்படி கேட்கிறீர்கள் என்று கேட்டேன் அதிகமாக நுரையீரல் பாதிப்பு புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு வரும் என கூறினார்.பின்பு என்னிடம் இருந்த 2000 ரூபாய் பரிசோதனைகளுக்கு முடிந்துவிட்டது.பின்பு பணத்தை ஏற்பாடு செய்து கொண்டு வருகிறேன் என்று கூறிவிட்டு வந்துவிட்டேன்.அன்று என்னால் வேலைக்கு செல்ல முடியவில்லை மிகவும் வருந்தினேன்.சிவா பகல்நேர பணியை முடித்து விட்டு வந்தான் நான் அவனிடம் எதுவும் கூறவில்லை ஏனென்றால் அவன் எனது வீட்டில் சொல்லிவிடுவான் என்று சொல்லவில்லை.ஒருவேளை வீட்டில் சொன்னாலும் எங்களால் நான்கு அல்லது ஐந்து லட்சம் ரூபாய் ஏற்பாடு செய்ய முடியாது என்று எனக்கு நன்றாகவே தெரியும்.எனது குடும்பமும் நடுத்தர வசதியுள்ள குடும்பம் ஒருவேளை சொன்னாலும் வீட்டில் கவலை கொள்வார்கள் என்று அச்சத்திலும் கூறவில்லை.ஒருபக்கம் என்ன நடந்தாலும் பார்த்துக்கொள்கிறோம் என்கின்ற எண்ணம் மறுபுறம் மரண அச்சத்திலும் மிகவும் வருந்தினேன்.


அப்படியே சில நாட்கள் சென்றன பின்பு அடிக்கடி காய்ச்சல் மற்றும் இருமல் சளி பிடித்து மிகவும் அவதிப்பட்டேன்.ஆனாலும் வீட்டில் சொல்ல மனமில்லை மற்றும் பணிக்கு செல்லும் நாட்கள் குறைந்துகொண்டே வந்தது.பின்பு சிவா கேட்டான் ஏன்டா வேலைக்கு அடிக்கடி லீவு எடுத்துக் கொள்கிறாய் என்று கேட்டான்.அது என்னுடைய விருப்பம் என்று சொல்லி அவனையும் திட்டி விட்டேன் அவனும் பெரிதாக எதுவும் எடுத்துக் கொள்ளவில்லை.பின்பு அடிக்கடி ஏதோ ஒரு காரணத்தினால் அவனிடம் சண்டையிட்டுக் கொண்டே இருந்தேன்.ஒரு கட்டத்திற்கு மேல் இருவருக்கிடையில் மனவேறுபாடு வர ஆரம்பித்தது.அதற்கு காரணமும் நான்தான் ஏனென்றால் என்னுள் உள்ள நோய்த்தொற்று அவனுக்கும் பரவிவிடும் என்று என்னில் ஏதோ ஒரு சந்தேகம் மற்றும் பயம்.


ஒரு சில நேரத்தில் குடும்ப நிலையை நினைத்தும் மிகவும் வருந்தினேன்.ஒரு கட்டத்தில் ஒரு வேளை நான் இறந்தால் என் குடும்ப நிலை என்னவாகும் என்று நினைத்து இரவு நேரங்களில் அழுதும் கூட தவித்தேன்.விதி விட்டபடி என்று மனதை கல்லாக்கி கொண்டேன்.இப்பொழுது சிவாவிடம் சிறிது நேரம் பேசுவது கூட கிடையாது அவனும் மிகவும் வெறுத்தான்.அதை எண்ணி நண்பனிடம் இப்படி நடந்து கொண்டோம் என்று நினைத்து மிகவும் வருந்தினேன் ஆனால் என்னுடைய சூழ்நிலை அது வேறுவழி எனக்கு எதுவும் தெரியவில்லை.


அப்படியே சில நாட்கள் உருண்டோடின என்னுள் நோயின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வந்தது.அப்பொழுது பள்ளி மற்றும் கல்லூரி நாட்களை நினைத்து கொஞ்சம் ஆறுதல் அடைந்தேன்.பின்பு என்னுடைய மரணம் அருகில் வந்ததை என்னால் உணர முடிந்தது.பின்பு வீட்டிற்கு சென்று எனது பெற்றோரை காண விரும்பினேன் இது என்னுடைய இறுதி ஆசையாக கூட இருக்கலாம்.வீட்டிற்கு சென்று அவர்களிடம் கொஞ்ச நேரம் அல்லது நாட்கள் செலவழிக்க விரும்பினேன்.வீட்டிற்கு சென்ற இரண்டாவது நாள் எனது அம்மா இது உணவு பரிமாறிக் கொண்டு இருந்தார் சாப்பிட்டு முடித்துவிட்டு கை கழுவ எழுந்தேன்.


அப்பொழுது இதயம் படபடத்தது அதிக வலியுடன் அப்படியே சாய்ந்தேன் எனது அம்மா ஓடிவந்து என்னை தாங்கி பிடிக்க ஞாபகமறதி இன்றி அப்படியே இறந்தேன்.சில மணி நேரம் வரை என்ன நடக்கின்றது என்று தெரியவில்லை பின்பு சிறிது நேரம் கழித்து எனது கைபேசியில் இருந்து ஏதோ ஒரு சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்து பார்த்தேன் எனது அம்மாவிடம் இருந்து போன் வந்திருந்தது.அப்போதுதான் புரிந்தது எனக்கு இதுவரை கண்டது கனவு என்று அதனால் நம் வாழ்நாளில் இறப்பு எப்படி வரும் என்று யூகிக்க முடியாது இருக்கும் காலத்தில் நமது நண்பர்களுடனும் குடும்பத்துடனும் மகிழ்ச்சியாக இருப்போம்............😄😄😄😄


Rate this content
Log in

Similar tamil story from Drama