🌹மாற்றம் கொடுத்த மகாராணி அவள் ❤️
🌹மாற்றம் கொடுத்த மகாராணி அவள் ❤️
வணக்கம் நண்பர்களே என் பெயர் மணி. நான் ஒரு சிறிய கிராமத்தில் நடுத்தர குடும்பத்தில் பிறந்த பையன். எனக்கு இப்போது திருமணம் ஆகி மூன்று ஆண்டுகள் ஆகப்போகிறது. ஒரு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. ஒரு நாள் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தேன் அப்பொழுது சமையல் வேலை பார்த்துக் கொண்டே என்னங்க வேலைக்கு போக டைம் ஆச்சு எந்திரிங்க என்று குரல் கொடுத்தாள் எனது மனைவி. கண்கள் கூட திறக்க முடியாமல் அரைக்கண் தூக்கத்தில் எழுந்து சோபாவில் அமர்ந்தேன். இந்தாங்க காப்பி குடிச்சுட்டு சீக்கிரம் ரெடி ஆகுங்க என்றாள். எங்கள் வீட்டில் நான் எனது அப்பா அம்மா எனது மனைவி மட்டும். அப்பாவுக்கு செய்தித்தாள் படிக்கும் பழக்கம் உண்டு. காபி குடித்துக் கொண்டே செய்தித்தாளை புரட்டினேன். நான்காவது பக்கத்தில் கல்லூரி காதலைப் பற்றி சிறுகதை இருந்தது. அதைப் பார்த்தவுடன் எனது பள்ளி காதல் பற்றி ஞாபகம் வந்தது. நான் +1-ல் கணிதவியல் குரூப் தான் படித்தேன். எங்கள் பள்ளியில் கணித பாடத்திற்கு ஆசிரியர் இல்லை. அதனால் பக்கத்து கிராமத்தில் டியூசன் செல்ல வேண்டியதாக இருந்தது. அங்கு தான் அவளை முதன் முதலில் சந்தித்தேன். அவள் பெயர் கலையரசி அவளும் பக்கத்து கிராமத்தில் நடுத்தர குடும்பத்தில் பிறந்த பெண். அவளை பற்றி சொல்ல வேண்டுமானால் முகத்தில் எப்பொழுதும் கலையுடன் இருக்கும் கலை அழகி, அழகில் சிலை போல் இருக்கும் சிலை அழகி, மொத்தத்தில் என்னை மயக்கிய மாய அழகி. அவளை முதலில் பார்த்த உடனே மிகவும் பிடித்து விட்டது. அவளிடம் நிறைய முறை பேச முயற்சி செய்தேன் ஆனால் முடியவில்லை. ஒரு நாள் அவளிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது நான் வேறு பள்ளியில் இருந்து டியூஷன் வருவதால் அவளிடம் பேசும் வாய்ப்பு மிகவும் குறைவு. ஆனாலும் எனக்கு எப்போதெல்லாம் பேசும் வாய்ப்பு கிடைக்கிறதோ அவளிடம் பேசி கொஞ்சம் நெருக்கமாக ஆனேன். அவளிடம் பேசும் போது குறும்புத்தனமாக பேசி அவளை சிரிக்க வைத்து விடுவேன். அதனால் அவளுக்கு என்னை கொஞ்சம் பிடிக்க ஆரம்பித்தது. அவளே கூட ஒரு முறை என்னிடம் சொல்லி இருக்கிறாள் உன்னிடம் பேசும் போது நிஜமாகவே நான் கொஞ்சம் மகிழ்ச்சியாக உணர்கிறேன் என்று அதை நினைத்து நான் மிகவும் சந்தோஷப்பட்டு இருக்கிறேன். இப்படியே கொஞ்ச நாள் போனது இப்பொழுது நான் அவளை பார்ப்பதற்காகவும் டியூஷன் செல்ல வேண்டியதாக இருந்தது. சில இரவு நேரங்களில் நாளை என்ன பேச வேண்டும் என்று திட்டமிட்டு கொண்டே உறங்கி இருக்கிறேன். ஒரு நாள் அவள் டியூஷன் வரவில்லை அவள் தோழியிடம் கேட்டபோது அவளுக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறினாள். டியூசனில் அந்த நாள் மிகவும் வெறுப்புடனும் கவலையுடனும் சென்றது. அன்று இரவு சரியாக சாப்பிடக்கூட முடியவில்லை நிஜமாகவே தெரியவில்லை அன்று வரை நான் அவளை எவ்வளவு காதலித்திருக்கிறேன் என்று அடுத்த நாள் டியூசனுக்குள் சென்று முதலில் அவள் வந்திருக்கிறாளா என்று தான் பார்த்தேன். அவள் வந்திருந்தால் அவளை பார்த்தவுடன் கண்ணாலே பேசிக்கொண்டேன் முகத்தில் சிறிய புன்னகையுடன். சிறிது நேரம் கழித்து அவளிடம் நலம் விசாரித்துவிட்டு கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்தேன். இப்பொழுது எல்லாம் அவளுடன் பேசும் நேரம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. அவளிடம் காதலை சொல்ல திட்டமிட்டேன் அவளிடம் சென்று காதலைப் பற்றி பேச நினைக்கும் போதெல்லாம் இதயத் துடிப்பு அதிகரித்துக் கொண்டே இருந்தது. வெகு நாட்களாக இது தொடர்ந்தது ஒரு நாள் கண்டிப்பாக நாளை அவளிடம் காதலை சொல்ல முடிவு செய்தேன் எப்படி சொல்வது என்று இரவு முழுவதும் யோசித்தேன். காலை ஐந்து மணிக்கு எழுந்து ஒரு கடிதம் எழுதினேன். அந்த கடிதத்தில் நான் உன்னை காதலிக்கிறேன் என்னுடைய காதலை நீ ஏற்றுக் கொண்டால் பச்சை வண்ண ஆடை அணிந்து வந்தால் மட்டும் கூட போதும் என்று எழுதி இருந்தேன். இந்தக் கடிதத்தை ஒரு டிக்ஷனரியில் வைத்து அவளிடம் கொடுத்துவிட்டு இதை வீட்டில் சென்று நீ பிரித்துப் பார் உன்னுடைய பதிலுக்காக நாளை நான் காத்திருப்பேன் என்று கூறிவிட்டு வந்து விட்டேன். அடுத்த நாள் சீக்கிரம் பள்ளிக்கு சென்று வந்து நன்றாக குளித்துவிட்டு நண்பனிடம் கடிகாரம் ஒன்று கடன் வாங்கி கட்டிக்கொண்டு மிகவும் ஆவலுடன் அன்று டியூசனுக்கு சென்றேன். எனக்குத் தெரியும் அவளுக்கும் என்னை பிடிக்கும் என்று. நான் கணித புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு டியூஷனுக்குள் நுழைந்தேன். அவளைப் பார்த்தவுடன் அப்படியே அதிர்ந்து போனேன் அவள் பச்சை நிற ஆடை அணியவில்லை. மூன்று நாட்களுக்கு முன்பு அணிந்த சிவப்பு நிற ஆடை அணிந்து வந்திருந்தால் அதைப் பார்த்தவுடன் என் கையில் இருந்த புத்தகம் கையில் இருந்து நழுவி கீழே விழுந்தது என்னை அறியாமல். என்னை பார்த்து விட்டு சிறிய புன்னகை செய்தால் எனக்கு என்ன செய்வது என்று தெரியாமல் கவலையின் விளிம்பில் இருந்தேன். பின்பு அவளை பார்க்க கூட மனம் வரவில்லை டியூஷன் முடிந்த பிறகு என்னிடம் வந்து அந்த டிக்ஷனரியை கொடுக்க வந்தால். நான் அவளின் முகத்தைக் கூட பார்க்காமல் கையில் வாங்கிக் கொண்டேன் சரி டைம் ஆச்சு நான் போகட்டுமா என்று கேட்டால். நான் தலை குனிந்தபடியே சரி என்று கூறிவிட்டு வந்துவிட்டேன். அன்று இரவு முழுவதும் தூங்கக்கூட முடியவில்லை முந்தைய நாள் இரவு தான் எங்கள் திருமணத்தை பற்றியும் குழந்தைகளை பற்றியும் யோசித்து மிகவும் மகிழ்ச்சியுடன் உறங்கினேன். இன்று அப்படியே என்னுடைய வாழ்க்கை தலைகீழாக மாறியது. அவளை பற்றி நினைத்துக் கொண்டு இருக்கும்போதே என்னை அறியாமலே கண்ணீர் வந்து விட்டது. அப்படியே அன்று இரவு உறங்கி விட்டேன் இந்தக் காதல் தோல்வியிலிருந்து நான் மீண்டு வர வெகு நாட்கள் தேவை பட்டது. பின்பு டியூசனுக்கு கூட சரியாக செல்லவில்லை. அதையும் மீறி போனாலும் கூட அவளிடமிருந்து முழுமையாக விலகி நின்றேன். அவள் இரண்டு மூன்று முறை என்னிடம் பேச முயற்சி செய்தால் நான் அவளை விட்டு விலகி நின்றேன். அவள் தோழி கேட்டால் ஏன் என்ன ஆச்சு இப்பல்லாம் சரியாக எங்களிடம் பேசுவது இல்லை என்று ஒன்றுமில்லை குடும்பத்தில் கொஞ்சம் பிரச்சனை என்று சொல்லி சமாளித்து விட்டேன். அப்படியே +2 பப்ளிக் எக்ஸாம் வர குறைவான நாட்கள் மட்டுமே இருந்தது அதனால் நான் டியூசன் செல்வது நிறுத்திக் கொண்டேன். அங்கு சென்றாள் அவளின் ஞாபகம் வந்து கொண்டே இருக்கும் என்று. பின்பு குடும்ப நிலை கருதி எக்ஸாமில் கொஞ்சம் ஆர்வம் காட்ட தொடங்கினேன். என்னால் முடிந்தவரை நன்றாக எழுதி முடித்தேன். பின்பு நானும் கல்லூரி சேர்ந்து விட்டேன். நானும் அப்பப்போ அவளைப் பற்றி விசாரித்துக் கொண்டே இருந்தேன். கல்லூரி சேர்ந்ததாக அவள் தோழி சொன்னால் பின்பு இரண்டு ஆண்டுகள் டிப்ளமோ படிப்பை முடித்துவிட்டு கோயம்புத்தூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். நான்கு ஆண்டுகள் கழித்து அவளுக்கு திருமணம் என்று கேள்விப்பட்டேன். அன்று கடவுளை நன்றாக திட்டி விட்டு சோகத்துடன் வேலைக்கு சென்று விட்டேன். பின்பு பொங்கல் லீவுக்காக நான் வீட்டிற்கு வந்தேன். அம்மா பண்டிகைக்காக வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தாள். அப்பொழுது அம்மாவுக்கு சுத்தம் செய்ய உதவினேன். அப்பொழுது அலமாரியில் உள்ள என்னுடைய பழைய புத்தகங்களை எடுத்து வைக்கும்போது அவள் கொடுத்த டிக்ஷனரி என் கண்ணில் தென்பட்டது. அப்பொழுது கோபத்தின் உச்சிக்கு சென்ற நான் அந்த டிக்சனரியை அம்மா இருப்பதை மறந்து தூக்கி வீசினேன். அப்போது அதிலிருந்து ஒரு கடிதம் வந்து விழுந்தது. எடுத்து படித்து பார்த்தேன் அந்தக் கடிதத்தை படித்து பார்த்துவிட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்து விட்டேன். அவள் அந்த கடிதத்தில் என்னிடம் பச்சை நிற ஆடை இல்லை என்னை மன்னித்துக் கொள்ளவும் ஆனால் உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று எழுதி இருந்தது. அதைப் படித்துப் பார்த்தவுடன் காதல் தோல்வியால் கூட அவ்வளவு வலி உணர்ந்தது இல்லை இப்பொழுது அதைவிட பல மடங்கு கவலை கொண்டேன். அப்பொழுதுதான் உணர்ந்தேன் கோபத்தில் எடுத்த என் முடிவினால் வென்று விட்டேன். ஏழ்மையின் காதலால் நாங்கள் தோற்று விட்டோம். அன்று இரவு என்னை நானே வெறுத்து மிகவும் கவலை கொண்டேன். அடுத்த நாள் காலையில் அவளை சந்திக்க சென்றேன். அவள் பண்டிகைக்காக அம்மா வீட்டுக்கு வந்து இருந்தால் அப்பொழுதுதான் மீண்டும் அவளுடைய முகத்தை முழுமையாக பார்க்கிறேன். என்னை பார்த்தவுடன் வீட்டிற்குள் இருந்து வந்து டேய் மணி எப்படிடா இருக்க என்று கேட்டால் ஏதோ இருக்கிறேன் என்று சொல்லிவிட்டு தலை குனிந்தபடியே இருந்தேன். என்னடா ஆச்சு என்று கேட்டால் அவளை பார்த்தவுடன் எனது கண்ணில் இருந்து கண்ணீர் வந்துவிட்டது. ஏன்டா என்று கேட்டால் நீ எழுதிய கடிதம் இன்று தான் நான் படித்தேன் என்று நான் சொன்னேன். என்னடா சொல்ற என்று அவள் அதிர்ந்து போனால் ஆமாம் கலை நேற்று தான் நீ எழுதிய கடிதம் நான் பார்த்தேன். அப்படி சொன்னவுடன் அவள் கண்களிலும் கண்ணீர் வந்துவிட்டது. அப்பொழுது அம்மா என்று சொல்லி ஓடி வந்து அவளுடைய பையன் அவளை கட்டி பிடித்துக் கொண்டான். இது என்னுடைய பையன் ஒன்றை வயது ஆகிறது என்று சொன்னால். திருமண வாழ்க்கை பற்றி அவளிடம் கேட்டேன் என்னை அவர் நன்றாக தான் பார்த்து கொள்கிறார் என்று சொன்னால் சரி விதியை வெல்ல யாராலும் முடியாது என்று நினைத்துக் கொண்டு நீ சந்தோசமாக இருக்கிறாய் அது போதும் எனக்கு என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வந்து விட்டேன். பின்பு பொங்கல் விடுமுறை கழித்து வேலைக்கு வந்து விட்டேன். சில நாட்கள் கழித்து நான் வசிக்கும் பக்கத்து அப்பார்ட்மெண்டில் ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அவள் பெயர் ராணி.( இந்த பெயர் மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) ராணி பற்றி சொல்ல வேண்டுமானால் கிராமத்தில் இருந்து வந்து இங்கு செட்டில் ஆன பேமிலி. அவள் கொஞ்சம் கோபக்காரி, மனதில் பட்டதை நேரடியாக சொல்லிவிடும் பாசக்காரி, அவள் கண்களால் மயக்கிய கொள்ளைக்காரி. நான் என்னுடைய முதல் காதல் தோல்வியை பற்றி அவளிடம் சொல்லியிருக்கிறேன். பின்பு இருவருக்கும் பிடித்திருந்தால் இருவர் வீட்டிலும் பேசி திருமணம் செய்து கொண்டோம். இப்பொழுது நாங்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் நன்றாக புரிந்து மிகவும் சந்தோசமாக இருக்கிறோம். நான் முதல் காதலியிலிருந்து கற்றுக் கொண்டது நாம் கோபத்தில் எடுக்கும் சிறிய முடிவு நம் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய மாற்றத்தையும் கொடுக்கும் விடும் என்பதை தெரிந்து கொண்டேன். என்னங்க என்று ஒரு சத்தம் அது யாரும் இல்லை என்னுடைய வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டு வந்த மகாராணி என்னும் என் ராணியின் குரல் டைம் ஆசசு போய் குளிங்க என்று வழக்கம்போல் குளித்துவிட்டு வேலைக்கு சென்று விட்டேன்.
இப்படிக்கு உங்கள் அன்புடன்
மணி என்கிற மணிவாசன் M
