Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win
Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win

Harshika M

Classics

5  

Harshika M

Classics

வாழ்க்கையைக் கொண்டாடுங்கள்

வாழ்க்கையைக் கொண்டாடுங்கள்

2 mins
53


ஆரம்பத்தில் லாக்டவுன் அனைவருக்குமே மிகவும் கடுமையாக இருந்திருக்கலாம்.

நாட்கள் செல்ல செல்ல நம்மைப் பற்றி நாமே அறியாத பல விஷயங்களை நமக்கு உணர்த்தியது.


முன்பெல்லாம் குடும்பத்துடன் நேரம் செலவழிக்க முடியாமல் போனது. இப்போது அவர்களை விட்டு பிரிய மனமே இல்லை.

வேலை நாட்களில்அவர்களிடம் சின்ன சின்ன விஷயங்களுக்கும் கடுமையாக நடந்து கொண்டிருக்கின்கிறேன். இந்த லாக் டவுன் காலகட்டத்தில்தான் என்னை சுற்றி இருப்பவர்கள் அனைவரும் எவ்வளவு இனிமையானவர்கள் என்று உணர்ந்தேன்.


எனக்கு கதை, கட்டுரைகள் எழுத வரும் என்று எழுத ஆரம்பித்ததும் இந்த லாக்டவுனிலிருந்துதான். தனியாக, வீட்டில் உள்ள அனைவருக்கும் சமைத்து, பரிமாறுவது எவ்வளவு கஷ்டம் என்று உணர்ந்தேன். உணவில் சிறிதாக குறையிருந்தாலும் பல பேர் கடுமையாக நடந்து கொள்கிறார்கள். ஆனால் அது ஒவ்வொன்றையும் செய்ய ,எவ்வளவு சிரமப்பட வேண்டும் என்று அவர் அருகில் நின்று பார்த்தால் தான் நமக்குத் தெரியும். எதுவும் இல்லை என்று வாழ்க்கை முழுவதும் அதனை பெறுவதற்காக ஓடி ஓடி உழைத்து கொண்டிருக்கிறோம், இந்த ஊரடங்கு நாட்களில்,இருக்கிறவற்றை எவ்வாறு சிக்கனமாக பயன்படுத்துவது என்று அறிந்து கொண்டேன்.


நம் வீட்டில் ஏன் ஒருவரே அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும்? நாமும் தானே அவ்வீட்டில் இருக்கிறோம். வீட்டில் உள்ள அனைவரும் வேலைகளை பகிர்ந்து செய்ய வேண்டும் என்று புரிந்து கொண்டேன். எல்லா வேலைகளையும் ஒருவரே செய்ய வேண்டும் என்று நிச்சயமாக கருதக்கூடாது. குடும்பத்திற்கான நேரம் என்று கண்டிப்பாக ஒவ்வொரு நபரும் செலவழிக்க வேண்டும். அம்மாவுக்கு உதவி செய்து கொண்டே சமைக்க கற்று கொண்டேன், அப்பாவிடம் நிறைய கதைக்க ஆரம்பித்தேன், சகோதரனுக்கு படிப்பதற்கு உதவி செய்தேன், அவன் எனக்கு விளையாடக் கற்றுக் கொடுத்தான். விட்டுக் கொடுப்பது பற்றி நன்றாக அறிந்து கொண்டேன்.


நம் நலனுக்காக பாடுபடும் நம் குடும்பம் தானே , தாராளமாகக் விட்டுக் கொடுக்கலாம். அவர்களுக்காக எதையும் செய்யலாம் ஏனென்றால் நம்மை விட அவர்களுக்கு தான் நம் மேல் அக்கறை அதிகம். அனைவரிடமும் இனிமையாகவும் பொறுமையாகவும் நடந்துகொள்ளவேண்டும் என்று உணர்த்தியது இந்த ஊரடங்கு காலகட்டம்.எல்லோரும் இனிமையானவர்கள் தான் அதனை அறிந்து கொள்ள நமக்கு தான் நேரம் கிடைக்கவில்லை. இதுதான் சரியான நேரம் சிறந்த பழக்க வழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்,அனைவரிடமும் இனிமையாகப் பழகுங்கள்,விட்டதை கற்று கொள்ளுங்கள்.

இப்போது ஊரடங்கு கடினமாக இருந்தாலும், பிற்காலத்தில் இது ஒரு சிறந்த நினைவுகளாக இருக்கும்.

அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள்.


நன்றி



Rate this content
Log in

More tamil story from Harshika M

Similar tamil story from Classics