anuradha nazeer

Abstract

4.7  

anuradha nazeer

Abstract

வாழ நினைத்த வாழ்க்கை

வாழ நினைத்த வாழ்க்கை

2 mins
12.1K


2 ஆண்டுகளாக மனநல பாதிப்பு; அன்பால் குணமான அதிசயம்' -தஞ்சைப் பெண்ணை உருகவைத்த அரசின் ஊரடங்கு ஏற்பாடு

தஞ்சாவூரில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தற்போது குணமாகி அவரின் குடும்பத்துடன் சேர்ந்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.


கொரோனா பரவாமல் தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பலர் பெரும் சிக்கல்களைச் சந்தித்துள்ள நிலையில் சிலருக்கு புதிய வாழ்க்கை மாற்றத்தையும் ஏற்படுத்தித் தந்திருக்கிறது.


தஞ்சாவூரில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தற்போது குணமாகி அவரின் குடும்பத்துடன் சேர்ந்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.

கொரோனா பரவாமல் தடுப்பதற்காக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதையடுத்து தஞ்சாவூரில் சாலையோரத்தில் சுற்றித் திரிந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றவர்கள் எனப் பலரும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அழைத்துவரப்பட்டு அரசுக் கல்லூரி ஒன்றில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. உணவு உள்ளிட்ட மற்ற உதவிகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து தர ரெனிவெல் பவுண்டேஷன் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் அவர்களைப் பராமரித்து வந்தனர்.


இந்த நிலையில் நீடாமங்கலத்தைச் சேர்ந்த சித்ரா என்ற மனநலம் பாதிக்கப்பட்ட பெண் அழுக்கு உடையுடன் தஞ்சை நகர வீதிகளில் வலம் வந்துகொண்டிருந்தார். அவரை அழைத்துக் கொண்டு சென்று கொரோனா முகாமில் தங்க வைத்ததுடன் மருத்துவமனையில் சிகிச்சை கொடுத்து குணப்படுத்தியுள்ளனர். தற்போது அந்தப் பெண், அவருடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து ரெனிவல் பவுண்டேஷன் அமைப்பைச் சேர்ந்த வீரமணியிடம் பேசினோம். ``சித்ரா என்ற பெண்ணுக்கு நீடாமங்கலம் சொந்த ஊர். அவரும் அவருடைய கணவரும் காதல் திருமணம் செய்துகொண்டவர்கள். இரண்டு பிள்ளைகள் என வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்தது. இந்த நிலையில் சித்ராவுக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் வீட்டைவிட்டு வந்த அவர் தஞ்சை வீதிகளில் சுற்றித் திரிந்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக தன் பிள்ளைகளை, குடும்பத்தை மறந்து இருந்துள்ளார்.


இந்த நிலையில், கொரோனா பரவாமல் தடுக்கும் வகையில் ஆதரவற்றவர்களுக்காக அமைக்கப்பட்ட சிறப்பு முகாமுக்கு அவரை அழைத்துச் சென்றோம். தலைமுடியை வெட்டி குளிக்கவைத்து புது உடை கொடுத்து உடுத்த வைத்துப் பராமரித்து வந்தோம். இதற்குத் தேவையான உதவிகள் அனைத்தையும் மாநகரட்சி ஆணையர் செய்து கொடுத்தார். எந்த மருந்து, மாத்திரையும் இல்லாமல் அன்பு ஒன்றையே கொண்டு அவர் மனதை மாற்றுவதற்கு முயற்சி செய்தோம். அதற்கு நல்ல பலன் கிடைத்தது.

இதையடுத்து குணமடைந்த சித்ரா, `நான் என் வீட்டுக்குப் போக வேண்டும், என்னைக் காணாமல் என் புள்ளைங்க எப்படியிருக்கோ?' என உருகத் தொடங்கினார். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் நீடாமங்கலத்திலிருக்கும் அவருடைய வீட்டின் முகவரியையும் அவர்தான் சொன்னார்.


அதன் பின்னர் சித்ராவை இன்று அவர் வீட்டுக்கு அழைத்துச் சென்றோம். அப்போது முகாமில் இருந்த பலரும் சித்ராவுக்கு அன்பு முத்தம் கொடுத்து குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என வாழ்த்தி அனுப்பி வைத்தனர். சித்ராவின் வீட்டுக்குச் சென்றதும் அந்தத் தெருவில் உள்ளவர்கள் ஆர்வத்துடன் ஓடி வந்தனர். கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்து சித்ரா வீட்டுக்கு வந்ததைப் பார்த்து ஆச்சர்யமடைந்தனர்.

பத்தாவது படிக்கும் மகன், மகள் என இரண்டு பிள்ளைகளும் ஓடி வந்து, `எங்கம்மா போன எங்களை விட்டுட்டு' என சித்ராவை கட்டிக்கொண்டு கலங்கினர். `இவ்வளவு நாள் உங்களைத் தவிக்க விட்டுட்டேனே' என பிள்ளைகளின் தலையில் கோதியபடி அவர் தேம்பி அழுதார். சித்ராவின் நடவடிக்கைகள் மாறியிருப்பதை உணர்ந்த அவரின் கணவரும் சந்தோஷப்பட்டார்.


பின்னர், எங்களைப் பார்த்த அவர், `என் வாழ்க்கையை என்னிடம் ஒப்படைச்சிட்டீங்க.. இனி நான் வாழ நினைத்த வாழ்க்கையை வாழணும்' எனக் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துவிட்டு அனைவரையும் பார்த்து வணங்கினார்.


Rate this content
Log in

Similar tamil story from Abstract