உண்மையான காதல்
உண்மையான காதல்


`அவ இல்லேன்னு நினைச்சுக்கூடப் பாக்கமுடியலே..." - மனைவிக்குச் எ ங்களோட 48 ஆண்டுக்கால வாழ்க்கையில, செண்பகவள்ளி ஒரே ஒரு முறைதான், என்மேல கோவப்பட்டு அவள் அம்மா வீட்டுக்குப் போயிருக்கா. நான் சமாதானப்படுத்தி வீட்டுக்குக் கூட்டி வரலாம்னு மாமனார் வீட்டுக்குப் போனேன்."
"வெளியில எத்தனை பிரச்னைகள் வந்தாலும், வீட்டுக்கு வந்து செண்பகத்தோட முகத்தைப் பார்த்தா போதும் பிரச்னைகள் அத்தனையும் பறந்து ஓடிடும். அவள் முகத்தைப் பார்த்துக்கிட்டாவது இருக்கிற கொஞ்ச காலத்தைக் கழிச்சிருவோம்னுதான் இந்தச் சிலையை வச்சிருக்கேன்..." - நெகிழ்ச்சியாகப் பேசுகிறார் சுப்பையா.
: புதுக்கோட்டை உசிலங்குளம்தான் சொந்த ஊர். இப்போ எனக்கு வயசு 84. என்னோட அத்தை மகள் செண்பகவள்ளி. சின்ன வயசுலயே அவள்மேல காதல் வந்துருச்சு. அவள்தான் என் பொண்டாட்டின்னு முடிவுக்கு வந்துட்டேன். பலமுறை காதலை சொல்லலாம்னு நெனச்சிருக்கேன். ஆனா, சொல்ல முடியாமலே போயிருச்சு. கல்யாண வயசு வந்ததும் அவளுக்கு வீட்டுல மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கிட்டாங்க. வேற வழியில்லாம, காதலைச் சொல்லிட்டேன். அப்பத்தான், அவளுக்கு
ம் என் மேல விருப்பம் இருந்தது தெரிஞ்சது.
ஆரம்பத்துல, ரெண்டு வீட்டுலயும் எதிர்ப்பு இருந்துச்சு. ரெண்டு பேரும் காதல்ல தீர்க்கமா இருந்தோம். வேற வழியில்லாம, திருமணம் செஞ்சு வைக்க ஒத்துக்கிட்டாங்க. 1958-ல எங்க இருவருக்கும் திருமணம் நடந்துச்சு. எனக்கு அரசு வேலையும் கிடைச்சுச்சு. எங்களோட வாழ்க்கையின் அர்த்தமா மொத்தம் 10 பிள்ளைங்க பிறந்தாங்க. அதுல, ரெண்டு பிள்ளைங்க சின்னபிள்ளையா இருக்கும்போதே இறந்து போச்சு
: தினமும் சுப்பையா மனைவியின் முகத்தில்தான் விழிக்கிறார். மாலைசூடி மனைவிக்குப் பூஜைகள் செய்கிறார். ஒவ்வொரு நினைவு நாளில் ஆதரவற்றோர்களுக்கு அன்னதானம் வழங்குகிறார். ஒவ்வொரு வருடமும் வரும் காதலர் தினம்தான் சுப்பையாவுக்கு ரொம்பவே ஸ்பெஷல். தன் காதல் மனைவிக்குப் பிடித்தவற்றை எல்லாம் தேடித்தேடி வாங்கி வந்து சென்பகவள்ளி சிலை முன்பு அடுக்குகிறார். செண்பகவள்ளி தன் அருகே இருப்பது போலவே உணர்கிறார். பிறருக்கு அது வெறும் சிலை. சுப்பையா தன் காதல் அங்கே உயிர்பெற்று அமர்ந்திருப்பதாக நினைக்கிறார். அந்த எண்ணத்தில் உறைந்திருக்கிறது உண்மையான காதல்