உண்மை
உண்மை


ஒரு குடும்பத்தில் மகன் கேட்கிறான் அம்மாவிடம் ?அம்மா இந்த வீட்டில் யாரோ ஒரு ஆண்மகன் மூன்று நாட்களாக நம் வீட்டில் தங்கி இருக்கிறார் .அவர் நமது குடும்ப புகைப்படத்தில் கூட இருக்கிறார். போட்டோல கூட அவர் புகைப்படம் இருக்கிறது என்று கேட்டான் .
உடனே அம்மா சொன்னாள் .அடேய் இது உன் அப்பாடா. மூன்று நாட்களாக பந்தின் பொருட்டு வீட்டில் இருக்கிறார் .இல்லாவிடில் காலை போனால் இரவுதான் திரும்புவார். வேலைக்கு போய்விட்டு என்று கூறினாள்.உடனே அப்பாவிற்கு கோபம் வந்து அடிப்பது போல் பாவனை செய்கிறார்.
இதுதான் எல்லா குடும்பத்தின் நிலை. ஆனால் இப்போது எல்லோரும் வீட்டில் உற்சாகமாக மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
ஒரு நாணயத்திற்கு இரு பக்கங்கள்.அதுபோல எந்த ஒரு தீமையிலும் நன்மையும் உண்டு. எந்த ஒரு நன்மையிலும் தீமையும் உண்டு. ...இதுதான் இயற்கை .உண்மை.