anuradha nazeer

Abstract

5.0  

anuradha nazeer

Abstract

உலகம்

உலகம்

1 min
646


உலகில் தாய்மை ஒரு வரம். கருவறை புனிதமானது. அதை சுமக்கும் தாய் கடவுளை விட ஒருபடி மேலான .

ஆனால் வறுமைக்கு இந்த மேன்மை தெரிவதில்லை.

பட்டினியில் உழன்ற ஒரு

உயிரைக் குடித்த வறுமை. அவளை குப்பைத் தொட்டியிலும் கிட த் தி

விட்டது.

ஒரு மகனின் இதயத்தை இரும்பாக்கி உள்ளத்தை உருக்கும் நிகழ்வு நடந்தது.

தூத்துக்குடியில் சிறிய கோயில்களில் பூஜை செய்து கொண்டு தாயுடன் வசித்தான் ஒருவன் .

தந்தை முதியோர் காப்பகத்தில் உறவினர்களின் உதவியால் சென்னையில் உள்ள முதியோர் காப்பகத்தில் உள்ளார்.

மகனின் வருமானம் தாய்-மகன் இருவரது வயிற்றுப் பாட்டுக்கு போதவில்லை. அவரது தாயார் பட்டினியில் துடித்தார்.

காலையில் பூஜைக்கு செல்பவன் மாலையில் வீடு வந்தால் தான் தாய்க்கு ஏதும் வயிற்றுக்கு உண்டு.

பசி நோய்க்கு ஆளானார் தாய். ஒரு நாள் பூஜை முடிந்து இரவு வீடு திரும்பிய மகன் தாய் இறந்து கிடப்பதைப் பார்த்தான். ஒரு மகனின் இறுதிக் கடமையான சடங்குகள் செய்வதற்கு கூட அவனிடம் பணம் இல்லை.

தாயாரின் உடலை தூக்கிச் சென்று குப்பைத் தொட்டியில் வீசி விட்டு வந்து விட்டான்.

.

மறு நாள் காலையில் குப்பை அல்ல வந்த துப்புரவு பணியாளர்கள் அதிர்ச்சியுற்றனர் .போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பிரேத பரிசோதனையில் அவரது இரைப்பை காலியாக இருந்ததை கண்ட டாக்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். பசியால் துடித்து பறந்தது தாயின் உயிர் .குப்பையில் வீசி காரியம் முடித்தான் மகன்.


எங்கே போய்க் கொண்டிருக்கிறது?????

ஏன் இந்த வறுமை????

யார் இதற்கு பொறுப்பு। ?உலகம் ???

தாய் செய்த பாவமா???? மகன் செய்த பாவமா?????

மனித உரிமை பற்றி வாய் கிழியப் பேசுகிறோம்.

அன்றாடம் ஒரு வேளை சோற்றுக்கு கூட வழியில்லாமல் மரணிக்கும் இந்த சம்பவம்। !!! வேதனைக்கு உரியதாக உள்ளது.



రచనకు రేటింగ్ ఇవ్వండి
లాగిన్

Similar tamil story from Abstract