தவறு
தவறு


ஒருமுறை ஷரன் என்ற 35 வயது வாலிபருக்கு தூக்கு தண்டனை
தீர்ப்பு ஆயிற்று.தூக்கிலிடுவதற்கு முன்பு அவனது கடைசி ஆசையை கேட்டார்கள்.
.அவனும் கடைசி ஆசை என் அப்பாவை பார்க்க வேண்டும் என்றான்.
நீதிபதி , மற்ற அனைவரும் அப்பாவின் மேல் அவனுக்கு அவ்வளவு பிரியம் போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டனர்.
அப்பாவை அழைத்து வந்தனர்.
அப்படி அழைத்து வந்த அப்பாவின் முகத்தில் அந்த மகன் காரி துப்பினான்.
அதைக் கண்ட அனைவரும் அதிர்ச்சியுற்றனர்.
என்னப்பா தம்பி இப்படி செய்கிறாயே? நீதானே உன் அப்பாவை பார்க்க வேண்டும் என்று ஆசையாய் கூறினாய் என்று கேட்டனர்.
அதற்கு அவனும் நான் தூக்கு தண்டனை பெறுவதற்கு என் தந்தைதான் காரணம் என்றான் .
அதைக் கேட்ட அனைவருக்கும் திகைப்பாய் இருந்தது.
நான் சிறு வயதில் என் அப்பா தோளில் உட்கார்ந்து சென்றபோது ஒரு மாம்பழம், கூடைக்காரி இடமிருந்து ஒரு மாம்பழத்தை திருடினேன்.
பிறகு என் அப்பாவிடம் தெரிவித்தேன்.
உடனே அதற்கு கண்டிக்காத அவர் இரண்டு படமாக எடுக்க வேண்டியதுதானே எனக்கு ஒன்று உனக்கு ஒன்று என்று கேட்டார்.
என் தப்பை சிறுவயதிலேயே சுட்டிக்காட்டி திருத்தி இருந்தால் இன்று நான் மாபெரும் திருடன் ஆகி தூக்கு தண்டனைக்கு ஆளாகி இருக்க மாட்டேன்.
எனவே அத்தண்டனை அவருக்கு தான் தர வேண்டும் என்று கூறினான்.
பெற்றோர்களாகிய நாம் நம் குழந்தையின் மீது உள்ள பாசத்தால் அவன் செய்த தவறை கண்டிக்காமல், தண்டிக்காமல் உற்சாகப்படுத்துவது மிகவும் தவறு