தவறாக எடை
தவறாக எடை
ஒரு காட்டில் இரண்டு பெரிய மரங்கள் இருந்தது. முதல் மரம் இரண்டாவது மரம்
ஒரு பறவை வந்து முதல் மரத்திடம் நான் கூடு கட்டனும். அனுமதி கொடுப்பாயா. மழை காலம் நெருங்குகிறது.
என் குஞ்சுகளை வைத்துக் கொண்டு நிம்மதியாக வாழ கூடு தேவை என்றது. அதற்கு முதல் மரம் இல்லை இல்லை.
இந்த மரத்தில் கூடு கட்ட முடியாது என்றது.
வேறு எங்காவது இடம் தேடிக் கொள் என்றது.
பறவை சரி என்று வாடிய முகத்துடன் இரண்டாம் மரத்திடம் சென்று கேட்டது.
எனக்கு உங்கள் மரத்தில் கூடு கட்ட அனுமதிப்பீர்களா? மழை காலம் நெருங்குகிறது. என் குஞ்சுடன் நான் நிம்மதியாக வாழ இடம் கொடுங்கள் என்றது.
அதற்கு இரண்டாவது மர
ம் சரி நீ கூடு கட்டிக் கொள். எனக்கு ஒன்றும் அதனால் நஷ்டம் இல்லை என்று கூறியது. இந்தப் பறவை கூடு கட்டிக்கொண்டு தன் குஞ்சுகளுடன் நிம்மதியாய் வாய்ந்தது. மழை காலம் வந்தது
முதல் மரம் அடியோடு சாய்ந்து, தண்ணீர் அடித்துக் கொண்டு செல்ல ஆரம்பித்தது. அப்போது குருவி பார்த்து கேட்டது எனக்கு இடம் தரமாட்டேன் என்று நீயே அழிந்து செல்கிறாய்.என்று கேட்டதற்கு மரம் சொன்னது.
எனக்கு தெரியும். நான் திறனற்று இருக்கிறேன். வெள்ளம் வந்தால் நான் அடித்துக்கொண்டு போய் விடுவேன் என்று எனக்குத் தெரியும். அதனால் தான் நான் உனக்கு இடம் தர மறுத்தேன். மற்றபடி உனக்கு இடம் இந்த இடம் தருவதற்கு எனக்கு மனது இருக்கிறது. ஆனால் உடல் வலுவிழந்து விட்டது என்றது. எனவே நாம் எவரையுமே தவறாக எடை போடக்கூடாது.