தற்கொலை
தற்கொலை


ஜான்சி தூக்கு போட்டு தற்கொலையே செய்து கொண்டார்.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் ஜான்சி.. அதே பகுதியை சேர்ந்தவர் சாய் தேஜா.. மிக தீவிரமான காதலர்கள்.. ஆனால் இந்த காதலை இரு வீட்டினரும் ஏற்கவில்லை. யாருக்கும் ஒருவரையொருர் பிடிக்கவும் இல்லை.
ஆனாலும் எல்லோரையும் மீறி இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். 4 மாசத்துக்கு முன்புதான் கல்யாணம் ஆனது.. ஜான்சி - தேஜா இருவரும் அவரவர் வீட்டை விட்டு வெளியே தனியாக வீடு எடுத்து தங்கினர்... பிள்ளைகளை பாசமாக வளர்த்துவிட்ட பெற்றோர்களோ, மனசு கேட்காமல் இவர்களை வந்து ஏற்றுக் கொண்டு அரவணைத்தனர். சில தினங்களகுகு முன்புதான் இரு குடும்பத்தினரும் ஒன்று சேர்ந்தனர்.
தேஜாவை பொறுத்தவரை வீட்டில் ரொம்ப செல்லம்.. ஒரே மகன்.. ஓவர் செல்லத்தால், வேலை வெட்டிக்கு போகாமலேயே விட்டுவைத்திருந்து இருக்கிறார்கள்.. திடீரென கல்யாணம் ஆகிவிடவும் எந்த வேலைக்கு, எப்படி போவது என்று தெரியாமல் இருந்தார்.. எப்பவுமே வீட்டிலேயே முடங்கி கிடந்த தேஜாவை பார்த்து ஜான்சி வருத்தப்பட்டார்.
ஏதாவது ஒரு வேலைக்கு போகுமாறு சொன்னார்... ஆனால
் வேலைக்கு போக எனக்கு பிடிக்கவில்லை என்று சொல்லி உள்ளார்... இரு வீட்டு பெற்றோரும், "கம்மியான சம்பளம் இருந்தாலும் பரவாயில்லை.. பேருக்கு ஒரு தேஜாவை வேலைக்கு போனால் போதும்" என்று அட்வைஸ் தந்தனர்.. இது தேஜாவுக்கு பிடிக்கவில்லை.. யாரெல்லாம் வேலைக்கு போக சொல்கிறார்களோ, அவர்களுடன் தகராறு செய்தார்
இந்நிலையில் சம்பவத்தன்று தேஜாவின் குடும்பத்தினர் எல்லோரும் சினிமாவுக்கு கிளம்பினர்.. தேஜாவையும் வருமாறு கூப்பிட்டார்கள்.. 'நீங்க முன்னாடி போங்க. நான் பின்னாடி வருகிறேன்' என்று சொல்லி லேட்டாக தியேட்டருக்கு போயிருக்கிறார்.. இதனால் தியேட்டரில் தந்தை-மகனிடையே சண்டை வந்துள்ளது.. அந்த ஆத்திரத்தில் வீட்டுக்கு வந்த தேஜா, தூங்கி கொண்டிருந்த ஜான்சி கழுத்தில் இருந்த சங்கிலியை அறுத்து கொண்டு வீட்டை விட்டு ஓடிப்போய்விட்டார்.
ஏற்கனவே வேலைக்கு போகாத கணவனை நினைத்து வருந்திய ஜான்சி, செயினை அறுத்து கொண்டு போனதை நினைத்து கண்ணீர் விட்டார்.. சோகத்தில் கதவை பூட்டிக் கொண்டு தூக்கு போட்டு தற்கொலையும் செய்து கொண்டார். சினிமாவுக்கு போய்வந்தவர்கள் ஜான்சி பிணமாக தொங்குவதை கண்டு அலறினர்..