anuradha nazeer

Action Classics Inspirational


4.8  

anuradha nazeer

Action Classics Inspirational


தோற்றுப்போகும் போதெல்லாம்

தோற்றுப்போகும் போதெல்லாம்

2 mins 138 2 mins 138


நான் ஒரு பாரம்பரிய குடும்பத்தைசேர்ந்த இஸ்லாமிய பெண்!என்னுடைய நாடு பாகிஸ்தான்!என் அப்பாவை எனக்கு அதிகம்பிடிக்கும்!எனக்கு பதினெட்டு வயதாகும்போதுஎனக்கு திருமணம் செய்யவேண்டும்என்று அப்பா விரும்பினார்!


ஆனால் எனக்கு திருமணத்தில்விருப்பமில்லை!அதை அப்பாவிடம் காட்டிக்கொள்ளவும்இல்லை!எனக்கு திருமணம் செய்து வைத்தால்உங்களுக்கு சந்தோஷமா அப்பா என்றேன்!ஆமாம் என்று புன்முறுவலோடுதலையாட்டினார்!அவருடைய சந்தோஷத்திற்காகஅவர் பார்த்த மாப்பிள்ளையையேதிருமணம் செய்துகொண்டேன்!திருமணத்திற்கு பிறகும் எனக்கு பெரிய சந்தோஷம் இல்லை,ஆனாலும் வாழ்ந்துகொண்டு இருந்தேன்!


ஒரு நாள் நானும் கணவரும் காரில் சென்றுகொண்டு இருந்தோம்!அவர் தூக்கக்கலக்கத்தில் காரை தவறாக ஓட்டிபள்ளத்தில் விழுந்துவிபத்துக்குள்ளாகும் நேரத்தில்அவர் மட்டும் கதவை திறந்துகுதித்துவிட நான் காருக்குள்ளேயே சிக்கிக்கொண்டேன்!காப்பாற்றவே முடியாத சூழ்நிலையில்இருந்து உயிரை மட்டும்காப்பாற்றினார்கள்!


முதல் நாள் வந்து, உங்கள்இரண்டு கைகளும் உடைந்துவிட்டது,இனிமேல் உங்களுக்கு பிடித்தஓவியம் வரையும் பணியைசெய்யமுடியாது என்றார்கள்! அடுத்த முறை வந்துஉங்கள் இரண்டு கால்களும்உடைந்துவிட்டது உங்களால்இனிமேல் நடக்கமுடியாது Wheel chair தான் பயன்படுத்த வேண்டும் என்றார்கள்!


மீண்டும் ஒரு முறை வந்து,உங்களுடைய முதுகெலும்பும்இடுப்பு எலும்புகளும் உடைந்துவிட்டதால்உங்களால் இனி எப்போதுமே ஒரு குழந்தைக்கு தாயாக முடியாது என்று சொன்னார்கள்! இனி வாழ்நாள் முழுவதும்Wheel chair ல் உட்கார்ந்துஎல்லாவற்றுக்கும் யாரோ ஒருவரின்உதவியை எதிர்ப்பார்த்து வாழ்கின்ற இந்த வாழ்க்கை எதற்கு, உயிரை மட்டும் மிச்சம் வைத்ததற்குபதிலாக அந்த இறைவன் என்னைகொன்றிருக்கலாமே என்று தோன்றியது!


அவர் கொல்லாவிட்டால் என்னநாமே தற்கொலை செய்துகொள்ளலாம்என்று தோன்றினாலும் அதைசெய்யக்கூட கை கால் வேண்டுமேஎன்று படுக்கையிலேயே அழுதுகொண்டிருந்தேன்!இந்த அதிர்ச்சியை எல்லாம் கடந்தஇன்னொரு அதிரச்சி,நான் எதற்கும் உபயோகப்பட மாட்டேன்என்று என் கணவர் எனக்குவிவாகரத்து நோட்டிஸ் அனுப்பிஇருந்தார்!


விவாகரத்துக்கு ஒப்புக்கொள்ள முடியாமல்,எதற்காக யாருக்காக நான்வாழவேண்டும் என்று எத்தனை முறையோசித்து அழுதாலும் எனக்குஎந்த பதிலும் கிடைக்கவில்லை!ஆனால் எல்லாவற்றுக்கும் சேர்த்துஒருநாள் தெளிவு கிடைத்தது!


என்னிடம் இருந்துஇத்தனையும் பறித்துக்கொண்டஇறைவன் ஏன் என் உயிரை மட்டும்மிச்சம் வைத்திருக்கிறான்,இந்த உயிரை இன்னும் வைத்திருப்பதின்மூலம் நான் செய்ய வேண்டியஏதோ ஒரு வேலை, செல்லவேண்டியஏதோ ஒரு பயணம் மிச்சமிருக்கிறதுஎன்றே தோன்றியது!


எல்லாவற்றையும் இறைவனிடம்விட்டுவிட்டு, எதையும் எதிர்கொள்ளும்தைரியத்தை மட்டும் எனக்கு கொடுஎன்று வேண்டிக்கொண்டு தைரியமாக ஒரு முடிவு எடுத்தேன்!அந்த முதல் முடிவு,என் கணவருக்கு விவாகரத்து அளிப்பது!சந்தோஷப்பட்டார்!இன்னொரு பெண்ணை திருமணமும்செய்துகொண்டார்!மனப்பூர்வமாக வாழ்த்துமடல் அனுப்பினேன்!


ஹாஸ்பிடலை விட்டு நகர முடியாமல்இன்னும் ஹாஸ்பிடலிலேயேஇருந்தேன்!படுத்த நிலையில் நான்கு பக்கமும்எந்த பக்கம் திரும்பினாலும்அதே வெள்ளை நிற சுவர்கள்!குறைந்தபட்சம் இந்த சுவர்களின்நிறத்தையவது மாற்றுங்கள்,மாதக்கணக்கில் இதை பார்த்து பார்த்து பைத்தியம் பிடிக்கிறதுஎன்று கத்தினேன்!மாற்றினார்கள்!'

உடைந்த கையை வைத்துஎதையாவது அரைகுறையாவது வரைய முடியாதா என்று முயன்றேன்!என் முயற்சிக்கு கொஞ்சம்கொஞ்சம் பலன் கிடைத்தது!வரைவது ஒன்றே எனக்கானஜன்னலாக தெரிய தூங்கும் நேரத்தைதவிர மற்ற எல்லா நேரத்திலும்வரைந்துகொண்டே இருந்தேன்!நான் வரைந்த அந்த ஓவியங்களேஎன்னை உயிர்ப்போடு வைத்திருந்தது!


கால்கள் இல்லாவிட்டால் என்னவெளியே போக வீல் சேர் போதும் என்று தோன்றியது!குழந்தை பெற முடியாவிட்டால்என்ன ஏற்கனவே பிறந்து அனாதையாக்கப்பட்ட எத்தனையோகுழந்தைகள் இருக்கிறார்கள்அவர்களில் ஒரு குழந்தையைதத்து எடுத்துக்கொள்ளலாம் என்றுமுடிவெடுத்தேன்!

உட்கார்ந்த இடத்தில் இருந்தேஎழுதமுடியுமே என்று எழுதஆரம்பித்தேன்!குரல் நன்றாகத்தானே இருக்கிறதுபாடலாமே என்று பாட ஆரம்பித்தேன்!வாயும் நன்றாகத்தானே இருக்கிறதுஎன்று பேச ஆரம்பித்தேன்!என்னை இறைவன் உயிரோடவைத்திருந்ததின் காரணம்கொஞ்சம் கொஞ்சமாக புரியஆரம்பித்தது!


எழுந்திரிக்கவே முடியாத பள்ளத்தில்இருந்து எப்படி எழுந்து வந்தேன்என்ற என்னுடைய கதையையேஎல்லோரிடமும் சொல்ல ஆரம்பித்தேன்!எப்படி முடிந்தது என்று எல்லோருமே ஆச்சர்யப்பட்டார்கள்!அது அவர்களுக்கும் ஒரு நம்பிக்கையைகொடுத்தது!


வீல் சேரில் நகர்ந்து மேடைகளிலும் பேச ஆரம்பித்தேன்!மீண்டும் மீண்டும் சலிக்காமல்என் கதையையே சொல்ல ஆரம்பித்தேன்!என் கதையை சொல்லி நான் பரிதாபத்தை தேடிக்கொள்வதாகவும்பலர் சொன்னார்கள்,நான் கவலைப்படவில்லை,என் கதை பரிதாபத்திற்குரியதாகஇருந்தாலும் அது பலரைஉத்வேகப்படுத்தியது,அவர்களை எழுந்து நடக்கவைத்தது!


தோற்றுப்போன அவர்கள் எழுந்து நடப்பதை பார்க்கசந்தோஷமாக இருந்தது!மீண்டும் மீண்டும்,மீண்டும் மீண்டும் என என் கதைகளையே எல்லாமேடைகளிலும் பேசினேன்,ஆயிரக்கணக்கான மக்கள் கூடினார்கள், என்னுடைய கதையே என்னைMotivational பேச்சாளராக மாற்றியது!


ஒரு தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் மாற்றியது!என்னுடைய பாகிஸ்தானை கடந்துஉலகம் முழுவதும் என்னுடையகதை எல்லோருக்கும் தெரியஆரம்பித்தது!


எல்லோருக்கும் தன்னம்பிக்கையைஉருவாக்கியது!BBC ல் என்னை சிறப்புபேட்டி எடுத்தார்கள்!ஜநாவில் என்னை பேசஅழைத்தார்கள், அங்கேயும் என்கதையை பேசினேன்!


நிறைய இசை ஆல்பங்களை பாடிசேர்ந்து வெளியிட்டேன்,நிறைய எழுதினேன்!இவற்றை எல்லாம் எனக்குகொடுக்கவேண்டும் என்று கடவுள் நினைத்திருந்தால்பிறகு எப்படி என்னைகார் விபத்தில் சாக விடுவார்!

உனக்காக நிறைய வைத்திருக்கிறேன்மகளே, சீக்கிரம் எழுந்து வாஎன்று அவர் எனக்காககாத்திருந்ததாகத்தான் தோன்றுகிறது!


விபத்துக்கு பின்என்னுடைய உடம்போடும்வீல் சீரோடும் சேர்த்துUrinal bag ஒன்று எப்போதுமேபொருத்தப்பட்டிருக்கும்!எங்கு போனாலும் அது இல்லாமல்போகமுடியாது என்னுடையஉடல் பிரச்சனை அவ்வாறானது!சரி இருந்துவிட்டு போ என்றுஎன் சீட்டிற்கு பின்னாலேயேவைத்துக்கொண்டேன்!அது என் இழப்பின் குறியீடு!என்னை அது பின்தொடர்ந்துகொண்டு தான் இருக்கும்,ஆனால் ஒருபோதும் என்னைமுந்த முடியாது!


எனக்கான இறப்பு என்றோஒரு நாள் இருக்கும்,இருந்துவிட்டு போகட்டும்,அதற்கு முன் தன்னம்பிக்கையைஇழந்து நானே ஏன் சாகவேண்டும்!தோற்றுப்போனதாய் நினைத்துவிட்டாலேநான் செத்துவிட்டாதாய் அர்த்தம்,நான் சாக விரும்பவில்லை,நீங்களும் சாகாதீர்கள்!


தோற்றுப்போகும் போதெல்லாம்இந்த இஸ்லாமிய இரும்புப்பெண்முனீபா மசாரியை நினைத்துக்கொள்ளுங்கள்,வெற்றியின் கதவு உங்களின்விழி கூர்மை கண்டுதானாய் திறக்கும்!


Rate this content
Log in

More tamil story from anuradha nazeer

Similar tamil story from Action