Stella Mary MJ

Fantasy Others

4  

Stella Mary MJ

Fantasy Others

தோள் மேல் சின்ன பனித்துளி

தோள் மேல் சின்ன பனித்துளி

4 mins
211


தோள் மேல் சின்ன பனித்துளி!!


1)வானில் கார்மேகங்கள் சண்டையிட்டுக் கொள்ள வாணியோ காலையில் கைவலிக்க துவைத்த துணிகளை ஓடிச் சென்று எடுத்து வந்து அமரும் இருக்கைக்கு பக்கத்தில் போட்டாள் சின்ன தூறலோ சற்று பெரிதாக எடுக்க...என்ன? இன்னும் இந்த ராமுவை காணாம் காலைல போனவன் இன்னும் வரல அவர் போனப்பின் எல்லாம் வெறுமையே உறவுகள் அனைவரும் எங்க நம்ம மேல பாரம் ஏறப்போவுதுன்னு இதோ! நாளை வரேன் இன்று! மாலை வரேன் சொல்லிட்டு போனவங்க தான் இந்த மூன்று வருடம் இந்த பக்கமே தலை வைத்து படுக்கல போற வழி வரும்


2)வழியில் எங்காவது பார்த்தாலும் பார்த்தும் பார்காததுப் போல் செல்வதோ 

வெந்த புண்ணில் மேலும் எண்ணெயை ஊற்றுவதுப்போல் உள்ளதே அவர்கள் முன் வாழ்ந்து காட்டுவோம் என்று நினைத்தால் எங்க உடம்பு முடிய மாட்டுதே 

மீறி வேலை செய்து வந்தாலும் ராமுவின் வாலுத்தனமும் சேட்டையால் ஏற்படும் விரையமும் மேலும் பாடாய் படுத்துதே 

கீற்றில் இருந்து ஒழுகும் மழைத்துளியை வாலியில் நிரப்ப வாசல் ஓலையை நீக்கி விட்டு தொப்பரையா மழையில் நனைந்து

விட்டு திரு திரு முழிப்புடன் ராமு வந்து நிற்க!

அம்மா என்னடா சிங்கம் போல் கர்ஜிக்கும் குரலில் வாணி கேட்க 


3)அம்மா ம்ம் பசிக்குதும்மா இப்ப தான் அம்மா நினைப்பு வந்ததா ஏன்டா உனக்கு

ராமு பயத்தில் இரண்டடி பின்னுக்கு போக 

மழை இந்த அடி அடிக்குது அப்படி இருந்தும் வீடு வந்து சேராம? அப்படி என்னடா பண்ணிட்டு இருந்த? அவர் போனப்பவே நானும் போயிருந்தா இந்த வேதனை வந்து இருக்காதே தூணில் தலைசாய்ந்து ராமுவை பார்த்து தேம்பி தேம்பி அழுதாள் 

அம்மா அழாதமா அழாதமா தன் ஜில்லுன்னு கைகளால் கண்களை துடைக்க சற்று சாந்தம் ஆனது மனம் 


அம்மா பசிக்குதும்மா!

பக்கத்து வீட்டு அலமு பாட்டி கொடுத்த கார அரிசியில் முதல் முறையா சாதம் வடித்திருந்தாள் வாணி 


4)அம்மா? என்னடா 

இது என்ன சிவப்பு கலருல இருக்கு?

ஓ இதுவா கார அரிசிடா பக்கத்து வீட்ல அலமு பாட்டி அவங்க வயலில் வெலஞ்சதாம் 

நல்ல ருசி சாப்டு பாரு ராமு 

சரி மா!!

இரவு எட்டு மணிக்கு ராமு தோழன் ஜான் வந்து வாசலில் நிற்க வாணி பாத்து ஒரு சிரிப்பை பரிசாக அளித்து வா ஜான் உள்ள வா!

அவனும் பதிலுக்கு சிரிப்பை வழங்கி விட்டு உள்ள வந்தான் ஜான் 

ராமு இல்லையாமா?

உள்ள தான் பா இருக்கான்!

சரி மா அவன் அறையை நோக்கி இரண்டடி வைக்க வாணி மீண்டும் ஜான் 

என்று அழைக்க என்னம்மா ராமு சரியா 


5)படிக்கவே மாட்டுறான் எப்ப பார்த்தாலும் 

விளையாட்டு விளையாட்டுன்னு இருக்கான் நீ பொறுப்பா இருக்க இல்ல 

அதன் படி இருக்க சொல்லுப்பா நீயே படிப்பு ரொம்ப முக்கியம் என்று ம்ம் சொல்லுறேன் மா 

இதை கதவு மறைவில் இருந்து கேட்டுக்கொண்டு இருந்த ராமுவுக்கு ஒரே 

கடுப்பு 

வாடா ஜான் என்னடா விசயம் 

ஒண்ணும் இல்ல ராமு அறிவியல் வீட்டு பாட நோட்டு மாறி விட்டதுடா 

ஓ அப்படியா நான் பார்க்கவே இல்ல 

பள்ளி அறையில் மூடிய பையை இப்போ தான் திறந்து பார்த்தான் உள்ள அழகாக தங்க நிறத்தில் மின்னியது ஒரு பரிசு கோப்பை 

ஜான் பார்த்து என்னடா இது 


6) ஜான் கையில் எடுத்து காட்ட இதுவாடா? ஒரு போட்டியில் வென்றது 

ஜான்! அப்படியா?

ஆமா...

என்ன விளையாட்டு? ஓட்டப்பந்தயம் 

அப்படியா நல்லா ஓடுவியா? என்ன அப்படி கேட்டுட்ட இங்கப்பாரு என்று ஒரு 

மரப்பெட்டியை திறந்து காட்ட அதில் முழுவதும் கண்ணை பறித்தது பல பல வடிவில் பரிசு கோப்பை டேய் அருமைடா 

ராமுவின் கைகளை பிடித்துக்கொண்டு வாழ்த்துகள் வாழ்த்துகள் உன்னுள் இத்தனை திறமையா?

அம்மா... அம்மா.... அம்மா 

ராமு உடனே ஜான் வாயை மூட டேய் 

ஜான் அம்மாகிட்ட எல்லாம் சொல்லாதடா 

ஏன்டா அம்மாவுக்கு விளையாட்டு என்றாலே பிடிக்காதுடா படிப்பு மட்டும் 


7)தான் பிடிக்கும்

ஓ???

நான் விளையாடுவது தெரிந்தால் ஒரே சத்தம் போடுவாங்க ஜான் அப்படியா?

ஏன்டா இப்படி!

அவங்க அப்படி தான்டா?

சரி சரி நோட்டை கொடு நான் போய் பாடத்தை முடிக்கனும் இல்ல நாளை வெளிய அனுப்பிடுவாங்க 


இந்தா டா நன்றி ராமு!


டேய் ராமு நீ எழுதல! போடா இதெல்லாம் யாரு எழுதுவா அப்புறம் உன்னை வெளிய அனுப்பிடுவாங்க அனுப்பினா அனுப்பட்டும் ஒரு பெருமூச்சை ஜான் பதிலுக்கு தந்து விட்டு வெளிய வர 


8)வாணியிடம் போயிட்டு வரேன் மா சரிப்பா 

சொல்லிட்டியா?

சொல்லிட்டேன்மா ம்ம் வரேன் மா..... சரிப்பா 

காலையில் அம்மா கிட்ட போயிட்டு வரேன்

மா நல்லா படி ராமு படிப்பு தான் முக்கியம் ம்ம் என்றே பள்ளிக்கு சென்றான் ராமு 

வழக்கம் போல் பள்ளி முழுவதும் மாணவர்கள் கூட்டம் அலைமோதியது சிரிப்பும் சேட்டையும் அங்கங்கு எட்டிப்பார்க்க அழகோவியம் தான் 

தமிழ்தாய் வாழ்த்து தொடங்கி தேசிய கீதம் முடிய அனைவரும் திபுதிபுன்னு வகுப்புக்குள் நுழைய 

முதல் பாட வேளை அறிவியல் ஆசிரியர் வர காலை வணக்கம் அம்மா வணக்கம் வணக்கம் பள்ளியில் மிக பெருமையான 


9)விசயம் அனைவரும் தமிழில் தான் பேச வேண்டும் காலை மாலை வணக்கத்தை தமிழிலே சொல்ல வேண்டும் என்பதே!


அனைவரும் அமருங்க எல்லாரும் அமைதியா அமர என்ன வீட்டுப்பாடம் எல்லாம் எல்லாரும் முடிச்சாச்சா? முடிச்சாச்சி அம்மா அருமை அருமை 


சரி யார் யார் முடிக்கல?

ராமு எழுந்து நிற்க தெரியுமே நீ மட்டும் எந்த வேலையும் பொறுப்பா செய்ய மாட்ட போ வெளிய நாளை வரும் போது உன் அம்மாவை அழைத்து வா புரியுதா ம்ம் 

ராமு மண்டையை மட்டும் ஆட்டிட்டு வெளிய வர 

மறுநாள் காலை ராமு வாணியுடன் நிற்க 

கோகிலா ஆசிரியர் அருகில் வந்து 


10)உங்க பையன் நல்லவன் தான் ஆனா படிப்போ படு மோசம் ஏறவே மாட்டுதே என்ன சொன்னாலும் கேட்பது இல்ல பயிற்சி எதுவும் எழுதி வருவது இல்ல எதிலும் அவன் ஆர்வமா இருந்ததில்லை ஏன் தான் என்று எனக்கு புரியல இப்படியே போனா தோல்வி தான் தேர்வில் உங்க பையன் வாணி தோல்வி என்றதும் கண்கள் கோர்த்துக் கொண்டது நல்லா புத்தி மதி சொல்லுங்க அவன் நண்பன் ஜானை பாருங்க வகுப்பிலே முதல்ல வரான் இவன் என்னன்னா ???

இவனுள் ஏதோ பிரச்சனை இருக்கு என்னன்னு கேட்டு தீர்த்து வையுங்கள் சரிங்க அம்மா தன் சேலை நுனியால் விம்மலை அடக்கி கொண்டே வாணி வீட்டுக்கு கிளம்ப 

கண்ணீருடனே ராமு அம்மா அழாதேம்மா 


11)அழாதேம்மா போடா இனி என்னிடம் பேசாத போ..... போ...... 

அப்போ ஜான் வீட்டுக்குள் வர வீட்டில் ஒரே சத்தம் ராமிடம் வாணி சண்டைப்போட்டுக்கொண்டு இருக்க அம்மா என ஜான் அழைக்க யாருன்னு வாணி திரும்பி பார்த்தாள் என்னப்பா சற்று குரல் காட்டமா கேட்க ஏன்மா ராமுவை திட்டறீங்க நீயே பார்த்த இல்லப்பா அவனுக்கு ஒண்ணுமே வரல அவன் தென்டம் அப்படியெல்லாம் சொல்லாதீங்கமா அவன்.... அவன்... பின்னாடி இருந்து ராமு கைகாட்ட நீ இருடா என்ன? என்ன?

வாணி முழிக்க அவன் ஓட்டப்பந்தைய வீரன்மா வாணிக்கு ஒண்ணும் புரியல 

ஜான் உள்ளப்போய் அந்த மரப்பெட்டியை 


12)திறந்து வாணி முன் காட்ட கோபமும் ஆச்சிரியமும் கோபமும் ஆச்சிரியமும் மாறி மாறி முகத்தில் வர 

ஜான்னிடம் திரும்பி என்னப்பா இது?

ராமு போட்டியில் ஜெயித்தது!

அப்படியா?

ஆமா ஆமா...

எண்ணிடம் சொல்லவே இல்லையே!

உங்களுக்கு தான் விளையாட்டே பிடிக்காதேமா 

அதனால தான் ராமு சொல்லல!

ம்ம் அம்மா?

ஜான் மீண்டும் அழைக்க

என்னப்பா!

படிப்பு மட்டும் வாழ்க்கை இல்லம்மா 

எங்க அண்ணன் கூட எம் டெக் படிச்சி வேலை இல்லாமல் வீட்டில் தான் இருக்கான் 



13)அப்படியா? ஆமா மா 

இவனை ஊக்கப்படுத்தினா பெரிய ஆளா வருவான் படிப்பில் கம்மியா மதிப்பெண் வாங்கினாலும் விளையாட்டு கோட்டான்னு இருக்குமா அது பல வாய்ப்பை அள்ளித்தரும்மா அவனை விளையாட விடுங்கம்மா பின்னாடி பாருங்க ராமு எங்களை விட பெரிய ஆளா வருவான் என்று சொல்ல வாணி ஜானை கட்டிக்கொண்டு முத்த மழை பொழிய ராமுவோ ரோஜாவைப்போல் சிரித்தான் 

ராமு இனி நீ அதிகமா விளையாடனும் அதே நேரம் படிப்பையும் பொறுப்பா கவனித்து கொள்ளனும் சரியா 

சரிம்மா!

ஜான்! ரொம்ப நல்ல பிள்ளை மட்டும் இல்ல 

உனக்கு கிடைத்த நல்ல நண்பன் கூட 


14)அப்படியா மா அமைதியா ராமு நிற்க!


நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று

நீரினும் ஆரள வின்றே சாரல் 

கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு 

பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே 


பாடல் குறுந்தொகை

குறிஞ்சி 4 

எழுதியவர் தேவகுலத்தார் 


ஜான் ராமுவை பார்த்து பாட கண்ணீருடன் ராமு ஜானை ஆரத்தழுவிக்கொண்டான் 

எங்கும் கள்ளமில்லா நட்பு வாசம்!!


முற்றும்

ஸ்டெல்லாமேரி எம் ஜே 

புதுவை


Rate this content
Log in

Similar tamil story from Fantasy