தஞ்சாவூர்
தஞ்சாவூர்


தஞ்சாவூர்
நான் பிறந்த ஊர் தஞ்சாவூர் மிகவும் கோயில்கள் நிறைந்த ஊர் அடுத்து அடுத்து வீடுகளைப் போல மிக நெருக்கமாக பல கோயில்கள் கட்டப்பட்டு இருக்கும் சிறு வயது முதலே நான் எல்லா கோவில்களுக்கும் சென்று வரும் பழக்கம் அந்தப் பழக்கத்தினால் இன்றுவரை நான் பக்திமானாக கடவுள் ஈடுபாட்டில் மிகவும் நம்பிக்கை உடையவளாக இருக்கின்றேன் என் வீட்டின் அருகில் உள்ள ஹனுமார் கோவில் ஒன்று உண்டு மிகவும் சக்திவாய்ந்த அனுமார் கோவில் அது பாராயணம் நிறைந்து கொண்டே இருக்கும் மிகப்பெரிய சிலை ஒன்று உண்டுஅதையடுத்து நவநீதகிருஷ்ணன் கோவிலும் காமாக்ஷி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது சக்தி வாய்ந்தது பல ஜில்லாவில் இருந்தும் பல மாநிலங்களில் இருந்தும் மக்கள் த
ிரளாக கூடுவர்எத்தனை கோயில்கள் இருந்தாலும் தஞ்சை பெருவுடையார் கோவில் மிகவும் புகழ் வாய்ந்தது சரித்திரத்தில் இடம் பெற்றது ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது நானும் சிறு குழந்தையாய் இருக்கும்போது மார்கழி மாதம் தனுர் மாதத்தில் அதிகாலையிலேயே எல்லா கோவில்களுக்கும் செல்வோம் ஏனெனில் அப்போது 30 நாட்களும் காலை சுடச்சுட வகைவகையான பொங்கல் தருவார்கள் அதனால் என்வீட்டில் எல்லோருமே சென்று கியூவில் நின்றுபிரசாதங்கள் வாங்கி வருவோம் அதை இன்றுவரை மறக்கவே முடியாது வீட்டில் இன்று எத்தனையோ பட்சணங்கள் பலகாரங்கள் பொங்கல் எல்லாம் செய்தாலும் அந்த சிறு வயதில் கோவிலில் பெற்ற பிரசாதங்கள் இன்னும் மனதில் பசுமையாய் அழிக்க முடியாமல் அறியமுடியாமல் இனிமையாய் திகழ்கிறது