தமிழகம் இருந்திருக்காது.
தமிழகம் இருந்திருக்காது.
இன்று நாம் நாமாய் நம் மண்ணில் வாழ்வதற்குக் காரணமான நான்கு பெண்களை என்றும் மறவாது போற்றுதல் நம் கடன்.
1. ’கீதம் முன்பாடும் அம்மை’ என்று சேக்கிழார் பெருமான் சுட்டும் காரைக்கால் அம்மையான புனிதவதியார். தமிழில் பக்தியியக்கப் பதிகமரபுக்கு முன்னோடியாய் இவர் பாடியவை மூத்த திருப்பதிகம் என்றே வழங்கப்படும்.2. தம்முயிர் போயினும் பிறக்கப்போகும் மகன் மாமன்னனாய்த் திகழ வேண்டி, குறித்த நேரம் வரை காத்திருந்து ஈந்த பதுமவதி (பத்மாவதி). அவ்வண்ணமே தமிழகத்தின் இருண்டகாலத்தை முடிவுக்குக் கொணர பல மாடக்கோயில்களைக் கட்டியெழுப்பி நம் சமயம் காத்த கோச்செங்கட்சோழன் நாயன்மாரில் ஒருவரானார். ஆயினும் சைவ வைணவப் பிரிவுணர்வின்றி திருத்தொண்டு செய்தமையால் ‘மறந்தும் புறம் தொழா’ வைணவராலும் போற்றப்படுபவரானார்.
திருநறையூர், திருநாங்கூர் முதலான பல மாடக்கோயில்களை பெருமாளுக்கும் கட்டியவர். சைவக்குரவர் மட்டுமின்றி திருமங்கை ஆழ்வாரே நரத்துதியாய் இம்மன்னனை பத்து பாசுரங்களில் குறிப்பிட்டுப் பாடுகிறார்.3. ’தம்பியார் உளராக வேண்டும்’ என்று தாயும்தந்தையும் இறந்தபின்னர் தம் தம்பிக்காகவே துறவுக்கோலம் பூண்டு மருள்நீக்கி என்ற அந்தத் தம்பி தருமசேனன் என்று பெயரை மாற்றிக்கொண்டு மதம் மாறிப்போன பின்னும் விடாது மீட்டு அவரை ‘திருநாவுக்கரசர்’ என்ற அப்பர்பெருமானாக்கிய திலகவதியார்.4. இந்த மாநிலத்தின் இருள்நீக்கிட வந்த மாமணி இவர் என்றுணர்ந்து பாலறாவாயரான ஞானசம்பந்தப்பெருமானை மதுரைக்கு வரவழைத்து அங்கவர் நிகழ்த்திய அருளிச்செயல்களுக்குக் காரணமான வளவர்கோன் பாவை பாண்டிமாதேவி மங்கையர்க்கரசியார். கூன்பாண்டியன் நின்றசீர் நெடுமாறன் ஆனதும் இவராலேயே.
இவர்களின்றி இன்றும் தொல்மரபறாமல் எஞ்சியிருக்கும் தமிழகம் இருந்திருக்காது.
