anuradha nazeer

Action Classics Inspirational

4.0  

anuradha nazeer

Action Classics Inspirational

தியாகத்தின் மதிப்பு

தியாகத்தின் மதிப்பு

1 min
243


கேடட் அமித் ராஜ்  நாம் அனைவரும் நமது சமூகத்திற்கு மதிப்பு தராத குப்பை செய்திகளில் நேரத்தை வீணாக்கி கொண்டிருக்கிறோம்,

 கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி, சைனிக் பள்ளி புருலியாவைச் சேர்ந்த கேடட் அமித் ராஜ், தனது சொந்த ஊரான பீகாரில் உள்ள நாலந்தாவில் காலை 6 மணியளவில் ஜாகிங் செய்யும் போது, அக்கம்பக்கத்தில் மக்கள் கூச்சலிடுவதைக் கேட்டார். பக்கத்து வீட்டுக் குடியிருப்பில் தீப்பிடித்ததைக் கண்டு அவர் அங்கே சென்றார். இரண்டு முறை யோசிக்காமல் உள்ளே சிக்கிக்கொண்ட 3 குழந்தைகளை காப்பாற்ற வீட்டிற்குள் நுழைந்தார். அவர் முதல் இரண்டு குழந்தைகளை காப்பாற்றிய நேரத்தில் 85% தீக்காயங்களை சந்தித்தார், மூன்றாவது குழந்தையையும் காப்பாற்ற அவர் முடிவு செய்தார். ஆனால் மூன்றாவது குழந்தையயையும் காப்பாற்ற கூடிய நிலையில் அவர் இல்லை, காரணம் அவருக்கு 95% தீக்காயங்கள் ஏற்பட்டிருந்தன. இருந்தாலும் மூன்றாவது நபரைக் காப்பாற்ற அந்த வீட்டிற்குள் நுழைந்தார். அவரது முழு முயற்ச்சியால், மூன்று குழந்தைகளும் காப்பாற்றப்பட்டனர். ஆனால் அவரோ முழுவதும் எரிந்த நிலையில் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் டெல்லியின் சபதர்ஜாங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால் கடைசியில் 13 டிசம்பர் 2020 அன்று தனது உயிரை இழந்தார்.

 இந்த கதையை எந்தவொரு மீடியாவும் காட்டவில்லை.

 சமூக ஊடகங்களின் சக்தியைப் பயன்படுத்தி இந்த துணிச்சலான வீரனின் ஆன்மாவை தனித்தனியாக மதிப்போம். ஏனெனில் இது ஒரு புதிய இந்தியாவை உருவாக்கக்கூடிய தியாகத்தின் மதிப்புகளை ஊக்குவிக்க உதவும்.


Rate this content
Log in

Similar tamil story from Action