STORYMIRROR

Vadamalaisamy Lokanathan

Romance

5  

Vadamalaisamy Lokanathan

Romance

திரு விழா

திரு விழா

3 mins
459

திருவிழா


எல்லை பாதுகாப்பு படையில் வேலை செய்து கொண்டு இருந்தான் கந்தன்.அவன் சிறு வயதில் விளையாட்டு அதுவும் வீர விளையாட்டுகள் என்றால் அதிக ஈடுபாடு.குறிப்பாக ஜல்லிக்கட்டு.

ஒவ்வொரு வருடமும் அவனுடைய சொந்த ஊரில் நடக்கும் மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவார்கள்.அந்த ஊரு ஜனங்கள் நாட்டில் எங்கு இருந்தாலும் அந்த திருவிழாவிற்கு தவறாமல் வந்து விடுவார்கள்.கொரோனா காரணம் மூன்று வருடம் திருவிழா நடக்கவில்லை.இந்த வருடம் சிறப்பாக கொண்டாட போவதாக அவனுக்கு அவனுடைய அப்பா கார்மேகம் சொல்லி இருந்தார்.

தகவல் கிடைத்ததும் விடுமுறை கேட்டு வாங்கி கொண்டான்.

டெல்லியில் இருந்து மதுரைக்கு புறப்படும் ரெயிலில் இரண்டாவது தூங்கும் வசதி கொண்ட பெட்டியில் தன்னுடைய படுக்கை எண்ணை தேடி கண்டு பிடித்து அதில் தன்னுடைய உடைமைகளை வைத்து கொண்டு தன்னை ஆசுவாச படுத்தி கொண்டான்.அவசரமாக புறப்பட்டதால் சீருடை கூட மாற்ற முடியவில்லை.

இரயில் புறப்பட்டு நகர தொடங்கும் போது ஒரு இளம் பெண் ஓடி வந்து தான் கொண்டு வந்த பைகளை உள்ளே வீசி விட்டு அவசரமாக உள்ளே ஏறி வந்தாள்.பேண்ட் டீ ஷர்ட் அணிந்து இருந்தாள்.அந்த உடை அவளை கொஞ்சம் கவர்ச்சியாக தான் காண்பித்தது.கந்தனுடிய எதிர் இருக்கையில் தான் அவளுக்கு இடம் ஒதுக்க பட்டு இருந்தது.அப்புறம் பைகளை ஒழுங்கு செய்து இருக்கைக்கு அடியில் அடுக்கி வைத்து சங்கிலி போட்டு பூட்டி வைத்தாள்.அப்போது தான் கந்தன் சங்கிலி எடுத்து வர மறந்து போனது நினைவிற்கு வந்தது.அவளுடைய சிகை அலங்காரம் அவளை ஒரு போலீஸ் என்று காட்டியது.

அவளும் மதுரைக்கு பயணம் செய்கிறாள் என்று பக்கத்தில் இருந்த பெண்மணியிடம் சொல்லி கொண்டு இருந்தாள்.இரவு வந்தது.அவனும் தான் கொண்டு வந்து இருந்த சப்பாத்தியை சாப்பிட்டான்.அவள் அங்கு விற்பனை செய்த அசைவ உணவை வாங்கி சாப்பிட்டு தண்ணீர் குடித்து விட்டு படுக்க தயார் ஆனாள்.இருவருக்கும் மேலே தான் பெர்த்.அது தான் பகல் நேரமும் தூங்க வசதியாக இருக்கும் என்று அதை தேர்வு செய்து இருந்தான்.அவளும் அப்படி தான் தேர்வு செய்து இருக்க வேண்டும் என்று நினைத்து கொண்டான்.

இரவு பத்து மணி ஆன போது விளக்கை அணைத்து விடவா என்று அவள் கேட்க புத்தகம் படித்து கொண்டு இருந்தவன் அவளை பார்த்து சரி என்று தலையை ஆட்டினான்.இருவரும் உறங்கி போனார்கள்.அதிகாலை உறங்கி எழுந்து சீக்கிரம் காலை கடனை முடித்து விட்டு சிற்றுண்டி வருகிறதா என்று எதிர்பார்த்து காத்து இருந்தான்.அவளும் பல் துலக்கி முகம் கழுவி வந்து விட்டு,டீ க்காரன் வந்தானா என்று கேட்டாள்.இல்லையென்று தலையை ஆட்டி விட்டு வெளியில் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.அப்போது அவன் சாதாரண உடையில் இருப்பதை பார்த்து நீங்க இராணுவத்தில் வேலை செய்கிறீர்களா என்று விசாரித்தாள்.அவனும் பதில் சொல்லி விட்டு அவளை பற்றி கேட்க,டெல்லி போலீஸ் என்றாள்.

அவளுடைய பெயர் மகிதா என்று அறிமுக படுத்தி கொண்டாள்.

பகலில் இருவரும் படுக்கவும் உட்காரவும் செய்து கொண்டு நேரத்தை போக்கினார்கள்.பரஸ்பரம் எந்த ஊர் என்று தெரிந்து கொண்டார்கள்.ஜல்லிக்கட்டு விளையாட அவ்வளவு ஆர்வமா என்று கேட்க,அதற்கு அவன் ஆமாம்,அதுவும் இந்த வருடம் ஒரு முக்கிய நிகழ்வு இருக்கு. ஜல்லிக்கட்டில் வெற்றி பெறும் வீரனுக்கு தன் மகளை கட்டி வைப்பதாக ஒருவர் உறுதி கூறி இருக்கிறார்.ஒரு வேளை நான் வெற்றி பெற்றால் எனக்கு மணம் முடிக்க ஒரு பெண் கிடைப்பாள்.

இப்போதெல்லாம் ராணுவம் என்றால் யாரும் பெண் கொடுக்க தயக்கம் காட்டுகிறார்கள்,என்றான்.

அதற்கு அவள், ஓ அப்படியா இந்த முறை எனக்கும் அப்பா வரன் பார்ப்பதாக சொல்லி இருக்கிறார்.

எனக்கும் உங்களை போல ஒரு இராணுவ வீரனை மணக்க ஆசை தான்.ஆனால் அப்பா சொல்லை மீற முடியாது.இல்லையென்றால் இப்போதே தாலி கட்டுங்கள் என்று கூறி விடுவேன் என்று சொல்லி சிரித்தாள்.

அவனும் அவள் சிரிப்பில் மயங்கி தான் போனான்.

அடுத்த நாள் மதுரை வர இருவரும் இறங்கி தத்தம் ஊருக்கு சென்றனர்.

ஒரு வாரம் கழித்து கோவில் திருவிழா கடைசி நாள்.ஜல்லிக்கட்டு ஏற்பாடு பிரமாண்டமாக இருந்தது.

அதில் குறிப்பிட்ட ஒரு மாட்டை அடக்கினால் அவர் தன் பெண்ணை மணம் முடித்து தருவதாக சொல்லி இருந்தார்.அந்த போட்டியும் வந்தது,கந்தன் களத்தில் குதித்தான்.கடும் முயற்சியில் அந்த மாட்டை அவனால் அடக்க முடிந்தது.

வெற்றி பெற்ற அவனை பலரும் பாராட்டினார்கள்.ஆனால் அவனுக்கு என்னவோ ஏதாவது காரணம் சொல்லி பரிசு மட்டும் கொடுப்பார்கள்,பொண்ணை கொடுக்க மாட்டார்கள்,அதுவும் இந்த காலத்து பொண்ணு அவள் விருப்பம் இல்லாமல் திருமணம் செய்ய முன் வராத போது,இது ஒரு கண் துடைப்பாக இருக்கும் என்று தான் நினைத்தான்.

அப்போது ஒலி பெருக்கியில் அந்த மாட்டின் உரிமையாளர், வெற்றி பெற்ற வாலிபருக்கு தான் கொடுத்த வாக்கு படி தன்னுடைய பொண்ணு மாலை அணிவித்து பரிசும் வழங்குவார் என்று சொன்னார்.

ஆச்சரியத்துடன் மேடை ஏற அவனுக்கு மாலை அணிவிக்க தயாராக இருந்த பொண்ணை பார்த்து அவனுக்கு மயக்கம் வராத குறை தான்.அந்த பொண்ணுக்கு அவன் தான் கட்டிக்க போகிற வீரன் என்று இரட்டிப்பு மகிழ்ச்சி.

வெட்கத்துடன் தலையை குனிந்து கொண்டு மாலையை அவன் கழுத்தில் போட்டாள் மகிதா,

ஆம் ரெயிலில் பார்த்த டெல்லி போலீஸ் பொண்ணு மகிதா தான்.

அவனுக்கு இரட்டை பதவி உயர்வு கிடைத்தது போல இருந்தது.

விடுமுறை முடிந்து திரும்பும் போது அந்த ரெயிலில் இருவரும் கணவன் மனைவியாக புது வாழ்வை நோக்கி பயணித்து கொண்டு இருந்தனர்.

முற்றும்.


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil story from Romance