தாயுமானவன்
தாயுமானவன்
கதை 3
கார்த்திக்கும், நிலவும் காதலித்துக் கல்யாணம்செய்துகொண்டார்கள்.
பெற்றோருடைய எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டதால் தனியாக வசித்துவந்தனர்.
திருமண வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்தது.நான்கு வருடம் கழித்து நிலா கர்ப்பம்தரித்தாள். கார்த்திக்கும் நிலாவை நன்றாக பார்த்துக் கொண்டான்.
பேறுகாலம் நெருங்கியது. அவளுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தையின் எடை குறைவாக இருந்ததால் மருத்துவமனையிலேயே சில நாட்கள் நிலா தங்கி இருந்தாள். நிலா தனியாக இருந்ததால் கார்த்திக் வீட்டில் இருந்தே வேலை செய்தான். மருத்துவமனையில் நிலாவிற்கு உதவி செய்ய ஒரு பாட்டி இருந்தார்கள்.
பாட்டி வேறு வேலை நிமித்தமாக வெளியூர் சென்றதால் இவன் வேறு யாரையும் தேட முடியவில்லை. ஆதலால் இவன் வீட்டிலிருந்தே வேலை செய்தான். நிலாவிற்கு துணையாக அவள் தூங்கும் அறையினிலேஇவனும் தூங்கினான். நிலா எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவன் கேட்கவில்லை.. என் குழந்தையை கவனிப்பதில் என்ன கஷ்டம் ஆகப்போகிறது..குழந்தை நடு இரவில் அழுதால் இவன் தூங்கவைப்பான்..
மாதங்கள் உருண்டோடின.. குழந்தைக்கு யாழினி என்று பெயர் சூட்டினார்கள். குழந்தையை கண்ணும் கருத்துமாக பார்த்தான். யாழினி கூறிய முதல் வார்த்தை அப்பா.. அவன் சந்தோஷத்துக்கு அளவே இல்லை. தன்னுடைய தாய் மகளாக பிறந்து இருக்கின்றாள் என்று சந்தோஷம் உற்றான்..வேலை செய்கின்ற நேரம் தவிர்த்து அனைத்து நேரத்தையும் அவன் மகளுடைய செலவழித்தான்..குழந்தை மெல்ல அவன் கையை பிடித்து நடந்தாள்.
வருடம் ஒன்றாயிற்று. யாழினி பிறந்தநாள் அன்று நிலா அவனுக்குத் தெரியாமல் கார்த்திக்காக அவனுடைய பெற்றோர்களை அழைத்து இருந்தாள்..அவர்களும் சந்தோஷமாக பேத்தியை பார்க்க வந்திருந்தார்கள்.
கார்த்திக்குக்கு அளவற்ற சந்தோஷம். இரவின் நிழலில் நிலாவை அவளுடைய அறையில் யாழினி தூங்கிய பின்பு முத்தமிட்டான்.
நிலாவும் அவனை முத்தமிட்டு, உங்களில் ஒரு தாயுமானவனே பார்த்தேன்.தாயை நினைத்து வருந்துவீர்கள் என்று அழைத்தேன்.
கார்த்திக் திரும்பி யாழினி பார்த்தான்.. அவள் தூங்கிக் கொண்டிருந்தாள்.. அவளை நெற்றியில் முத்தமிட்டு, உன்னால் நான் தாயுமானவன் ஆனேன்...இந்த அறையில் எண்ணற்ற ஞாபகங்கள் உன்னோடு.
