STORYMIRROR

Selva m

Others

4  

Selva m

Others

தோழன்

தோழன்

1 min
223

நம் வாழ்க்கையில் நிறைய நபர்களை நாம் சந்தித்திருப்போம். சிலர் நமது வாழ்க்கையில் வந்து போவார்கள் சிலரோ நம் வாழ்க்கையின் அங்கம் ஆவார்கள்.. அப்படிப்பட்ட ஒருவன் பற்றிய தான் இந்த கதை..


    நான் பள்ளியில் படித்து கொண்டிருந்த போது விண்வெளி பற்றியும், அங்கு வேற்று கிரகவாசிகள் இருப்பார்கள் என்று படித்து உள்ளேன்.

      ஒரு நாள் நான் பள்ளியை விட்டு வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தபோது ஒரு வித்தியாசமான விமானத்தை கண்டேன். மாலை நேரம் என்பதால் என்னை தவிர வேறு யாரும் இல்லை.அந்த விமானத்தின் கதவு திறந்தே இருந்தது..நான் ஒடிச்சென்று என்ன என்று பார்த்தேன்.

     அங்கே வித்தியாசமான உருவத்தில் வேற்றுகிரகவாசி கண்டேன். நான் முதலில் அவனை கண்டதும் பயந்தேன். அவன் அசைவற்று கிடந்தான். எனது கைப்பையில் தண்ணீர் இருந்தது அதை அவர்மீதுதெளித்தேன்.அவனும் எழுந்தான்.அவன் யார் என்று விசாரித்தேன்.

      அவனது விமானம் தவறாக கதை தங்கியதாக கூறினான்.நான் உடனே அவனுக்கு உதவி செய்யத் துணிந்தேன்.எனது அப்பா உனக்கு உதவுவார் நீ என்னுடன் என் வீட்டுக்கு வா என்று அவனை அழைத்துச் சென்றேன்..போகும் வழியில் நாங்கள் இருவரும் எங்கள் விவரங்களை பரிமாறிக்கொண்டோம்...அவனும் நானும் நல்ல நண்பர்களானோம்..

       எனது அப்பாவும் அவனுக்கு உதவி செய்வதாக உறுதி அளித்தார் அவன் என்னுடன் சம்மதித்தான்.நாட்கள் உருண்டோடின.அவனின் வீட்டின் அங்கமாகவே மாறினான்.

    அவன் திரும்ப செல்வதற்கு சில நாள்ம் போதுதான் வழியில் எனது கைப்பையை திருடன் திருடிச்சென்று ஓடிவிட்டான்.. அவனை கண்டுபிடித்து மடக்கி காப்பாற்றினான் எனது தோழன்...

 அவனிடம் நான் எத்தனை தடவை நன்றி கூறினாலும் அது மிகையாகாது...

    அவன் என்னை பல சூழ்நிலையில் என்னை காப்பாற்றியுள்ளார்.உடன் அவன் திரும்பி சென்று விட்டான்த உடன் அவன் திரும்பி சென்று விட்டான்.. அவனை பிரிய மனமில்லாமல் பிரிந்தேன்.அவனுக்கும் இதே நிலை தான்.. நட்புக்கு மொழி, இனம், பார்ப்பதில்லை...அவன் என்னை பிரிந்து சென்றார்...#sm boss 


Rate this content
Log in