தாக்குதல்
தாக்குதல்


தாக்குதல் நடத்தியவர் ஆசியக் கண்டத்தைச் சேர்ந்தவர் என்றும், ஒல்லியான உடல்வாகு கொண்டவர் என்றும் தெரிவித்துள்ளனர். கல்வி உதவித் தொகை மூலம் படித்து வந்த ரேச்சல் வரும் மே மாதம் பட்டம் பெற இருந்தார். தனது செலவுகளுக்காக கனடாவிலேயே பகுதி நேரமாக பணிபுரிந்து கொண்டே அவர் படித்து வந்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
ரேச்சலின் தந்தை கூறியதாவது:- கடந்த வாரம் ரேச்சல் தமது சமூக ஊடக பக்கங்களிலிருந்து வெளியேற உள்ளதாக தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். எனது மகளிடம் அவரை டேட்டிங் செய்ய விரும்புவதாக கூறி, அதே பல்கலைக்கழகத்தில் படிக்கும் இந்தியாவை சேர்ந்த மாணவர் ஒருவர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாக எனது முதல் மகளிடம் சமீபத்தில் ரேச்சல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எனக்கு தெரியாது என்பதால், சமூக ஊடகங்களில் இருந்து வெளியேற உள்ளதாக ரேச்சல் என்னிடம் கூறியபோது அவர் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவதற்காக இவ்வாறு முடிவெடுத்திருக்கலாம் என்று நான் நினைத்தேன். படிப்பிற்காக தன் மகளை அயல்நாடு சென்று படிக்க வைத்தார் தந்தை ஆனால் என்ன நடந்தது ஐயோ பாவம் நாட்டில் கூட ஆர்வக்கோளாறு பெண்ணை படிக்க விடவில்லைகடைசியில் தந்தைக்கு கிடைத்ததோ அவளது சடலம் தான்