anuradha nazeer

Drama

5.0  

anuradha nazeer

Drama

ரசிகன்

ரசிகன்

1 min
645



அன்பு உலகை ஆளும்


கணவனுக்கு வீட்டில் காபி ஊற்றிக் கொடுத்தாள் மனைவி... உள்ளே

ஓர் எறும்பு கிடந்தது. அதைக்கண்ட கணவன் காபியை விடக் கொதிக்க ஆரம்பித்துவிட்டான். காபியை வீசினான்... விளைவு?

சண்டை ...

சந்தோசமானவீடு மூன்று நாள் துக்கவீடாக மாறிவிட்டது.



இதே சம்பவம் இன்னொரு வீட்டிலும் நடந்தது. அந்த வீட்டில் உள்ள கணவன் காபியில் செத்து மிதக்கும் எறும்பை எடுத்தான். அவன் மனைவியை அழைத்து மெதுவாகச் சொன்னான். "உன் காபிக்கு என்னை விடவும் தீவிர ரசிகன் இந்த எறும்புதான்.

உன் காபிக்காக உயிரையே கொடுத்து விட்டது பார். இது போல்

ரசிகர்களை வீணாய் இழந்து விடாதே."


மனைவி சிரித்தாள். தன்

தவறை உணர்ந்தாள்.

அதன்பிறகு அவர்கள் வீட்டு சர்க்கரையை கவனமாகப்

பாதுகாத்தாள். அதனால் காபியில் எறும்பு சாகவில்லை. அவர்கள்

வீட்டின் மகிழ்ச்சியும் சாகவில்லை .....


வாழ்க்கையை சந்தோஷமாக அமைத்துக் கொள்வதும்

சங்கடத்தில் முடிப்பதும் நாம் பிரச்சனைகளை எவ்வாறு

கையாள்கிறோம் என்பது மட்டுமே தீர்மானிக்கிறது.



நமக்கு மட்டும் தான் கோபம் வரும் எனவும்... நாம் தவறே

செய்யமாட்டோம் எனவும் நாம் நினைக்கக் கூடாது...

தவறுகளை நகைச்சுவையாகவோ அன்பாகவோ

சொல்லிப்பாருங்கள்.. அந்தத் தவறு மறுபடி நடக்காது...



ஆனால் காட்டுக் கத்தல் கத்தியோ அதிகாரமாகவோ தவறுகளை சுட்டிக்

காட்டினீர்கள் என்றால் அதை விட அதிகமான தவறுகள் நடக்கும்

என்பதை மறவாதீர்கள்!!


Rate this content
Log in

Similar tamil story from Drama