ராணி
ராணி


மூன்று வயது இருக்கும்போது ராணியை நான் தத்து எடுத்துக் கொண்டேன். என்ன அழகு. என்ன குறும்புத்தனம். என்ன அறிவு. மிகவும் புத்திசாலி .என்னை மிகவும் கவர்ந்தாள்.
ஏனெனில் என் நண்பன் என்னிடம் மன்றாடிக் கேட்டுக்கொண்டான்.
எனக்கு கேன்சர் இருக்கிறது. என்னால் நீண்டகாலம் உயிர்வாழ முடியாது .
எனவே ராணியை நான் கவனிக்க முடியாது. நீ ராணியை தத்து எடுத்துக் கொண்டால் அவளை ராணி போல் வைத்துக் கொள்ளலாம் என்று சொன்னான்.
அதை நம்பிய நானும் எடுத்துக் கொண்டேன்.
பிறகு நானும் அவனும் பிரிந்துவிட்டோம்.
சில வருடங்கள் கழித்து என் நண்பர் மூலம் ராணியின் அப்பா துரையை பற்றி விசாரித்தேன். துரை எப்படி இருக்கிறார் என்று கேட்டேன்.
அப்போது அவர் சொன்னார், அவனுக்கு என்ன ராஜா மாதிரி இருக்கிறான்.
புதிதாக மனைவி கட்டிக்கொண்டு இரண்டு பிள்ளைகள் பெற்றெடுத்த விட்டான்
துரை.
ராஜயோகம் தான் அவனுக்கு.
பாவம் நீ தான் என்று கூறினார்.
சற்றுத்தொலைவில் அம்மாவுடன் ராணிஅம்மாவுடன் பேசிக் கொண்டிருந்த ராணி கேட்டுவிட்டாள். ஆனால் பரந்த மனம் பாருங்கள் அவளுக்கு.
அவள் கூறுகிறாள் அம்மாவிடம், இதுபோன்ற அப்பா எனக்கு கிடைக்க நான் மிகவும் கொடுத்து இருக்க வேண்டும். அம்மா என்னை ராணி போல் வைத்திருக்கிறாரே. இப்படி ஒரு அப்பா, பெற்றெடுத்த அப்பா கூட என்னை இவ்வளவு கண்ணும் கருத்துமாக பார்த்திருக்க மாட்டார். நான் எது கேட்டாலும் இல்லை என்று என் வாழ்வில் அவர் சொன்னதே இல்லை என்று அவள் சொன்னபோது என் கண்களில் நீர் வந்தது. எப்படி இப்படி ஒரு மன்னிக்கும் குணம் இந்த சிறு பெண்ணிடம் வந்தது என்று நினைத்தபோது ஆச்சரியமாய் இருந்தது. ராணிக்கு இப்போது வயது 12. தெய்வ குழந்தை ராணி.