பத்தினித் தன்மை
பத்தினித் தன்மை


மீனாவும் ரமேஷும் புதிதாக கல்யாணமான புது தம்பதியினர். அழகோ அழகு.
இருவரும் புதிதாக ஒரு அப்பார்ட் மெண்டில் குடிபெயர்ந்தனர். 3 நாள் ஓடியதே தெரியவில்லை. நான்காம் நாள் ரமேஷ் அலுவலகத்திற்கு கிளம்பினார்.
மீனாவும் நாள் பூராக வீட்டை அலங்காரம் செய்வதில் ஈடுபட்டிருந்தார். இரவு ரமேஷுக்கு பிடித்தமான மெனுவை தானே தயார் செய்யும் பொருட்டு அடுப்படியில் வேலையாக இருந்தாள். ஆனால் நாள் பூராக ஒரு குழந்தை விடாமல் அழும் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது.
தனக்குத் தான் பிரமையா என்று சுற்றும் முற்றும் பார்த்தாள் .
ஆனால் சுற்றி ஒரு முகம் தெரியவில்லை. ஒரு மனிதர்களும் அங்கு வாழவில்லை.ஆனால் குழந்தை அழும் சத்தம் மட்டும் விடாமல் கேட்டுக் கொண்டே இருந்தது.
ரமேஷ் அலுவலகத்தில் இருந்து திரும்பி வந்தான்.
மாலை ஆயிற்று.
மீனா விடாப்பிடியாக ரமேஷிடம்கேட்டுக்கொண்டே இருந்தாள்.ஒரு குழந்தை விடாமல் அழும் சத்தம் கேட்கிறதே என்ன பத்தினித் தன்மை?
என்றாள்.
ரமேஷ் மழுப்பி பார்ப்பான்.
ஆனால்மீனா விடவில்லை.
உண்மையைச் சொல்லுங்கள்.
என் மீது சத்தியம் என்றாள்.
உயிருக்கு உயிராக நேசித்தான் ரமேஷ்.
வேறு வழியின்றி உண்மையை ஒப்புக் கொண்டான்.
5 வருடமாக நட்பாய் பழகிய ரமாவை மீனாவை கண்டதும் ஓரம் கட்டினான்.
ரமா வயிற்றில் 10மாத குழந்தை இருக்கிறது என்று எவ்வளவோ கெஞ்சி கதறி
அவன் அதை பொருட்படுத்தவில்லை . நீ எங்காவது போய் வாழ்ந்து கொள்.
நான் மீனாவை மனதார காதலிக்கிறேன். எங்கள் திருமண வாழ்க்கையில் குறுக்கிடாதே என்று கூறி விட்டான். அதனால் வேறு வழியில்லாமல் நிறை மாத கர்ப்பிணி விஷமருந்தி இறந்துவிட்டாள்.
அந்தக் குழந்தையின் ஆவிதான் சுற்றிக் கொண்டிருக்கிறது என்று ரமேஷ் ஒப்புக் கொண்டான்.உடனே மீனா போலீசுக்கு போன் பண்ணி ரமேஷ் பிடித்துக் கொடுத்து விட்டாள்.
இனி தனிமையில் நான் வாழ்ந்து கொள்கிறேன். நீங்கள் அந்தப் பெண்ணிற்கு இழைத்த துரோகத்திற்கு நானும் அனுபவிக்கிறேன்.
என்றாள்.
இதுதான்தமிழகப் பெண்களின் பத்தினித் தன்மை என்பது.
கணவன் செய்த குற்றத்தில் நமக்கும் பங்கு இருப்பதாக பாவித்தாள்.