பண்பாளன்
பண்பாளன்


பண்பாளன்
ஒரு ஊரில் ஒரு நல்ல இளகிய மனம்பண்பு நிறைந்த ஒரு வியாபாரி இருந்தார். .அவருக்கு சோதனையாக மகன்.
கெட்ட நண்பர்கள் சகவாசம்.
என்ன சொல்லியும் கேட்கவில்லை.
தந்தை மிகவும் மன உளைச்சல் பட்டார். ஒருநாள் ஒரு சாது அந்த வீட்டிற்கு வந்தார். எனவே வியாபாரி அந்த சாதுவிடம் தன் கஷ்டத்தை கூறி மிகவும் மனமுடைந்து பேசினார்.
உன் மகனை என் ஆசிரமத்திற்கு அனுப்பு என்றார்.
வியாபாரி அனுப்பிவைத்தார்.
ஆசிரமத்திற்கு வந்த மகனை சாது ரோஜா செடியில் இருந்து ஒரு ரோஜா பூவை பறிக்க சொன்னார்.
அந்த மகனும் ரோஜா பூவை பறித்துக் கொண்டு வந்தான் .
உடனே அவர் இந்த ரோஜாவை நுகர்ந்து
பார் என்றார்.
சம் எப்படி இருக்கிறது என்றால்
மிக அருமையாக இருக்கிறது.
உடனே அருகில் உள்ள ஒரு அரிசி சாக்கு மூட்டையை காட்டி அதன் மேல் ரோஜாப்பூவை சற்று நேரம் வைக்கச் சொன்னார்.
அவனும் அப்படியே செய்தான்.
சற்று நேரம் கழித்து ரோஜாவை நுகர்ந்து பார்த்து மனம் மாறாமல் அப்படியே இருக்கிறது என்று கூறினான்.
பிறகு ஒரு நல்ல சாக்கு மூட்டையை காட்டி அதன் மீது ரோஜாப்பூவை சற்றுநேரம்
வைத்து இரு என்றார்.
அவனும் அப்படியே செய்தான்.
பிறகு அதை எடுத்து முகர்ந்து பார் என்றார். ரோஜாவின் மனம் மாறாமல் அப்படியே இருக்கிறது என்று கூறினான்.
அப்போது அந்த சாது சொன்னார் இந்த ரோஜா பூவை போல் நீயும் என்றும் மனம் மாறாமல் உன் நல்ல குணத்துடன் இருக்கவேண்டும்.
சகவாச தோஷத்தால் எல்லாம் உன் மனம் மாற கூடாது என்று கூறினார். அப்போது ரோஜா மணம் எப்படி மாறவே இல்லை. நீயும் அப்படி தான் யார் உன் குணம் என்ன? என்று புரிந்துகொண்டு யாருடன் சேர்ந்தாலும் உன் தன்னை மாறாமல் ரோஜாவை போல் இருக்க வேண்டும் என்றார்.பையன் சாது விற்கு நன்றி கூறி விடைபெற்றுச் சென்றான்.
அப்பா போலவே பண்பாளன் ஆக மாறி விட்டான்.