STORYMIRROR

anuradha nazeer

Abstract Inspirational

4  

anuradha nazeer

Abstract Inspirational

பக்குவம்

பக்குவம்

1 min
686

ஒருநாள் அப்பாவும், மகளும் பேசிக்கொண்டு இருந்தார்கள்.  

மகள் பெயர் ஜானகி.  ராமை  காதலிப்பதாக அவள் கூறினாள்.

 உடனே அப்பா அவன் எந்த ஜாதி, என்ன படித்திருக்கிறான், எங்கு வேலை பார்க்கிறான் என்று சரமாரியாக கேள்விகள் கேட்டார்கள்.


 அதற்கு ஜானகி பதில் கொடுத்தாள். அப்போது அவர் என்னமா நம்ம ஜாதியில் எத்தனையோ பையன் இருக்கும்போது நீ வேறு ஜாதியில் கல்யாணம் கட்ட நினைக்கிறாயே! இது சரியா? தவறா? நீயே சொல் ?

 நீ கை நிறைய சம்பாதிக்கும் ஒரு தனித்திறமை வாய்ந்தவள். 

நீ எடுக்கும் முடிவு சரியாகத்தான் இருக்கும் சொல் என்றார்.

அப்போது அவள் அப்பா மேஜையின் மீது சூடாக பொங்கல் வைத்திருக்கிறேன். சாப்பிடுங்கள் அப்பா என்றாள். 


அதற்கு ஜானகியின் அப்பா 

எனக்குத்தான் பொங்கல் பிடிக்காது அம்மா. நீ ஏன் பொங்கல் வைத்தாய்? 

 அப்பா வீட்டில் அனைவருக்கும் பொங்கல் மிகவும் பிடிக்கும்.

 பொங்கலை சாப்பிட்டு பாருங்கள், பிடித்தால் சாப்பிடுங்கள்.


 இல்லாவிடில் வைத்து விடுங்களேன். இதில் என்ன குற்றம் என்று கேட்டாள்.

சரி சரி நீ சொல்வதும் ஒரு விதத்தில் சரிதான் சாப்பிட்டு பார்க்கிறேன் என்று வாயில் வைத்தவர் ,ஆஹா பொங்கல் பிரமாதம் என்று அள்ளி அள்ளி சாப்பிட்டார்.

என்ன ஒரு வாசனை !


அற்புதமாக இருக்கிறதே என்று அப்பா இதுபோல் நான் பார்த்த மாப்பிள்ளையும் ராம் நான்  கூப்பிட்டு வருகிறேன்.    அவரிடம்     பேசிப் பாருங்கள்.

அவரை பிடித்து இருந்தால் எனக்கு கல்யாணம் கட்டிக் கொடுங்கள். இல்லாவிட்டால் வேறு மாப்பிள்ளை பாருங்கள் .

அதற்கு நான் உடன்படுகிறேன்.


அப்பாவும் சரி அம்மா.

நாளையே ராம்  ஐ கூப்பிட்டு வா என்று கூறினார்.

இதற்குப் பெயர் தான் பக்குவம்.

பக்குவமாக எந்த ஒரு விஷயத்தையும் அடுத்தவருக்கு எடுத்துச் சொல்லி அவர்கள் மனதில் பதிய வைக்கலாம்.


Rate this content
Log in

Similar tamil story from Abstract