பிஸ்மில்லாஹ்
பிஸ்மில்லாஹ்


சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை:
(அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது)
இந்த சம்பவம் ஒரு சவூதி இளைஞனுடையது. வாழ்க்கையில் அவனுக்கு நிம்மதி இல்லை. அவனது சம்பளம் வெறும் நான்காயிரம் ரியால் மட்டுமே! கல்யாணமானவனாக இருந்ததால் வீட்டுச் செலவு சம்பளத்தை விட அதிகமாகவே இருந்தது.
மாத முடியும் முன்பே சம்பளம் முழுவதும் செலவாகி கடன் வாங்கும் நிலையில் இருப்பான்.
இப்படியே கடன் வாங்கி, வாங்கி கடன் என்னும் புதைமணலில் சிக்கித் தவித்தான். அவன் தனது வாழ்க்கை இப்படியாகத் தான் செல்லும் என முடிவுச் செய்து விட்டான்.
அவனது மனைவியும் தங்களது பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டிருந்தும் கடன் சுமையால் மூச்சு திணறிக் கொண்டிருந்தனர்.
ஒரு நாள் அவன் தனது நண்பர்களிடத்தில் இருக்கும் போது ஆலோசனை கூறத்தக்க நண்பரும் இருந்தார். இந்த நண்பரின் ஆலோசனைகளுக்கு மரியாதை கொடுப்பான்.
பேச்சுவாக்கில் தனது பொருளாதாரக் கஷ்டத்தை தெரிவித்தான். கதையைக் கேட்டு சம்பளப் பணத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையினை சதகாவாக கொடுக்கும் பழக்கத்தினை ஏற்படுத்திக் கொள்ளும்படி ஆலோசனை வழங்கினார்.
சவூதி இளைஞன் வியப்பும் திகைப்பும் மேலிட "ஐயா, வீட்டுச் செலவிற்கே சம்பளப் பணம் பற்றாமல் கடன் வாங்க வேண்டிய நிலையில் இருக்க சதாகா கொடுப்பதற்கு யோசனை கூறுகிறீர்களே?" என வினவினான்.
பிறகு வீட்டிற்கு வந்து மனைவியிடம் அவரது ஆலோசனையைப் பற்றி கூற, அவளோ இதனையும் பரீட்ச்சித்து பார்க்கலாமே? இறைவன் ரிஜ்க்கின் கதவினை திறந்துவிட வாய்ப்பு ஏற்படும் என்றாள்.
மாதா மாதம் 4 ஆயிரம் ரியாலிலிருந்து 30 ரியால் சதகாவக வழங்க உறுதிபூண்டு மாதக் கடைசியில் சதகா வழங்க ஆரம்பித்தான்.
சுப்ஹானல்லாஹ்!
அவனது நிலைமையே மாறிவிட்டது என்பதனை சத்தியமிட்டு கூறுகிறேன்.
எப்போதும் பொருளாதார நெருக்கடியும் கவலையும் எங்கே? தற்போதைய நிம்மதியான நிலைமை எங்கே? சின்னஞ்சிறு பொறுத்துக் கொள்ளக்கூடிய கடன் சுமையைத் தவிர. விடுதலை கிடைத்த நிம்மதியோடு வாழ்க்கையும் பூங்காவனமாக உணர்ந்தான்.
சில மாதங்களுக்குப் பின் தனது குடும்ப வாழ்க்கையை முறைபடுத்தி, சம்பளப் பணத்தினை வகைப்படுத்தி முறையாக செலவு செய்ய, இதில் முன் எப்போதும் கிடைக்காத பரக்கத் கிடைக்கத் தொடங்கியது!ا
இந்த வருமானத்தில் நான் எனது கடன் சுமையிலிருந்து வெகு விரைவில் மீண்டுவிடுவேன் என தெரிந்துக் கொண்டான்.
அல்லாஹுத்தாலா எனது வருமானத்திற்கான மற்றொரு கதவை திறக்கச் செய்தான்
இறைவன் மீது சத்தியமாக சதகாவின் பலன் என்னவென்பதை யாரும் அறியமாட்டார்கள், அதனை செயல்படுத்தி பார்த்தவர்களைத் தவிர!
சதகா செய்யுங்கள், ஸபர் என்னும் பொறுமையை கடைபிடியுங்கள், அல்லாஹ்வின் கிருபையும் அருளும் மழையாக பொழிவதை கண்கூடாக பார்ப்பீர்கள்!