STORYMIRROR

anuradha nazeer

Drama

4.6  

anuradha nazeer

Drama

பிரார்த்தனை

பிரார்த்தனை

3 mins
11.2K


அமெரிக்காவில் ஒரு பிரபல டாக்டர் .அவருக்கு ஒரு பெரிய விருது. சிகாகோ நகரில் தரப்பட இருந்தது. அவரும் தனது ஊரிலிருந்து விமானத்தில் காலை 10 மணிக்கே கிளம்பினார். விழா மாலைநான்கு மணிக்குத்தான்.ஆனால் இவர் புறப்பட்ட நேரமோ என்னமோ கடும்புயல் கடும்மழை .என்னது விமான ஓட்டி புறப்பட்ட சிறிது நேரத்துக்கெல்லாம் தரையில் இறக்கி விட்டார். டாக்டருக்கு சிகாகோ செல்லவேண்டும் என்ற கவலை. எனவே அங்கிருந்த விமான ஒட்டி இடம் கேட்டார்.

இங்கிருந்து டாக்ஸியில் செல்வதானால் எத்தனை மணி நேரம் ஆகும் சிகாகோ செல்ல என்று கேட்டார் ?அதற்கு அவரும் குறைந்த பட்சம் 4 மணி நேரம் ஆகும். இப்போதே மணி ஒன்றாகிவிட்டது என்றார். நான் வேண்டுமானால் உங்களுக்கு ஒரு டாக்ஸிஅமைத்து தருகிறேன் என்றார். சொன்னபடியே ஒரு டாக்ஸி அமர்த்திக் கொடுத்தார். ஏறிய டாக்டருக்கும் டாக்சி எங்கே செல்கிறது என்றே புரியவில்லை. டாக்ஸி ஓட்டுநர் சொல்கிறார் .ஐயா கடுமையான மழை ,புயல் காரணமாக வண்டியை ஓட்ட முடியவில்லை.இருளும் படர்ந்து வருகிறது. என்றார். எனவே எங்காவது வெளிச்சம் தெரிகிறதா அங்கே போய் சற்று இளைப்பாறலாம் என்று டாக்டர் விரும்பினார்.அதன்படி அருகே வெளிச்சம் தெரிந்த ஒரு வீட்டிற்கு காரை ஓட்டிச் சென்றார்.காரில் இருந்தபடியே ஓட்டுநர் ஐயா நீங்கள் வீட்டிற்குள் சென்று சற்று ஓய்வெடுங்கள். நான் இங்கு காரையும் காருக்குள் இருக்கும் சாமான்களையும் பார்த்துக்கொள்கிறேன் என்றார். டாக்டரும் அந்த வீட்டிற்குள் சென்றார் .அங்கு ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி மிகுந்த அன்புடன் உபசாரம் செய்தார் .ஐயா தாங்கள் மிகவும் நனைந்து விட்டீர்கள். இந்தாருங்கள் துண்டு நன்கு துடைத்துக் கொள்ளுங்கள்.வேறு மாற்று துணி தருகிறேன் .மாற்றிக் கொள்கிறீர்களா என்று அந்தப் பெண்மணி கேட்டாள்? டாக்டர் வேண்டாம் என்று மறுத்துவிட்டார்.

டாக்டர் வேண்டாம் அம்மா தானாக காய்ந்துவிடும் என்றார்

அந்த அன்பே உருவான அம்மா சூடாக டீ போட்டு தருகிறேன் .அத்துடன் சிறிது பிஸ்கட்டும் எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். டாக்டர் சரி அம்மா நான் மிகவும் டென்ஷனாக இருக்கிறேன். தாருங்கள் அம்மா என்று வாங்கி டீ அருந்தி பிஸ்கட் சாப்பிட்டார். பிறகு அந்தத் தாயும் இரவு உணவு சமைத்துத் தருகிறேன் .சாப்பிட்டு விட்டு நீங்கள் காலை செல்லலாம் உங்கள் அனைவருக்கும் நான் உணவளிக்கிறான்.ஆனால்

சற்று நேரம் பொறுமையாக காத்திருங்கள். நான்இறைவனிடம் பிரார்த்தனை செய்து வருகிறேன் என்று கூறினாள். விடாமல் அரை மணி நேரம் இயேசுவிடம் ஜெபம் செய்து கொண்டு இருந்தாள். டாக்டரும் அந்த அம்மா என்னதான் செய்கிறாள் பார்க்கலாம் என்று உள்ளே சென்றார் .அந்த அம்மையாரும் இயேசுவின் முன் மண்டியிட்டு அமர்ந்து கண்களில் தாரையாக நீர் வடிய வடிய மனமுருக பிரார்த்தனை செய்து கொண்டு .இருந்தாள்.

அவளுக்கு முன் ஒரு சிறிய கட்டிலில் 10 வயது மதிக்கத்தக்க சிறுவன் படுத்து இருந்தான். சற்று நேரத்தில் ஜெபம் முடிந்து வந்த அந்த அம்மாவிடம் டாக்டர் கேட்டார் .அம்மா யார் இந்த பையன்? கட்டிலில் படுத்து இருப்பது என்று கேட்டார்.

உடனே அந்தத் தாய் இது என் மகன். டாக்டரும் அவனுக்கு என்ன நோய் ? நீங்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வில்லையா ?என்று கேட்டார் ?அதற்கு அந்த அம்மாள் அவருக்கு கேன்சர்.இங்கு உள்ள மருத்துவர்கள் கையை விரித்து விட்டார்கள்.அமெரிக்காவில் ஒரு நிபுணர் இருக்கிறாராம். அவர் பெயர்மார்கன்.அவரை விட்டால் வேறு வழி கிடையாது.

அவரிடம் சென்று காட்டினால் தான் உன் மகன் பிழைப்பான்.

என்று கூறிவிட்டார்கள் .அவரிடம் செல்வதற்கு எனக்கு பணம் இல்லை எப்படி செல்வது? எவ்வாறு செல்வது ?என்று எல்லாம் எனக்கு தெரியவில்லை .அதனால் ஆண்டவனிடம் என் குழந்தையை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாகவே ஒப்படைத்துவிட்டேன். தினமும் மனமுருக பிரார்த்தனை செய்கிறேன் என்று அந்த அம்மாள் கூறினாள்.

டாக்டர் கதறிவிட்டார்.

அவருக்கு உண்மையான இறை பிரார்த்தனையின் மகிமை புரிந்தது. .உடனே கதறிய அவர் அந்த அம்மாவிடம் நீங்கள் கூறிய அந்த டாக்டர் நான் தான் .உங்களது பிரார்த்தனையின் பலனாக எங்கிருந்தோ என்னை இங்கு உங்களை சந்திக்க வைத்து வியாதியை குணப்படுத்த இறைவன் செய்திருக்கும் ஏற்பாடு இது என்றார். மறுநாளே தனக்கும் அந்த அம்மாவிற்கும் அந்த மகனுக்கும் விமானபயணத்திற்கான ஏற்பாடுகளை செய்து அமெரிக்காவில் தன் மருத்துவமனையிலேயே சகலவித மருத்துவ பரிசோதனைகள் செய்து அவனை குணப்படுத்தினார்.எல்லாவித சிகிச்சையும் தானே முன்னின்று நடத்தி வைத்தார். எந்த இறைவனிடமும் பிரார்த்தனை செய்யலாம். அது இயேசு ஆகட்டும் இந்துமதக் கடவுள் ஆகட்டும் அல்லாஹ் ஆகட்டும்

பிரார்த்தனைக்கு என்று ஒரு தனி சிறப்பு பலன் இருக்கிறது.



Rate this content
Log in

Similar tamil story from Drama