பெண்
பெண்


ஒரு அழகான பெண் பார்க்கில் விளையாடிக் கொண்டு இருந்தாள்.
அப்போது அவளுடன் ஒரு பையனும் விளையாடிக் கொண்டிருந்தான்.
சற்று நேரம்
விளையாடிக் கொண்டிருந்தனர்.
பின்பு அவர்கள் பிரிந்து விட்டனர்.
அப்போது அந்த பையனின் புகைப்படம் புதர் அருகே விழுந்துவிட்டது.
அதை எடுத்து அவள் தன் பர்சில் வைத்துக் கொண்டாள்.
நாட்கள் சென்றன .
அவளும் அதை மறந்து விட்டாள்.
பிறகு அவளுக்கு திருமணம் ஆயிற்று.
ஒரு நாள் அவள் கணவன் அந்த புகைப்படத்தை பார்த்து இதில் இருப்பவன் யார் என்று கேட்டான்?
அதற்கு அவள் இது என் முதல் காதலன் என்றாள்.
அப்போது சிரித்துக்கொண்டே அவள் கணவன் சொன்னான்.
இதை நான் பத்து வயதாக இருக்கும்போது தொலைத்தது என்றான்.