STORYMIRROR

siva meenakshi

Romance Tragedy

4  

siva meenakshi

Romance Tragedy

பேச நேரமில்லையாம்

பேச நேரமில்லையாம்

2 mins
166

  1.  கரையோரத்தில் ஒரு பெண் தனியே அழுது அலையிடம் தன் மன புலம்பலை எடுத்துரைக்கும் கதை இது....

     தவறவிட்ட நேரத்திற்கு நேரமின்மை என ஒரு வரியில் பதிலளித்து விட்டு செல்கின்றனர்...

காதல் ஜோடிகள் காதலித்த போது நேரம் பார்க்காமல் பேசிய காலம் இன்று ஒரு நிமிடம் பேச கூட வார்த்தைகள் கிடைக்கவில்லை.ஏன் பேசவில்லை என அந்த பெண் கேட்டாள் வேலை பரபரப்பு நான் ஒன்றும் சும்மா இருந்து கொண்டு உன்னிடம் பேசாமல் இருப்பதில்லை எனக்கு வேலை இருக்கிறது என ஒற்றை வரியில் விடை கூறி விட்டு செல்கிறான்..அவள் சில நேரங்களில் கோபத்தை எடுத்துரைக்கிறாள் சில நேரத்தில் விட்டு கொட்த்து செல்கிறாள்...


யாருக்கு என்ன பாவம் செய்த பாவி அவளோ...😏வீட்டில் அவளும் வேலை தானே செய்கிறாள் ஆனால் அழைப்போ ,குறுஞ்செய்தி அவனிடம் வந்தாலோ அடுப்பில் இருப்பது கருகிவிடும் என்ற எண்ணம் சிறிதும் அற்றவளாய் அழைப்பை எடுத்து பதிலளிக்கிறாள்...மாறாக அவள் நானும் வேலையில் பிஸி என எடுத்துரைப்பதில்லையே...காலையிலிருந்து வேலை செய்கிறாள் சாப்பிட்டியா மா னு ஆசையா கேட்க கூட நேரமில்லை அவனுக்கு...தாய் அன்பு ,தந்தை அன்பு,உடன்பிறந்தவன் அன்பு அத்தனைக்கும் அப்பாற்பட்டு அவன் அன்பு ஏதோ ஒரு வகையில் ஈர்க்கப்பட்டு காதலில் தொலைந்தவள்....


ஒன்றை நினைவில் வைத்து கொள்ளுங்கள் ஒரு ஆணின் துன்பத்திற்கு பெண் மருந்தாக இருப்பாள் கோபத்தை காட்டினால் இரண்டு நொடிகளில் மறந்து விட்டு மீண்டும் உன்னை தான் தேடுவாள் ...ஆகவே அவள் தேடலுக்காக உங்கள் நேரத்தை செலவிடுங்கள்...இல்லத்தில் நேரத்தை வீணாக்கினால் இதயங்கள் சேராது!


இன்றைய உறவும் நாளை விலகும் நேரத்தால்! நேரம் வெறும் நேரம் அல்ல உன் நினைவின் சுவடு...நீ பேசாத நேரம் எல்லாம் தனியாக பேசிக்கொண்டுஎனோ நானும் இங்கு பைத்தியம் ஆகி போனேன்………கடிகார முள் போல உன்னை சுற்றி ஓடு கொண்டிருக்கிறேன் அதற்கு கூட பேட்டரி தீர்ந்து விடுதலை உண்டு நான் கொண்ட ஆசை என்னும் முள்ளுக்கு ஓய்வில்லை ராசா...நீ என்னோடு பேசிவிட்டுப் போன நாட்களில் எனக்கு உன் நினைவு வருவதில்லை.


என்னோடு பேசாத நாட்களில்உன்னைத் தவிர வேறு நினைவு வருவதில்லை.ஒரு நாளில் ஒரு முறை உனை பார்த்துவிட்டால் என் உறக்கத்தில் நீ வருவதில்லை.உன்னை பார்க்காமல் போனால் எனக்கு உறக்கமே வருவதில்லை...நேரமில்லை என்று கூறுகிறாயே ஆனால் அவள் உன்னை நினைத்து நித்தம் நித்திரையும் தொலைத்தவள் ஆகிறாய்...


கரை ஓரத்தில் கண்ணீருடன் நிற்கிறேன் அலைகள் வந்து ஆசையாக என்னை தழுவி அவன் வரும் வரை உன்னோடு அவன் நினைவு (அலை)யாய் நான் இருக்கிறேன் என ஆறுதல் சொல்லி சென்றது.....


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil story from Romance