anuradha nazeer

Abstract Drama

4.8  

anuradha nazeer

Abstract Drama

பாட்டின்னா அவ்ளோ பிரியம்

பாட்டின்னா அவ்ளோ பிரியம்

2 mins
23.4K


அம்மாவேதான் எப்பவும் நம்மைப் பார்த்துக்கணுமா... நாங்க பார்த்துக்குறோம் எங்கம்மாவை!

கொரோனாவால கிட்டகூட வர்றதில்ல... எங்கம்மா சூப்பர்உமன்!" - அனுபவம் பகிறும் செவிலியர், மருத்துவரின் குழந்தைகள்


உங்க அம்மாவை உங்களுக்கு ஏன் ரொம்பப் பிடிக்கும்?


எனச் சிலரிடம் கேட்டோம். எல்லா பதில்களின் சாராம்சமும் ஒன்றாகத்தான் இருந்தன...  


`எங்க அம்மா எங்களுக்காக எவ்ளோ கஷ்டப்படுறாங்க தெரியுமா!'


இவர்கள் எல்லோரும் சொல்லும் அம்மாக்கள், காலை எழுவதிலிருந்து இரவு தூங்கப்போகும்வரை பிள்ளைக்களுக்காக மட்டுமே, பிள்ளைகளைச் சுற்றி மட்டுமே இயங்குபவர்கள். ஆனால் இந்த ரெகுலர் `அம்மா சென்டிமென்ட்களுக்கு' அப்பாற்பட்டு செயல்படும் அம்மாக்களும் இங்கே இருக்கிறார்கள்தானே?

வீடு, குடும்பம், பிள்ளைகள் என்பதைத் தாண்டி சமூகத்துக்காக அதிக நேரம் உழைக்கும் அப்படியான அம்மாக்களை நாம் அறிவோம்.

குழந்தைகள் மீதும் குடும்பத்தின் மீதும் எவ்வளவுதான் பாசம் இருந்தாலும், வேலை என்று வந்துவிட்டால் களத்துக்கு ஓடவேண்டிய பொறுப்புகளில் இருக்கும் ஓர் அம்மாவின் பிள்ளையிடம், `உங்க அம்மாவை உங்களுக்கு ஏன் ரொம்பப் பிடிக்கும்' என அதே கேள்வியைக் கேட்டோம். வித்தியாசமான பதில் கிடைத்தது.


அந்த அம்மா, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் முதல்வர் ஜெயந்தி. அவரின் மகனும், எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தின் எலும்பியல் துறையின் துணைப்பேராசிரியரும், மருத்துவருமான ஶ்ரீஜெய் சொல்கிறார்...

எங்க அம்மாவை ரொம்பப் பிடிச்சுப்போக, அவங்களோட சமூகப் பொறுப்பும் நேர மேலாண்மையும்தான் காரணம். என்ன சூழல் வந்தாலும், எவ்வளவு பெரிய மருத்துவ அவசரம் வந்தாலும், கொஞ்சம்கூட தாமதிக்காமல் யோசிக்காமல் மருத்துவமனைக்குக் கிளம்பிடுவாங்க. அந்த வகையில, சொல்லப்போனா எல்லா நேரமும் அம்மா மருத்துவராதான் இருப்பாங்க. அதனாலேயே சின்ன வயசுல, அம்மாவோட நேரம் செலவிட ரொம்ப ஏங்கியிருக்கேன்.


சில நாள்களெல்லாம் `மருத்துவமனையே வீடு, சேவையே வாழ்க்கை'ன்னு அம்மா இருந்துடுவாங்க. அப்போவெல்லாம் அம்மாவை ரொம்ப மிஸ் பண்ணுவேன். ஆனால்...

எல்லாத்தையுமே புரிஞ்சுக்க சில காலம் ஆகும்ல... அப்படித்தான் அம்மாவைப் புரிஞ்சுக்க எனக்கும் கொஞ்சம் காலம் ஆனது! புரிஞ்சுக்கிட்ட பிறகு, அம்மாவுக்காக நான் மாறிக்க ஆரம்பிச்சுட்டேன். உதாரணத்துக்கு, எமெர்ஜென்சி சூழல்னா, அம்மாவோட டென்ஷன் புரிஞ்சு, அன்னைக்கு அவங்களுக்கு முழு ஓய்வு கொடுத்திடுவேன். வீணாகத் தொந்தரவு செய்யமாட்டேன். என்னுடைய வேலைகளை நானே செய்துகொள்ள கொஞ்சம் கொஞ்சமாகக் கத்துக்கிட்டேன். வீடுங்கிறது, எந்தச் சூழல்லயும் அம்மாவுக்கு கஷ்டமாகிடக்கூடாது என்பதில் கவனமா இருந்தேன். இந்த விஷயத்துல, அப்பா எனக்கு சப்போர்ட்!


எவ்வளவுதான் அம்மாவை மிஸ் பண்ணினாலும், அம்மாமேல கோபமெல்லாம் வராது. மிஸ் பண்ணும்போது, `அம்மா எல்லாரையும் கவனிச்சுக்குறாங்க. அம்மாவை நாமதான் கவனிச்சுக்கணும்'னு மனசுல நினைச்சுக்குவேன்.

இந்தக் கொரோனா காலத்திலும், சூழலைப் புரிஞ்சுக்கிட்டு வீட்ல எல்லோரும் அம்மாவை நல்லா கவனிச்சுக்கிறோம். பிற நோய்த்தொற்று நேரங்கள்ல, வீட்டு வேலைகள்ல இருந்துதான் அம்மாவுக்கு ஓய்வு கொடுப்போம். ஆனா இந்தக் கொரோனா காலத்துல, உடலளவுல மட்டுமல்லாம மனசளவுலயும் அம்மாவுக்கு ஓய்வு கொடுத்திருக்கோம். வீட்ல என்ன நடக்குது, நாங்கயெல்லாம் என்ன செய்றோம்னு எல்லாம் அம்மாவுக்கு இப்போதைக்கு எதுவும் தெரியாது.


எத்தனையோ தொற்றுநோய் பாதிப்புக் காலகட்டங்கள்ல அம்மா களத்துல இருந்திருக்காங்கன்னாலும், இன்றைய சூழ்நிலை ரொம்பவே வேறுபட்டுத் தெரியுது. அதுக்கு ரெண்டு முக்கியமான காரணங்கள் இருக்கு. ஒன்று, அம்மா சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் முதல்வரா பொறுப்பேத்துகிட்ட பிறகு, இவ்வளவு பெரிய ஒரு பிரச்னையை முதன்முறையா கையாள்றாங்க. மருத்துவப் பொறுப்பைத் தாண்டி, ஒருங்கிணைப்புப் பணி, மேற்பார்வைப் பணினு எல்லாம் அம்மாவை சோர்வாக்கிடுது. இரண்டு,


தொற்றுப் பரவல் அச்சம் காரணமா வீட்டிலும் அம்மா எங்ககிட்டயிருந்து சமூக இடைவெளியோடு இருக்க வேண்டியதா இருக்கு.

என்னோட ஒரு வயசு மகளுக்கு, பாட்டின்னா அவ்ளோ பிரியம்.


Rate this content
Log in

Similar tamil story from Abstract