பாத்திமா
பாத்திமா


பாத்திமா ஆந்திராவை சேர்ந்தவர்.அவர் வீட்டின் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாப்பில் இருப்பவன் இப்ராகிம். இருவருக்கும் நீண்ட நாட்களாக காதல். பாத்திமா அறியா கல்லூரி மாணவி .அவளுக்கு வயது 19.இப்ராஹிம் தான் அவள் விலாசம் என்று வாழ்ந்தாள் . வீட்டில் யாருக்கும் தன் காதலைப் பற்றி தெரிவிக்கவே இல்லை.பாத்திமா வீட்டில் அவளுக்கு ரொம்பவே செல்லம். அவள் கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்தார்கள். அவளை ஒரு மகாராணி போலவே வளர்த்தார்கள். ஒருநாள் பாத்திமாவுக்குஇப்ராஹிம் ஏற்கனவே திருமணம் ஆனவன் .அவனுக்கு பிள்ளை குட்டிகள் ஏற்கனவே இருக்கிறது என்பது தெரியவந்தது.அதை அந்தப் பிஞ்சு உள்ளத்தால் தாங்க முடியவில்லை.அன்று மாலையே இப்ராஹீமை பார்த்து என்னை ஏன் ஏமாற்றினாய்? ஏமாற்றி வஞ்சக வலையில் விழ வைத்தா ய் ?
உனக்கு திருமணம் ஆனது பற்றி என்னிடம் ஏன் முன்பே கூறவில்லை என்று அழுது அரற்றினாள்.இருவருக்கும் வாய்த்தகராறு.அன்று மாலை வீட்டிற்கு
போனவ ள் இரவில் தூக்கு மாட்டி இறந்து விட்டாள்.என்ன பைத்தியக்காரத்தனம்! கல்யாணம் ஆகி மனைவி குழந்தைகளுடன் சந்தோஷமாக இப்ராகிம் வாழ்ந்து வருகிறான் .கல்யாணமாகாத பாத்திமாவை ஏமாற்றி காதல் வயப்படுத்திவிட்டான். தண்டனை மட்டும் பாத்திமாவிற்கு .