ஒரு தலை காதல்
ஒரு தலை காதல்


அப்பா அம்மாவிற்கு ஒரே செல்ல செல்ல மகளாக வளர்ந்தவள் நிவேதா. உடன்பிறப்புக்கள் ஒருவரும் இல்லாத காரணத்தினாலோ என்னவோ அவள் தாய் தந்தை அவளுக்கு அதிக செல்லம் கொடுத்து வளர்த்தனர் .அவள் எது கேட்டாலும் அதற்கு மறுப்பு கிடையாது. அவள் என்ன சொன்னாலும் பெற்றோர்கள் தன் குழந்தையை செல்லமாக வளர்க்கிறேன் என்றுஅதற்கு ஓகேதான்.
இந்தக் காலத்தில் பெற்றோர் செய்யும் தவறு. மிக ஆபத்தான குழந்தைகளை செல்லமாக வளர்க்கிறேன் என்று எதற்குமே மறுப்பு சொல்லாமல் அது என்ன கேட்டாலும் ஓகே என்ன செய்தாலும் ஓகே என்று அந்தக் குழந்தையை பாராட்டுவது ஒன்றுதான் தனது கடமை என்று நினைத்து வளர்க்கின்றனர். இதுவே பிற்காலத்தில் குழந்தைக்கு ஆபத்தாக முடிகின்றது.கிராமத்தில் பிறந்து வளர்ந்த பட்டணத்தில் சென்று உயர் படிப்பு படிக்கணும் என்று பெற்றோரிடம் கேட்கிறாள். அவள் மறுப்பு சொல்லாமல் சென்னையில் விடுதியில் சேர்த்து விடுகின்றனர்.
மாணவி ஒருதலைப்பட்சமாக வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த வாலிபர் மாணவியின் காதலுக்கு மறுப்பு தெரிவித்து உள்ளார். இதனால் நிவேதா கடுமையான மனஉளைச்சலில் இருந்துள்ளார். இதன் காரணமாக தான் மாணவி விடுதியில் தனியாக இருந்த நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பெற்றோரின் அதிகப்படியான செல்லம் முரண்டு பிடிக்கும் தன்மையை அதிகரித்து விடுகிறது இதற்கு பெற்றோர்கள் விட்டுக் கொடுக்கலாம் ஆனால் மற்றவர்கள் விட்டுக் கொடுப்பார்கள் யோசிக்கணும். மற்றவர்கள் விட்டுக் கொடுப்பார்களா சற்று யோசிக்க வேண்டும்