ஒரு ரவுண்ட்
ஒரு ரவுண்ட்


என் மகன் அடிக்கடி எங்களை ஹோட்டலுக்கு அழைத்துச் செல்வான்.
அம்மா நீங்கள் உழைத்த வரைக்கும்
போதும் .
இப்போ ரிட்டயர் ஆயாச்சு.
வீட்டுல ஹாயா இருக்கணும் .
அதான் இந்த காலத்துல எந்த மகன் அந்த மாதிரி வந்து சொல்லுவான். எனக்கு வெளியில ஹோட்டலில் சாப்பிடப் பிடிக்காது.
ஆனால் என் பையனுக்கு வெளியில சுத்தறது ஹோட்டலில் சாப்பிடுவது ரொம்ப பிடிக்கும்.
அவனும் இந்த சின்ன வயசுல சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான், பாலி என பல நாடுகளுக்கும் சுற்றி வந்துட்டான்.
இந்தியா ஒரு ரவுண்ட் அடித்து முடித்துவிட்டார்.
இந்தியாவை நன்கு சுற்றி விட்டான். ஒவ்வொரு மாநிலங்களுக்கும் பல முறை சுற்றி விட்டான்.
வேறு என்ன வேண்டும்.
உலகம் சுற்றும் வாலிபன்.
இவனுக்கு வெளிநாட்டைச் சுற்ற பிடிக்கும் ஆனால் அங்கு வெளிநாட்டில் வசிக்க பிடிக்காது.
வாழ்க்கையில யாருக்கும் அப்படி பணத்தை செலவு பண்றதுக்கு மனசு வராது.
ஆனா என் மகனுக்கு சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமே வந்தது கிடையாது.
வாழ்க்கையிலே இருக்கும் வரை நன்றாக அனுபவித்து விட்டு சந்தோஷமாக போய் சேர வேண்டும் என்பதுதான் அவனது எண்ணம்.
எப்பொழுது ஹோட்டலுக்கு சென்றாலும் அங்கு மேஜை பணியாளுக்கு மனமார அள்ளிக் கொடுப்பான்.
மினிமம் 200 ரூபாயாவது டிப்ஸ் கொடுப்பான்.
பலருக்கு அள்ளி அள்ளி கொடுப்பான்.
ஏழைகளுக்கு அள்ளி கொடுப்பான்.
காரில் சென்று கொண்டிருக்கும் போது ஜன்னல் வழியாக பிச்சைக்காரர்கள், முதியோர்கள், சிறுவர், சிறுமியர்களுக்கு பணத்தை அள்ளிக் கொடுப்பான்.
என்னடா பணத்தை அள்ளி கொடுக்கிறாய் என்று என நான் கேட்டபோது
அம்மா இந்த 200 ரூபாய் கொடுப்பதனால் நீ ஏழையாக போவது இல்லை.
அவன் அண்ணா நகரில் பங்களா கட்ட போவதும் இல்லை என்று கூறுவான். நெற்றிப்பொட்டில் சுளீரென்று அடித்தது போல் இருக்கும்.