ஒரு மாசத்துக்கு உடம்புல எனர்ஜி
ஒரு மாசத்துக்கு உடம்புல எனர்ஜி


கரோனா காலத்தில் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொள்ளவே அஞ்சும் நிலையில் தூய்மைப் பணியாளர்களுக்கு இப்படியொரு சேவை, அதுவும் இலவசமாகச் செய்ய முன்வந்தது ஏன் என்ற கேள்வியோடு கிழக்கு கடற்கரைச் சாலையில் ஆதி அந்தம் சிகிச்சை மையம் வைத்திருக்கும் செ.பாஸ்கரிடம் பேசினேன்.
“துப்புரவுப் பணியாளர்கள்தான் அதிகம் உழைக்கிறாங்க. காலைல 4 மணிக்கு எந்திரிச்சு ராத்திரி பத்துமணிக்கு படுக்கிறாங்க. இவங்க வேலை பூராவும் நின்னுகிட்டே செய்யணும். அதால காலில் ரத்தம் ஓட்டம் கொறைஞ்சுபோய் பாதவலி, குதிகால்வலி, பாத எரிச்சல், மன அழுத்தம் உட்பட ஏராளமாக பிரச்சினைகள் வரும்.
உடம்பு ரொம்ப சோர்ந்துடும். நாம கத்துக்கிட்ட கலைய இந்தப் பேரிடர் காலத்துல அதை எதிர்த்துப் போராடுற இவங்களப் போன்றவர்களுக்க
ு பயன்படுத்தணும்னு நினைச்சுத்தான் இதைச் செய்றேன். சிகிச்சை எடுத்துக்கிறவங்க ரொம்ப சந்தோசமா ஆயிடுறாங்க. உடலில் எந்த பாகத்துல பிரச்சினை இருந்தாலும் பாதத்துல தெரிஞ்சுடும். உடம்போட ரெண்டாவது இதயம் பாதம். இதன் மூலமாவே பெரும்பாலான பிரச்சினைகளை சரி செஞ்சுடலாம். அதத்தான் அந்த தொழிலாளர்களுக்கு செய்யுறேன். போலீஸ்காரங்களும் இதேபோலத்தான் கஷ்டப்படறாங்க. அதனால அவங்களுக்கும் இந்த சிகிச்சைய செய்றேன்.
ஒருநாள் இவங்களுக்கு, அடுத்த நாள் அவங்களுக்கு. ஒருநாளைக்கு 15 பேருக்குத்தான் சிகிச்சையளிக்க முடியுது. தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் இந்த சிகிச்சையை செஞ்சுடணும்கிறதுதான் இப்போதைய செயல்திட்டம். ஒருமுறை செஞ்சுட்டா ஒரு மாசத்துக்கு உடம்புல எனர்ஜி அப்படியே இருக்கும்” என்கிறார் பாஸ்கர்.