anuradha nazeer

Fantasy

5.0  

anuradha nazeer

Fantasy

நளன்தமயந்தி

நளன்தமயந்தி

3 mins
650


என்னதான் பகடை ஆட்டத்தினால் தன் ராஜ்யத்தை இழந்தான் ஆனாலும் தன் நேர்மையான குணத்தினாலும் மன உறுதியாலும் பின் அனைத்தையும் அடைந்தான்.

நிடத நாட்டு அரசன். வீர சேனா.

மிகவும் நல்ல மன்னன்.

அவர் மகன் நளன்.


விதர்ப்ப நாடு அருகே உள்ள நாடு.

விதர்ப்ப மன்னன் மகள் தமயந்தி.

நளன் பற்றி கேள்விப் பட்ட. தமயந்தி அவனை மணக்க விரும்பினாள்.

தமயந்தியின் தந்தை சுயம்வரம் நடத்தினார்.

அனைத்து தேவர்கள், மன்னர்கள், நளனும் கூட கலந்து கொண்டனர். ஆனால் சனிபகவானுக்கு அழைப்பு விடப். படவில்லை .

அதனால் கோபம் கொண்ட சனி அனைத்து தேவர்களையும் மன்னர்களையும் நளன் போல உருமாற செய்தார்.

தமயந்தி மனம் வருந்தி சிவபெருமானை தியானித்து கண்களை மூடிக். கொண்டு. சிவபெருமான் தயவால் உண்மையான

நள னுக்கு. மாலையிட்டாள் .

சனிபகவானுக்கு ஒரே கோபம் .

ஆனாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை .

நேர்மையும். பக்தியும் உறுதியும் கொண்ட மாமன்னன் தவறு எப்போது செய்வான் என்று காத்திருந்தார் .

ஒருநாள் தமயந்தி இடம். நளன் மன்னன் புஷ்கரன் என்னை அழைத்துள்ளார் .

சில நாட்கள் சென்று வருகிறேன் என்று கிளம்பினார்.

தமயந்தியும் அவன் உங்கள் எதிரி .

எதற்காக அங்கு செல்கிறீர்கள்? என்றாள்

இல்லை இப்போது அவர் மாறி விட்டார் என்றான் .

அவன்மிகவும் அன்புடையவன் நல்லவன் போல் வேஷம் போட்டான்.

நாட்டை பறிக்க. சூழ்ச்சி அது.

பின் நளனுக்கு விருந்து ஏற்பாடு செய்தான் .

நாமிருவரும் விளையாடலாம் என்று கூறினான்.

வேண்டுமென்றே நளனை ஜெயிக்க வைத்தார்.

நளன். உனக்குபகடையாட்டம் தெரியாது என்று கூறினாயே? எல்லாவற்றிலும் நீயே ஜெயி கிறாயே.

ஏதும் வைத்து ஆடுவோம் என்றான்

முதலில் குதிரைகளை வைத்து ஆடினா ன்.

அதிலும் ஜெயிக்க விட்டால் பின்பு யானைகளை வைத்து ஆடினால் அதிலும் நளனை ஜெயிக்க வைத்தார்.

பிறகு தங்கம் வைரத்தை வைத்து ஆடினான்.

புட்கரன் அதிலும் தோற்றுப் போனது போல் பாவனை செய்து நளனை

ஜெயிக்க வைத்தான்.

கடைசியாக எல்லாவற்றையும் உன்னிடம் நான் இறந்து விட்டேன்

நாடு மட்டும்தான் பாக்கி இருக்கிறது

இருவரும் நாட்டை வைத்து விளையாடலாம் என்று நளனை

வலையில் சிக்க வைத்தான்.

நல்ல மாயவலையில். நளனை சிக்க வைத்து ,

கொடிய எண்ணங்கள் கொண்ட புட்கரன் நளனை வென்று ஈவிரக்கமின்றி மறு வினாடியே உன் மனைவியை அழைத்துக்கொண்டு என் நாட்டைவிட்டு வெளியேறு என்று கட்டளையிட்டான்.


நளன் மனைவி தமயந்தி உடன் அரண்மனையை விட்டு காட்டுக்குள் சென்று வசிக்கலானார்.

தன்னுடைய அறிவான. கணவனுக்கு ஏன் இந்த மாற்றங்கள் எல்லாம் திடீரென நடக்கிறது என்று புரிந்து கொள்ள முடியவில்லை.

இப்படி சனிபகவான் . தான் இவைகளுக்கெல்லாம் காரணம் என்பது இருவருக்குமே தெரியவில்லை .

மற்றும். இருவருமே அன்பு. கொண்டு. நடந்து சென்று அங்கே கிடைத்த உலர்ந்த பழங்களை உண்டனர் .

அவர்களின் ஆடம்பரம் காணாமல் போனது.

தன் மனைவி மேலும் துன்பப் படுவது விருப்பமில்லை.

ஒருநாள் தமயந்தி தூங்கிக் கொண்டிருந்தபோது அவளைத் தனியே விட்டு விட்டு சென்றுவிட்டான் நளன்.

சனியின் ஆதிக்கம். கொண்டிருந்த அவன் செயல்களை கட்டுப்படுத்த முடியவில்லை.

துன்பங்கள் முழுவதையும் மறைத்துக் கொண்டிருந்ததால் காடு மலைகளை எல்லாம் சுற்றித் திரிந்து கொண்டிருந்தான்.

அவனுடைய கடந்த காலத்திற்கு திரும்ப முடியவில்லை .

தன்னுடைய அவரால் மறக்கவே முடியவில்லை .

புஷ்கரன். செய்த நம்பிக்கைத் துரோகத்தையும் அவனால் மறக்கவே முடியவில்லை.

ஒரு நாள்சனி பகவான் கார்கோடகன் என்றபாம்பின் உருவெடுத்து நளனை தீண்டினான்

நளன் உடனே விகாரமாக மாறி கருநீல நிறமாக மாறினான்.


என்ன பாவம் செய்தேனோ என்று தமயந்தி நளனை காணாமல்

நெருப்பில். ,அனல். மேலிட்ட புழுபோல துடித்தாள்

துவண்டாள் அழுதாள் கண்ணீர் விட்டாள்.

ஆனால் இனி அவனை யாராலும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாது.

வேறு வழியின்றி அண்டை நாட்டுக்கு தன்னை அடையாளம் காட்டாமல் பணிப்பெண்ணாக வேலை செய்தாள். தமயந்தி.

சிவ பெருமானை பக்தியுடன் பிரார்த்தித்தாள்.

அரண்மனையில் சமையல்காரராக வேலை செய்தான். நளன்.

சுவை மிகுந்த உணவுகளை செய்த தன் மூலம் தலைமை சமையல்காரனாக பதவி உயர்த்தப்பட்டார்.

ஏழரை ஆண்டுகாலம். முடிவடையும் நேரம் வந்த போது சிவபெருமான் சனியை கூப்பிட்டு நீ ஆட்டுவித்தது போதும் அவனை விட்டு விலகி இனியும் தமயந்தி நளனை தொந்தரவு செய்யாதே என்றார்.

சனியும் நானும் முயற்சித்தேன் .

ஆனால் முடியவில்லை .அவன் நேர்மையான குணமும் பண்பும்அவனை சிறப்பாக செயல்பட வைக்கிறது. ஆனால் எனக்கு அவனை பழைய நிலைக்கு மாற்ற முடியாது என்று சனி கூறினான்.

சிவனும் நான் பார்த்துக் கொள்கிறேன் நீ போய்விடு என்றான்.

சனியும் போய்விட்டது.


ஒருநாள் நளன் கனவில் சிவபெருமான் தோன்றி தெற்குப் புறத்தில் உள்ள ஒரு தடாகத்தில். மூழ்கி எழுந்தால் உன் பழைய உருவை பெறுவாய்.

திருநள்ளாறு தடாகத்தை வந்து அடைந்தான்.

தடாகத்தில் மூழ்கி எழுந்தான்

தடாகத்தில் மூழ்கி எழுந்ததும் தன் பழைய நிலையை அடைந்தான்

எதிரே தமயந்தி வந்தாள்.

இருவரும் சந்தோஷம் அடைந்தனர்.

இருவரும் சிவபெருமானை போற்றி வணங்கினர் .பிறகு நாட்டிற்குச் சென்றுசென்றனர் .

அவனது அரச சபைக்கு எல்லா தேவர்களும் வந்து வாழ்த்தினர் .

எல்லாம் சனியின் சோதனை தான் உன்னை சோதித்து பார்த்து சனிபகவான் ஒன்றும் பண்ணமுடியவில்லை, தன் தோல்வியை ஒப்புக் கொண்டார் என சிவபெருமான் கூறினார்.

அனைத்தும் தமயந்தியின் நற்பண்பு சிறப்பு என்று கூறினார் . பிறகு நளன் பல்லாண்டுகாலம் நல்ல ஆட்சியை கொடுத்தனர்


Rate this content
Log in

Similar tamil story from Fantasy