நின்று பார்த்து விட்டு தான்
நின்று பார்த்து விட்டு தான்
இப்படம் வெளிவந்த காலத்தில் தினசரி 3 காட்சி மட்டும் தான். இது 5ilver Jubile படம். மேட்னிக்கு டிக்கட் கிடைக்கவில்லை என்றார் ரசிகர் கூட்டம்.அப்படியே வரிசையில் போலிசாரால் நிற்க வைத்து 1st Show & 11nd Show நின்று பார்த்து விட்டு தான் போவார்கள். இதுவரை 100 தடவை தியேட்டர்களில் பார்க்கபட்ட படம்.சண்டை காட்சிகளுக்காகவும், பாடல்களுக்காகவும் சிறப்பாக ஓடிய திரை காவியம். மாட்டுக்கார வேலன்.. மற்ற மொழிகளில் சுமாராகத்தான் ஓடியது. ஆனால் தமிழில் வெள்ளி விழா படங்களாக ஓடியது ....... யாழ்ப்பாணம் ராணியில் கொடிகட்டிய படம்.. சாமான்யனா பொறந்து.
நாட்ல ஒரு சரித்திரமே படச்சுட்டானம்மா.. "மாட்டுக்கார வேலன்"...(கன்னட ராஜ்குமார் நடித்த 'எம்மே தம்மண்ணா" படத்தின் ரீமேக்) ....மாட்டுக்கார M.G.R ன் மாடுகள் லட்சுமியின் காரை சூழ்ந்து கொள்கின்றன. இதில் ஏற்பட்ட தகராறில் M.G.R லட்சுமியை அடித்து விடுகிறார். ஆத்திரத்தோடு அழுத படி வீட்டிற்கு வரும் லட்சுமி தனது தந்தை அசோகனிடம் இது பற்றி முறையிட அவர் மாட்டுக்கார M.G.R கொலை செய்ய அடியாட்களை ஏவி விடுகிறார். இதில் M.G.R ன் குடிசைக்கு தீ வைக்கப்படுகிறது. தீயில் சிக்கி கொள்ளும் M.G.R ஐ லட்சுமியின் அண்ணன் சோ காப்பாற்றுகிறார். வேட்டி சட்டை & குடுமியோடு இருக்கும் மாட்டுக்கார M.G.R ன் தோற்றத்தையும் சோ மாற்றியமைக்கிறார்.
வக்கீலான M.G.R பிரபல வக்கீலான V.K ராமசாமியை காண ரயிலில் புறப்பட்டு வருகிறார். தனது மகள் ஜெயலலிதாவை வக்கீல் M.G.R க்கு மணம் செய்து வைக்க V.K ராமசாமி & S.வரலட்சுமி தம்பதியர் ஆசைப்படுகின்றனர். இதற்கிடையே V.K ராமசாமியிடம் அசோகன் மீது வழக்குதொடுக்க வரும் மாட்டுக்கார M.G.R ஐ உருவ ஒற்றுமை காரணமாக வக்கீல் M.G.R என்று V.K ராமசாமி குடும்பத்தினர் தவறாக நினைத்து அவரை விழுந்து விழுந்து உபசரிக்கின்றனர். ஜெ.வும் மாட்டுக்கார M.G.R டம் மனதை பறிகொடுக்கிறார். ரயிலில் வந்திறங்கும் வக்கீல் M.G.R ஐ அசோகனின் அடியாட்கள் கடத்தி சென்று நையப்புடைக்கிறார்கள்.
அவர்களிடமிருந்து தப்பி V.K ராமசாமி வீட்டிற்கு வரும் வக்கீல் தன்னை போலவே இருக்கும் மாட்டுக்காரனை பார்த்து அதிசயித்து போகிறார். நடந்ததை புரிந்து கொள்ளும் வக்கீல் மாட்டுக்காரனோடு V.K.ராமசாமி வீட்டிலேயே தங்குகிறார். அங்கே இருவருக்கும் பல்வேறு கஷ்டங்களை எதிர்கொள்கின்றனர். ஒரு நாள் உண்மை தெரிய வர மாட்டுக்காரனை V.K ராமசாமி வீட்டை விட்டே அடித்து துரத்தி விடுகிறார். இதற்கிடையே வக்கீல் M.G.R லட்சுமியிடையே காதல் பிறக்கிறது. ஒரு நாள் தனது அப்பா சபாபதியை கொலை செய்தது லட்சுமியின் தகப்பனாரான அசோகன்தான் என்பதை வக்கீல் M.G.R. V.K ராமசாமி மூலம் தெரிந்து கொள்கிறார்.
கொந்தளித்து போகும் M.G.R அசோகனை தேடிப்போக அங்கே அவர் சிறை வைக்கப்படுகிறார். கொலைக்கான ஆதாரங்கள் தன்னிடமிருப்பதாக கூறி அசோகனின் கோட்டைக்குள் நுழையும் V.K ராமசாமியும் துப்பாக்கி முனையில் அசோகனால் மிரட்டப்படுகிறார். இப்படியான நெருக்கடியான சூழ்நிலையில் உள்ளே நுழையும் மாட்டுக்கார M.G.R போலி துப்பாக்கியால் V.K ராமசாமியை சுட்டு நாடாகமாடி அவரை காப்பாற்றுகிறார். தன்னை ஆபத்திலிருந்து சாமர்த்தியமாக காப்பாற்றிய மாட்டுக்கார M.G.R மீது V.K ராமசாமிக்கு அனுதாபம் பிறக்கிறது.
சபாபதி கொலை பற்றிய விபரங்கள் அடங்கிய டைரி இருக்குமிடத்தை மாட்டுக்கார M.G.R தனது மதி நுட்பத்தால் கண்டுபிடிக்கிறார். M.G.R டைரியை எடுப்பதற்கு முன்பாகவே கொடியவன் அசோகன் அதை வசப்படுத்தி விடுகிறான்.மாட்டுக்கார M.G.R சிறை வைக்கப்பட்டிருக்கும் வக்கீல் M.G.R ஐ எப்படி காப்பாற்றினார் அசோகனிடமிருந்து டைரியை எப்படி மீட்டார் என்பதே மீதிக்கதை. மாட்டுக்காரன் & வக்கீல் என இரு வேடங்களில் வரும் M.G.R .
