anuradha nazeer

Action Classics Inspirational

4.0  

anuradha nazeer

Action Classics Inspirational

நினைத்த காரியங்கள் கைகூடும்

நினைத்த காரியங்கள் கைகூடும்

1 min
203


• ராவண   வதத்திற்குப் பிறகு இரண்டு அசுரர்கள் தப்பி ஓடி தவம் செய்து வரங்களைப் பெற்று தேவர்களை மிரட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்களை எப்படி சமாளிப்பது என்று தேவர்கள் பயந்து கொண்டிருந்தார்கள்.


• அப்போது அவர்களை வதம் செய்யக் கூடியவர்களை அனுப்ப வேண்டும் என்று கலந்து ஆலோசித்தபோது அனுமனே அதற்கு தகுதியானவர் என்று முடிவு செய்தனர். அனுமனுக்கு போரில் உதவ ஒவ்வொரு கடவுளும் அவரவருக்கு உரிய ஆயுதங்களை ஆசீர்வாதம் செய்து அளித்தார்கள்.


• ஸ்ரீராமர் வில்லையும், பிரம்மாவும், சிவபெருமானும் இன்னபிற கடவுள்களும் சக்தி வாய்ந்த ஆயுதங்களையும் அளித்தார்கள். ஸ்ரீராமர், தன்னுடைய அடுத்த அவதாரமான கிருஷ்ணனுக்குப் பிடித்த வெண்ணெயை அளித்து இந்த வெண்ணெய் உருகுவதற்குள் உனது காரியம் வெற்றியடையும், அசுரர்களையும் அழித்து விடுவாய் என்று சொல்லி ஆசீர்வதித்தார்.  

• அதன்படி அனுமன் வெண்ணெய் உருகுவதற்குள் இரண்டு அசுரர்களையும் அழித்துவிட்டார்.


அதுபோல நாம் வெண்ணெய் சாத்தி வழிபட்டால், நாம் சாத்திய வெண்ணெய் உருகுவதற்குள் நாம் நினைத்த காரியங்கள் கைகூடும் என்பதே, அந்த உண்மைக் காரணம்.


Rate this content
Log in

Similar tamil story from Action