மனதில் நினைத்தால் நடக்கும்
மனதில் நினைத்தால் நடக்கும்
மனதில் நினைத்தால் நடக்கும்
என் பெயர் அர்ஜுன், நான் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன் தான். என் கதையை பத்தி கொஞ்சம் சொல்லலாம்னு இங்கே எழுதுகிறேன். மிடில் கிளாஸ் அப்படி என்றால் என்னவென்று என்னைக் கேட்டால் வாழ்க்கையின் நடுத்தரம், சந்தோஷத்திலும், குடும்பத்திலும், பணத்திலும், காதலிலும், ஏன் படிப்பிலும் கூட நடுத்தரம் என்பேன். சரி என்னோட கதைக்கு போகலாம். நான் அப்போது பத்தாவது முடித்து பதினொன்றாம் வகுப்பு சேர்ந்து, படிப்பிலும் நடுத்தரம் என்றேன் அல்லவா பத்தாம் வகுப்பிலும் நடுத்தரமான மதிப்பெண்களை எடுத்து பதினொன்றாம் வகுப்பு அறிவியல் பாடம் கிடைக்காமல் அரசியலின் உதவி நாடி அரசு பள்ளிக்கூடத்தில் முதல்தரமான கணினி உடன் கூடிய கணித படிப்பை எடுத்தேன். எடுத்த நாள் என்னவோ நான் நடுத்தரமாக படித்து நல்ல பெயர் எடுத்து நல்ல கல்லூரியில் சேர வேண்டும் என்று நினைத்துதான் அன்று நான் என் வகுப்பறையில் அமர்ந்தேன். அன்று தெரியவில்லை பள்ளிப் படிப்பில் எவ்வளவு பின் தங்குவேன் என்று.
ஏனென்றால் நான் அமர்ந்ததற்கு எதிரில் அவள் அமர்ந்தாள். இவள் தான் என் பள்ளிப் படிப்பின் கனவிற்கு வேகத்தடை என்று அன்று எனக்குப் புரியவில்லை. அவளைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் அவள் கண்களைப் பார்த்து அவளிடம் மயங்காத என் வயது ஆண்கள் இருக்க மாட்டார்கள். அப்படி போடு கண்ணழகி. அவள் பெயர் திவ்யா. திவ்யா என்றால் கண் அழகில் மட்டும் அல்லது படிப்பிலும் அவள்தான் முதலிடம். ஆம் அவள் படிப்பில் முதல் மதிப்பெண் பெறுவாள் ஆனால் நான் மதிப்பெண் என்றால் என்ன என்று கேட்கும் அளவிற்கு மாறிப் போனேன்.
முதல் நாள் அவளை பார்த்தது முதல் அவளிடம் எப்படியாவது பேசிவிட வேண்டும் என்று ஏகப்பட்ட முயற்சிகள் எடுத்தேன். அதன் விளைவாக அவள் என்னிடம் நட்பு உடன் பழகினாள். நாட்கள் நன்றாகத்தான் சென்றது பள்ளிப்படிப்பில் எனது கவனம் குறைந்து அவள்மீது ஈர்ப்பு அதிகமானது. அவளிடம் எப்படியாவது என் காதலை சொல்லிவிட வேண்டுமென்று எண்ணினேன். ஆனால் தைரியம் எனக்கு வரவில்லை. சிறுவயது அல்லவா, அதனால் அந்த நேரத்தில் அவள் முன்பு என்னை உயர்த்தி காட்ட வேண்டும் என்று ஒரு ஆணை அடித்தேன். ஆனால் அவள் என்னை விட்டு விலக அதுவே ஒரு காரணமாக இருக்கும் என்று அன்று புரியவில்லை. என்னதான் ஆண் மகன்கனை அடிக்கும் தைரியம் எனக்கு அப்போது இருந்தாலும், ஒரு பெண்ணிடம் தன் காதலை வெளிப்படுத்தும் தைரியம் சிறு துளி அளவு கூட அன்று என்னிடம் இல்லை. ஆகையால் நான் திவ்யாவின் தோழியான மாலதி அவளிடம் உதவி நாடி, அவள் வழியாக எப்படியாவது திவ்யாவிடம் எனது காதலை வெளிப்படுத்த வேண்டுமென்று என்னை மாலதி இடமும் நட்பு ஏற்படுத்திக்கொண்டு அண்ணன் தங்கையாக பழகி வந்தோம்.
அண்ணன் என்ற உரிமையில் அவளும் எனக்கு உதவ முன்வந்தாள் அன்று எனக்கு அரையாண்டு தேர்வு நடந்து முடிந்த நாள், திவ்யாவிடம் நீ எவ்வாறு தேர்வை எழுதினாய் என்று கேட்டேன். அவள் “நான் நன்றாகத்தான் எழுதி உள்ளேன், எப்படியும் எனக்கு முதல் மதிப்பெண் கிடைத்துவிடும் என்றாள்”. நான் கேட்ட அதே கேள்வியை அவள் என்னை பார்த்து கேட்டாள், ஆனால் நான் ஒன்றும் சொல்லாமல் அங்கிருந்து புறப்பட்டு விட்டேன். ஏனென்றால் அன்று எந்த வித கேள்விக்கும் நான் வினாத்தாளில் பதில் அளிக்கவில்லை ஏனென்றால் அவள்தான் காரணம். அவள் மீது கொண்ட ஈர்ப்பு அல்லது அவளிடம் பழக வேண்டும் என்ற ஆர்வமும் எனக்கு பள்ளிப்படிப்பை முடிக்கும் வரை படிப்பில் காட்ட வேண்டும் என்று தோணவில்லை. அதனாலே 12ஆம் வகுப்பு முடிக்கும் வரை அனைத்து பாடங்களிலும் பத்துக்கும் குறைவான மதிப்பெண்கள் மட்டுமே எடுத்து வந்தேன். அதனால் பள்ளி-ல் தரும் மதிப்பெண்கள் பற்றிய அட்டையில் எனக்கு ஒற்றை இலக்கு அல்லது இரட்டை இலக்கு மதிப்பெண்களும் பெறவில்லை. அதனால்தான் அவளிடம் இருந்து ஒன்றும் பேசாமல் விலகிச் சென்று விட்டேன்.
இதனிடையே மாலதியிடம் சொல்லி திவ்யாவிடம் எனது காதலை எடுத்துக் கூற கூறினேன். அவளும் கூறினாள் அதற்கு அடுத்த நாளும் வந்தது, என்னை பார்த்தும் பார்க்காததுபோல் சென்றாள். அப்போது பயம் ஆரம்பித்து விட்டது. நான் மீண்டும் மீண்டும் எனது முயற்சி கைவிடாமல் மாலதி மூலியமாக திவ்யாவிடம் என்னைப் பற்றி கூறி என் காதலை சொல்ல முயன்றேன். அதுவே எனக்கான வாழ்க்கையில் முதல் தவறு என்று இன்று தான் புரிந்தது. ஒரு பெண்ணிடம் எப்பொழுதும் நேரடியாகவே பேச வேண்டும் அல்லது தனது காதலை அந்த ஆண்மகனே நேரடியாக சம்பந்தப்பட்ட பெண்ணிடம் தைரியத்துடன் சொல்லவேண்டும் என்பது இன்றுதான் விளங்கியது. சரி பள்ளிக்கு உள்ளே செல்லலாம், 12 ஆம் வகுப்புக்கான முழு ஆண்டு தேர்வு ஒரு கல்லூரியில் நடந்து முடிந்தது. இறுதி நாள் இன்று ஆகிய இன்றாவது என்னிடம் பேசி விடுவார் என்னை புரிந்து கொள்வாள் - என்று மனக்கோட்டை கட்டி இறுதி பரிட்சையை வேகவேகமாக முடித்து விட்டு அவளுக்காக வெளியே காத்திருந்தேன். ஆனால் அவளோ அவள் பெண் தோழிகளுடன் இணைந்து வந்தாள், இறுதி-நாள் என்று கூட பார்க்காமல் அனைவரிடமும் சொல்லி விடைபெற்றுக்கொண்டு சென்றாள். ஆனால் என்னை ஒரு பார்வை கூட பார்க்கவில்லை. அன்று என் மனதில் ஏதோ ஒரு அழுத்தம் ஏறியது, பெண்களின் மேல் வெறுப்பு, யாரிடமும் பேசக்கூடாது, யாரிடமும் பழக கூடாது, என்று தோன்றியது.
அன்று இரவு பெற்றோருடன் உறங்கும் பொழுது எனது போர்வையை தலைக்கு மேலே எடுத்து விட்டு உள்ளே சத்தம் இல்லாமல் அழுது கொண்டிருந்தேன். என்னை அவளுக்கு பிடிக்கவில்லை என்று. இவ்வாறு பல நாட்கள் ஓடின 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான அறிவிப்பு வந்தது, அதில் 50 சதவீத மதிப்பெண்கள் மட்டுமே எடுத்து தேர்ச்சி பெற்றேன், அடுத்தது கல்லூரி தான். பள்ளிப்படிப்பு முடித்து அனைவரும் அரசு கல்லூரியில் சேர்ந்தனர். ஆனால் எனக்கோ மீண்டும் அரசு சம்பந்தப்பட்ட இடத்தில் படிக்க விருப்பமில்லை. நான் படிக்கும் கல்லூரியை பார்த்து என்னை விட்டு ஒதுங்கியவர்கள் அனைவரும் வாயடைத்து போகும் படி ஒரு பெரிய புகழ்பெற்ற கல்லூரியில் சேர முயன்றேன். ஆனால் பெரிய படிப்பு படிக்கும் அளவிற்கு குடும்ப சூழ்நிலை இல்லை. அதனால் அதே கல்லூரியில் எந்த படிப்பு படித்தாலும் சரி ஆனால் அந்தக் கல்லூரியில் தான் படிக்க வேண்டும் என்ற உறுதியில் டிப்ளமோ என்ற படிப்பில் கணினி சார்ந்த படிப்பை எடுத்தேன்.
நான் என்ன-தான் கல்லூரி சென்றாலும் என் மனதில் இன்னும் திவ்யா தான் இருந்தாள், அதனால் என்னை வெறுத்து ஒதுக்கி இருந்தாலும் பரவாயில்லை என்று மீண்டும் மாலதியின் உதவியுடன் திவ்யாவிடம் சொல்லி “அர்ஜுன் இன்று வரை உன்னை தான் நினைத்து இருக்கிறான் ஏதாவது கொஞ்சம் பாரு டி” என்று மாலதி எனக்காக திவ்யாவிடம் கூறினாள். அன்றுதான் எனக்கு பதில் உண்மையில் கிடைத்தது, “திவ்யா உன்னை ஏற்றுக்கொள்ளாததற்கு காரணம், நீ அழகாக இல்லை, அவளுக்கு நிகரான படிப்பும் உனக்கு இல்லை என்று தான், உன்னை ஒதுக்குகிறாள்” என்ற பதில் எனக்கு கிடைத்தது. அன்று முடிவு செய்தேன் நான் பெண்களின் பின்னால் சுற்றுவதை விட்டு படிப்பில் கவனம் செலுத்துவேன் என்று. அங்கு பெண் தோழிகள் இருந்தார்கள். ஆனால் யாரையும் காதலிப்பதாகவும் அல்லது அவர்கள் மீது அதிக ஆசை உள்ளது என்றும் ஒருவரிடமும் கூறியதே இல்லை. கல்லூரியில் குறிப்பிட்ட ஒரு பெண் தோழி மட்டுமே இருந்தாள். அவளிடம் சேர்ந்து படிப்பது, எனக்கான படிப்பில் வரும் சந்தேகங்களை கேட்பது, எங்களுக்கு என்று கல்லூரியில் குழு அமைத்து அதில் தலைவியாக இருந்தாள் அவளின் வழிகாட்டுதலின்படி ஒரு கணினி சம்பந்தப்பட்ட மென்பொருள் வாங்க செல்வது, என்று நன்றாக சென்று கொண்டு இருந்தது எனது வாழ்க்கை. ஆனால் அதிலும் சிறிய மன வேதனைகள் நடந்தது என்னைப் பற்றின சரியான புரிதல் இல்லாமல் என் மீது சில தவறான எண்ணங்கள் என் தோழியிடம் காணப்பட்டது. அதுமட்டுமல்லாது தோழியின் காதலன் உடன் சண்டை வருவதற்கு ஒரு சிறிய காரணமாக நானும் இருந்தேன் என்பது எனக்கே தெரியாமல் போனது, இருந்தாலும் எனது படிப்பின் மீது இருந்த கவனம், வீட்டின் சூழ்நிலையை அறிந்து படித்து முடிக்க வேண்டும் என்பதிலேயே இருந்தது. இவ்வாறாக எனது இரண்டு வருட கல்லூரி வாழ்க்கை நிறைவடையும் மூன்று மாதங்களுக்கு முன்பு மாலை வேலையில் எனது தொலைபேசி எண்ணிலிருந்து குறுஞ்செய்தி வந்தது அதில் "எப்படி இருக்கீங்க நீங்க, என்ன பண்றீங்க, என்னை தெரிகிறதா" என்றெல்லாம் கேட்டார்கள் நானும் எனது அம்மாவின் தோழியாக இருக்கும் என்று மரியாதையுடன் பதிலளித்தேன். ஆனால் என்னை தெரிகிறதா என்று கேட்டதால் என் உள்ளே ஒரு சிறிய குழப்பம்.
அதற்கு மீண்டும் குறுஞ்செய்தி மூலம் பதில் வந்தது நான்தான். உன்னுடன் சிறுவயதில் விளையாடி உன்னுடன் வாழ்ந்த ஜெனிபர் என்றாள். எனக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை ஏனென்றால் ஆறேழு வருடங்களுக்கு முன்பு என்னுடன் சிறுவயதில் விளையாடிய பெண் இன்றளவும் என்னை மறக்காமல் என்னைப் பற்றி விசாரிக்கிறாள் என்பதால், அந்த சந்தோஷம் ஏனென்றால் ஆறேழு வருடங்களுக்கு முன்பு அவள் பாண்டிச்சேரியில் படிக்கச் சென்று விட்டாள். யாராக இருந்தாலும் சிறு வயதில் கூட இருந்தவர்களை கண்டிப்பாக மறக்க அதிக வாய்ப்பு உள்ளது. குறிப்பாக பெண்கள் கண்டிப்பாக மறக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது ஆனால் அவள் என்னை ஞாபகம் வைத்திருந்தாள். தொலைபேசி வாயிலாக தொடங்கிய எங்களது நட்பு எல்லை தாண்டியது. ஜெனிபர் இதுவரை தனது உடன்பிறந்த அல்லது பெற்ற அப்பா போன்ற ஆண் மகன்கள்யை தவிர அவ்வளவாக யாரிடமும் பேசியது கிடையாது. எனக்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ளும்பொழுது கூட அவர்களது பெற்றோருக்கு தெரியாமல் மட்டுமே எனக்கு தகவல் அனுப்புவாள். இதிலேயே நான் எவ்வளவு அவளுக்கு பிடிக்கும் என்பதை தெரிந்து கொண்டேன். இப்படியே நாட்கள் நகர்ந்து கொண்டே இருந்தது, அவளிடம் தொலைபேசி கிடையாது. அவர்களது பெற்றோர்கள் அவளைப் பார்க்க செல்லும்போது மட்டுமே பெற்றோரது தொலைபேசியை உபயோகித்து அதன் மூலம் என்னை தொடர்பு கொள்வாள். அன்று இறுதிநாள் அவளது பெற்றோர் அவளை விட்டு வருவதற்கான நாள், இதற்கு இடையில் கிடைத்த ஒரு சில வாரங்களில் நாங்கள் மிகவும் நெருக்கமானோம், என்னை மிகவும் எதிர்பார்ப்பதாகவும் என்னை எப்பொழுது பார்ப்போம் என்ற எதிர்பார்ப்பில் உள்ளதாகவும் என்னிடம் கூறினாள். எனக்கு இதுவே ஒரு பெரிய அதிர்ச்சி உடன் கூடிய சந்தோஷம் ஏனென்றால் என்னை ஒருவர் எதிர்பார்த்து காத்து இருப்பது இதுவே முதல் முறையாகும், நான் மட்டுமே மற்றவருக்காக எதிர்பார்த்த காலம் மாறி என்னை ஒருவர் எதிர்பார்க்கும் காலம் வந்தது. இன்றுதான் இறுதி நாள் என்பதால் எப்படியாவது அவள் வாயிலிருந்து அவளது காதலை என்னிடம் வெளிப்படுத்த வேண்டும் என்று எண்ணினேன். அதற்காக அவளிடம் அன்பாக மற்றும் காதல் கலந்த பேச்சுடன் பேசினேன். இறுதியில் உனக்கு என்னிடம் ஏதாவது கூற வேண்டுமா என்று சூசகமாக கேட்டேன். ஆனால் அனைத்து பெண்களும் இதில் மட்டும் ஒன்றாக உள்ளனர் ஆண்கள் தான் முதலில் பேச வேண்டும் என்பதில். ஜெனிபர் இடம் இருந்தக எந்த பதிலும் வராததால் நான் பேச ஆரம்பித்தேன் "இதுவே உன்னுடன் பேசக்கூடிய இறுதி நாளாக இருக்கும் என்று நினைக்கிறேன், இதற்கு மேலும் என்னால் தாமதம் செய்ய முடியாது மேலும் அடுத்து ஒரு வாய்ப்பு காகவும் காத்திருக்க முடியாது எனவே உன்னிடம் இதை சொல்லி விடுகிறேன், நான் உன்னை காதலிக்கிறேன்" என்று அவளிடம் சொன்னபொழுது மௌனம் சாதித்தாள். ஆனால் அவளது மனதிற்குள் பேரின்பம் நிலை ஏற்பட்டது.
நான் அவளின் மௌனத்திற்கு என்ன அர்த்தம் என்று கேட்டேன், ஆனால் அவளோ என் காதலுக்கு பதில் சொல்லாமல் "உங்களுடைய பெற்றோரும் வேறு மதம் என்னுடைய பெற்றோர் வேறு மதம் இது சரிப்பட்டு வருமா" என்றாள் நானும் அதை அப்பொழுது பார்க்கலாம் இப்பொழுது உன்னுடைய பதில் கூறு என்றேன். மீண்டும் மவுனமே சாதித்தாள் மௌனத்திற்கு என்ன அர்த்தம் என் காதலை ஏற்றுக் கொண்டாய் என்றேன், அவளும் "ம்ம்" என்றாள். இதைக் கேட்டவுடன் அன்று இரவு எனக்கு தூக்கமே வரவில்லை. நான் விரும்பிய பெண் என்னை வெறுத்த பொழுது அன்று இரவு நான் தூங்கவில்லை ஆனால் இன்று நான் விரும்பிய பெண் என்னை விரும்புகிறாள் என்று பதிலைக் கேட்டவுடன் இன்றும் என்னால் தூங்க முடியவில்லை. அன்று என் அழுகையால் என் தூக்கம் கெட்டது, இன்று என் மனதில் ஏற்பட்ட ஒருவிதமான சந்தோஷத்தால் தூக்கம் கெட்டது. இரவு முழுவதும் அவளது பதிலைப் பார்த்துக்கொண்டே என் உதட்டில் சிரிப்பு அடங்காமல் ஆர்ப்பரித்தது. உதட்டின் சிரிப்பினால் வாய்கள் வலிக்கவும் தொடங்கியது கண்ணில் ஆனந்த கண்ணீர் வழிந்தது. அன்று ஏற்பட்ட அந்த ஒரு சந்தோஷத்திற்கும் அதனால் கிடைத்த ஒரு விதமான வலியுடன் கூடிய இன்பத்திற்கும்
சொல்ல வார்த்தைகளே கிடையாது, அப்படி ஒரு உணர்வு ஏதோ நான் தான் இந்த உலகத்திலேயே முதன் முதலாக காதலில் விழுந்த ஒரு மனிதன் என்று எண்ணிக் கொண்டேன். இவளது இந்த பதிலை பார்த்துக்கொண்டே ஒரு வருடம் கழிந்து போனது. இதற்கு இடையே பேசுவதோ குறுஞ்செய்தி அனுப்புவது அல்லது பார்த்துக் கொள்வதும் கிடையாது, நாட்கள் மெல்ல நகர்ந்தன ஒருநாள் இரவு அவளது நினைவு வந்தவுடன் அவள் எனக்கு ஒரு வருடத்திற்கு முன்பு எனக்கு அனுப்பிய குறுஞ்செய்தியை பார்த்து ஆனந்தத்தில் மூழ்கி இருந்தேன், அப்பொழுது ஒரு குரல் என் காதில் ஒலித்தது. யார் என்று சுற்றும் முற்றும் பார்த்தேன் ஒருவரும் என் கண்ணில் புலப்படுவதில்லை. மீண்டும் அந்த குறுஞ்செய்தியை பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தேன் மீண்டும் நான் அந்த மகிழ்ந்த தருணத்தில் ஒரு குரல் கேட்டது அதில் "என்ன அர்ஜுன் அவ்வளவு சந்தோஷமாக உள்ளாய் உனக்கு அவளைப் பார்க்க வேண்டுமா" என்று குரல் கேட்டது எனக்கு அதிர்ச்சி, பேச்சு வரவில்லை யார் என்ன-வென்று தெரியவில்லை, ஏனென்றால் அப்பொழுது நல்லிரவு. எனக்கோ இது என்ன பேய் பேசுகிறதோ என்று பயம் பயந்துகொண்டே அந்த குரலுக்கு பதில் அளிக்காமல் கேள்வி கேட்டேன் "யார் நீ என் பெயர் உனக்கு எப்படி தெரியும் அதற்கு அது "நான் உன்னைச் சுற்றியே நீ பிறந்த நாள் முதல் இந்நாள் வரை இருக்கின்றேன் எனக்கு கொடுத்த கட்டளையின்படி உனது துன்பத்தில் நான் பேசமாட்டேன் ஆனால் உனது இன்பத்தில் என்னால் கலந்து கொள்ள இயலும் என்றது", நீ என்ன பேயா என்று மறுபடியும் பயந்த வாரே கேட்டேன் அதற்கு அது நீ நன்றாக உணர்ந்து பார் நான் யார் என்று புரியும் என்றது. நானும் அதைக் கேட்டு அமைதியாக உணர்ந்து பார்த்தேன் ஆனால் எனக்கோ ஒன்றும் உணரவில்லை கண்களுக்குப் புலப்படவில்லை ஆகையால் நான் அந்த குரலுக்கு பதில் அளித்தேன், "என்னால் உன்னை உணர முடியவில்லை யார் என்று தெரியவில்லை எனக்கு பயமாக உள்ளது என்றேன்" உடனே அந்த குரலில் இருந்து பதில் வந்தது "உன் சிறுவயதிலிருந்து உன்னுடன் இருக்கும் மூச்சுக்காற்றுதான் நான், நான் இல்லை என்றால் நீ இல்லை உன் துன்பத்தில் நான் இருப்பேன் ஆனால் என்னால் பேச முடியாது ஆனால் உனது இன்பத்தில் நான் இருப்பேன் அன்று என்னால் பேச முடியும், ஏனென்றால் எனக்கு கொடுத்த கட்டளையின்படி நீ என்று ஒரு நாள் அதிகபட்ச சந்தோஷத்தில் மகிழ்ச்சியில் ஒரு பெண்ணை நினைத்து உள்ளேயோ அன்றுதான் நான் உன்னிடம் பேச வேண்டும் என்பது எனக்கு உள்ள கட்டளை, ஆனால் அது யார் என்று உன்னிடம் என்னால் கூற இயலாது, ஆகையால் என்னைப் பார்த்து நீ பயப்படாதே உனக்கு நல்லது செய்யவே நான் உடன் உள்ளேன்" என்றது. எனக்கு அப்பொழுதும் பயம் போகவில்லை, ஆனாலும் என்னால் நம்பிக்கை இல்லாமலும் இருக்க முடியவில்லை. சரி என்று நான் அதனிடம் நட்பு ஏற்படுத்திக் கொண்டேன், நாங்கள் இருவரும் தினந்தோறும் பேசிக்கொள்வோம் பழகிக் கொள்வோம் ஆனால் தனியாக இருக்கும்பொழுது மட்டுமே, ஏனென்றால் மற்றவர்களுடன் இருக்கும் பொழுது நான் பேசினால் யார் இவன் பைத்தியக்காரன் என்று தான் நினைப்பார்கள், ஆகையால் நான் அதிகமாக தனிமையில் இருப்பேன், தனிமையில் இருக்கும்பொழுது இத்துடன் பேசிக்கொண்டிருப்பேன். எங்களது நட்பு மிகவும் வலிமையானதாக மாறியது, என்னை பார்த்த முதல் நாள் கேட்ட கேள்வியை மீண்டும் காற்று திரும்பவும் கேட்டது என்னிடம் "என்ன அர்ஜுன் உனக்கு உனது காதலி ஜெனிபரை மீண்டும் பார்க்க வேண்டுமா" என்றது.
நான் அதற்கு ஆம் பார்க்க வேண்டும், ஆனால் எப்படி என்னால் முடியும் நான் அவள் வீட்டுக்குச் சென்றாலோ அல்லது அவளைத் தொடர்பு கொண்டாலோ அவளது பெற்றோர்களுக்கு தெரிந்துவிடும் அத்துடன் எனது காதலும் முடிந்துவிடும், நான் என்ன செய்தாலும் என்னால் அவளைப் பார்க்க முடியாது என்றேன். காற்று அதற்கு "நான் உனக்கு உதவுகிறேன் ஆனால் இதை நீ இருமுறை மட்டுமே செய்ய முடியும் அதாவது உன் வாழ்க்கையில் இரண்டு முறை மட்டுமே உனது காதலியை நேரில் பார்க்க முடியும் அவளுடன் பேச முடியும் ஆனால் இது அவர்களது பெற்றோருக்கு அல்லது மற்றவருக்கு தெரியாது இதற்கு உனக்கு சம்மதமா" என்றது நானும் அதற்கு சம்மதம் என்றேன். உடனே ஒரு தங்க நிறத்தில் ஒளி வந்தது அதில் சிறு நட்சத்திரம் போன்று 2 அமைப்பு இருந்தது அதை கையில் எடுத்தேன் எடுத்தவுடன், காற்று சொன்னது இதில் மொத்தம் இரண்டு தான் உள்ளது கவனமாக உபயோகிக்க வேண்டும் என்றது. மேலும் இதை நீ மற்றவர்களுக்காகவும் அல்லது நீ வேண்டாம் என்று ஒதுக்க இயலாது ஒரு முறை நீ கையில் எடுத்து விட்டால் அதை நீ பயன்படுத்தியே ஆக வேண்டும், இதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்றால் அந்த நட்சத்திர வடிவம் கையிலெடுத்து நீ யாரை பார்க்க வேண்டும் என்று நினைக்கிறாயோ அவர்களை உனது மனசார நினைத்து கொள்ள வேண்டும், அதே தருணம் அந்த நட்சத்திரத்தை உனது இதயத்தின் அருகே கொண்டு சென்று வைக்க வேண்டும் அப்பொழுது உனக்கு ஒரு கதவு திறக்கப்படும் அதன் மூலமாக உனது காதலில் நீ பார்க்கலாம். நீ பார்க்கும் தருணத்தில் இந்த உலகத்தில் வேறு யாரும் உன் கண்ணுக்கோ அல்லது மற்றவர்களுக்கு நீங்கள் அறிய மாட்டீர்கள். உனது கண்ணில் காதலியும் காதலி கண்ணில் நீயும் மட்டுமே தெரிவாய் என்றது.
இதைக் கேட்டவுடன் எனக்கு மிகவும் சந்தோஷம், உடனே எனது மனதில் ஜெனிபர் நினைத்துக்கொண்டு அந்த நட்சத்திரத்தை எனது இதயத்தின் அருகே கொண்டு சென்று வைத்தேன். அப்பொழுது என் முன்பு ஒரு தங்க வடிவில் கதவு ஒன்று தோன்றியது. நான் அதை திறந்து உள்ளே சென்ற உடன் என் கண்ணை என்னால் நம்ப முடியவில்லை, எனது முன்பு ஜெனிபர் ஐ பார்த்தேன் அவளும் என்னை பார்த்தவுடன் ஓடி வந்து கட்டி பிடித்துக் கொண்டு ஆனந்தக் கண்ணீருடன் முத்தம் கொடுத்தாள், நானும் அவளிடம் என் மனசு திறந்து ஒரு வருட காத்திருப்பு அனைத்தையும் ஒரு மணிநேரத்தில் அவளிடம் எனது காதலை வெளிப்படுத்தி காதலுடன் அன்பாகப் பேசி முத்தம் கொடுத்தேன். எனக்கான நேரம் முடிவடைந்த தருணத்தில் நான் அவளிடம் போய் வருகிறேன் என்று விடை பெற்றுக் கொண்டு மீண்டும் அதன் வழியாக எனது வீட்டில் மறுபடியும் வந்தேன். இதேபோன்று இரண்டு வருடம் கழித்து மீண்டும் இறுதியாக இருந்த அந்த நட்சத்திரத்தை உபயோகித்தேன் ஆனால் இந்த நேரத்தில் ஜெனிபர் உடன் அவளது பெற்றோரும் உடன் இருந்தனர். எனக்கு ஒரே அதிர்ச்சி என்னை என்று காற்றிடம் கேட்டபொழுது நீதான் உனது மனதில் எப்படி ஜெனிபரை எப்படி கல்யாணம் செய்யப் போகிறோமோ என்றும், அவளது பெற்றோரிடம் எப்படி பேச போகிறோமோ என்றும், அவள் பெற்றோருடன் சேர்த்து நீ நினைத்துக் கொண்டாய், அதனால்தான் அவர்கள் முன்பு நீ இப்பொழுது நிற்கின்றாய் என்றது. எனக்கு பேச்சு வரவில்லை ஜெனிபரின் தாயார் என்னை பார்த்து முறைத்துக் கொண்டு இருக்கின்றார்கள். ஜெனிபர் தலையை குனிந்து கொண்டு சோகமாக உட்கார்ந்து கொண்டிருக்கின்றாள். திடீரென்று அவர்களது பெற்றோர் சிரித்த முகத்துடன் ஜெனிபருக்கு நீதான் சரியானவன், உனக்காக தான் ஜெனிபர் இப்பொழுது இங்கே இருக்கிறாள். ஆகையால் எங்களுக்கு எங்களது மகளைத் தவிர வேறு எந்த மதமோ அல்லது வேறு எதுவோ எங்களுக்கு முக்கியம் கிடையாது. ஆகையால் நீ நாளை உனது பெற்றோருடன் வந்து முறைப்படி பேசிக் கொள் என்றார்கள். மூன்று வருடங்களுக்கு முன்பு ஜெனிபர் இடம் காதலை சொல்லி அவள் அதை ஏற்றுக் கொண்ட பொழுது கிடைத்த சந்தோஷத்தில் இரண்டு மடங்காக அவளை எனக்கு கல்யாணம் செய்ய சம்மதித்தனர் அவர்களது பெற்றோர் என்ற உடன் கிடைத்தது என் சந்தோஷத்திற்கு அளவே கிடையாது.
இப்பொழுது ஒரு குரல் என் காதில் கேட்டது தூக்கத்திலிருந்து எழுந்திரு, நேரமாயிற்று என்று கேட்டது. அப்பொழுதே என்னைச் சுற்றியிருந்த சந்தோஷம் எனது ஜெனிபர், ஜெனிபர் பெற்றோர்கள் அனைவரும் மறைந்தனர்.
நானும் என்ன என்று எழுந்து பார்த்தேன். அவை அனைத்துமே ஒரு இரவு கனவு. இந்தக் கனவு கண்ட ஏழு வருடங்கள் கழித்து அவர்களது பெற்றோருக்கு எனது காதல் தெரிந்து எனக்கும் ஜெனிபர் கும் மதங்கள் பார்க்காமல் திருமணம் நடத்தி வைத்தார்கள். அப்பொழுது தான் ஒன்று புரிந்தது "நாம் என்ன நினைக்கிறோமோ அதை உள்ளத்திலிருந்து உண்மையாக நினைத்தால் அது நிச்சயமாக நடக்கும்" என்பது

