மிதித்துவிடு
மிதித்துவிடு


பெண்ணே உன்னை நிலவு என்றான்
நிலவு போல நீயும் தேய்கிறாய் என்றா?
மலரே என்றார், மலர் போல நீயும் வாடி கருக போகிறாய் என்றா?
கொடியே என்றார்,
பிறரை பற்றி மலரும் கொடி நீ என்பதற்காகவா?
முல்லை மல்லி பாரிஜாதம் என்றார்,
மற்றவர்களுக்காக நீ மணம் வீச வேண்டும் என்பதற்காகவா?
உண்மையை எங்கனம் வர்ணிப்பேன்
உன் வாழ்க்கையே நாசமாக்கி விட்டார்களே
உன் மென்மையை பலவீனப்படுத்தி
உண்மையை மறைத்து
வன்மையை தொலைத்து
பின் பெண்மையை குலைப்பதற்காகவா
பெண்ணே விழித்திடு ஏளனம் செய்பவரை எட்டி மிதித்துவிடு.