மீனா
மீனா


மீனா ஒரு அழகான வேலைக்காரி. துருதுருவென்று இருப்பாள். பரபரவென்று வேலைகள் பண்ணுவாள் மிகவும் சுத்தமாக கட்சிதமாகவேலைகளை அழகாக முடிப்பாள் . எவர் வீட்டிற்கு வேலைக்கு சென்றாலும் அவளை அள்ளி கொள்வார்கள் .அந்த மாதிரி சுபாவம். அவளுக்கு அவள் வேலையில் எல்லாம் ஒரு குற்றமும் கண்டுபிடிக்க முடியாது. .அவ்வளவு துல்லியமாக இருக்கும் என அவள் சற்றே அழகானது ஒரு ஒரு வீட்டிலும் இருக்கும் வாலிபர் கண்கள் ஒரு உடலை நீயும். உடலை தனக்கு எப்போது விருந்தாக்கி கொள்ளலாம் என்று அலையும். மனித மிருகங்கள். எனவே எந்த ஒரு வீட்டிலும் நீண்ட நாட்கள் அவள் வேலையை செய்ய மாட்டாள்.
ஏம்மா இந்த இளம் வயசில் இப்படி கஷ்டப் படுற என்று வீட்டுக்கார பெண்மணிகள் கேட்கும் போது என்ன செய்ய என் குடிகார புருஷன் குடித்துவிட்டு போய் சேர்ந்துவிட்டான். என் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கும் வரை
என்று சாதாரணமாக கூறுவார்.அவளைப் பார்க்கும் வீட்டுப் பெண்மணி களுக்குத்தான் பாவமா இருக்குமே தவிர மீனா எதற்கும் அஞ்ச மாட்டார்.