மேடைப்பேச்சாளர்
மேடைப்பேச்சாளர்


சாந்தி நல்ல மேடைப்பேச்சாளர். பட்டி தொட்டி எல்லாம் புகழ் பரப்பிக் கொண்டு இருப்பவர். எந்த மேடையிலும் அங்கே சாந்தி பேச்சாளராக முதன்மையாய் இருப்பார்.
எனவே எல்லா பெண்களுக்கும் மத்தியிலும் சாந்தி ஓர் உச்சகட்ட புகழை பெற்று இருந்தார்.அவளுக்கு கல்யாண வயது ஆயிற்று.
அவள் பெற்றோர்கள் மிகவும் பயந்தார்கள். நல்ல வரனாக அமைய வேண்டுமே .இந்த காலத்தில். சாந்தி ஒரு தங்கமான பெண்.
ரொம்ப நல்ல மனம் படைத்தவள். இரக்க குணமுள்ளவர். எனவே அவளுக்கு நல்ல வரன் அமைய வேண்டுமே என்று இறைவனிடம் பிரார்த்தித்துக் கொண்டனர்.
சில நல்ல வரன்கள் அமைந்தது.நல்ல மாப்பிள்ளை வீட்டார்கள் வந்தார்கள். ஆனால் சாந்தி ஒரு பட்டிமன்ற பேச்சாளர் என்றதுமே அப்பப்பா இவள் வாயாடியாக இருப்பாளே இவள் குடும்பத்துக்கு தகுந்த ஏற்றமான ஒரு மருமகளா இருக்க மாட்டாளே. நமக்கு வேண்டாம் .
எத்தனை சீர் செனத்தி செய்தாலும் இந்த மாதிரி பெண்கள் அடங்காப்பிடாரி தான் இருப்பார்கள். வேண்டாம் என்று ஒதுக்கி விட்டார்கள். ஆனாலும் சாந்தி மனம் தளரவில்லை. என்றாவது ஒருநாள் நல்ல வரன் புதிரும் என்று காத்திருந்தாள்.