anuradha nazeer

Abstract


4.5  

anuradha nazeer

Abstract


கயாவில் தர்ப்பணம்

கயாவில் தர்ப்பணம்

1 min 165 1 min 165

இந்து சமயத்தில் இதிகாசங்கள் என இராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகிய இரண்டும் உள்ளன. இதில் மிகவும் உண்ணதமாக இராமாயணம் பார்க்கப்படுகின்றது. இராமாயணத்தின் முக்கிய திருப்பு முனையாக கைகேயின் வரம் அமைந்தது. 


ராமன் காட்டுக்கு சென்றது இதனால் தான். இது ஒரு புறம் இருக்க அயோத்தி மன்னன் தசரதனுக்கு கோசலை, கைகேயி, சுமித்திரை என மூன்று மனைவிகள் இருந்தனர். இதில் கோசலைக்கு ராமனும், கைகேயிக்கு பரதனும், சுமித்திரைக்கு லட்சுமணன், சத்ருக்னனும் பிறந்தனர். 


ஒரு மகனைப் பெற்றால் அவன் கயாவில் தனக்கு தர்ப்பணம் கொடுப்பானோ இல்லையோ, என்ற சந்தேகம் இருந்ததால், அதனால் ஒன்றுக்கு பதிலாக நான்கு பிள்ளைகள் பெற்றான். கயாவில் பிதுர்க்கடன் கொடுப்பதன் அவசியத்தை அப்போதே தசரதன் உணர்ந்திருந்தான்.


ஒருவன் இல்லாவிட்டாலும், மற்றொருவர் பிதுர் கடன் கொடுப்பான் என நம்பினான். கைகேயினின் வரத்தால் ராமன் வனத்திற்கு சென்றதும், மரணித்த தசரதனுக்கு நான்காவது மகனான சத்ருக்கனனுக்கு அந்திம கிரியை செய்து தர்ப்பணம் கொடுத்தான்.


கைகேயி வரத்தால் பரதனுக்கும் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் 14 ஆண்டுகளுக்கு பின்னர் அயோத்திய திரும்பிய ராமன் பட்டாபிஷேகத்திற்கு பின்னர், கயாவில் தர்ப்பணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Rate this content
Log in

More tamil story from anuradha nazeer

Similar tamil story from Abstract