anuradha nazeer

Fantasy

4.7  

anuradha nazeer

Fantasy

குருபூஜை தினம்

குருபூஜை தினம்

3 mins
11.6K


சிலிர்ப்பூட்டும் சரித்திரத்தைக் கொண்டகாளையார் கோயில் என்னும் அற்புதத் தலம். இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் சில திருவிழாக்கள் மிகவும் கோலாகலமாக நடைபெறும். குறிப்பாக, அம்மனுக்கு ஆடித் திருவிழா, காளீஸ்வரருக்கு தைப்பூசத் திருவிழா, வைகாசி பிரம்மோற்சவம் ஆகியன முக்கியமானவை. வைகாசி பிரம்மோற்சவத்தின் 7-ம் திருவிழாவின்போது பொய்ப்பிள்ளையை மெய்ப்பிள்ளையாக்கிய வைபவம் நடைபெறும்.

இந்த நிகழ்வில் மக்கட்பேறு இல்லாத தம்பதிகள் கலந்துகொண்டு பிள்ளை வரம் வேண்டுவர். அப்படி வேண்டித் தங்களின் வேண்டுகோள் நிறைவேறப் பெற்றவர்கள் அடுத்த ஆண்டு திருவிழாவுக்கு வந்து பொம்மை ஒன்றை வாங்கிக் குளத்தில் விடுவர். பிள்ளைவரம் வேண்டுபவர்கள் அந்தப் பொம்மைகளை எடுத்துச் சென்று வைத்திருந்து அடுத்த ஆண்டு வேண்டுகோள் நிறைவேறி மழலைச் செல்வம் கிடைத்ததும் மீண்டும் அந்தப் பொம்மையைக் கொண்டுவந்து குளத்தில் விடுவர். இந்த அற்புத வைபவம் எப்படி ஏற்பட்டது?


கற்கள் பொன்னானது... பொம்மை பிள்ளையானது...வீரசேனன் என்னும் பாண்டிய மன்னன் வாரிசு இல்லாமல் தவித்தான். அவனுக்குக் கனவில் காட்சிகொடுத்த இறைவன் ஒரு பொம்மையை பிள்ளையாகப் பாவித்துவரவும், உரிய காலத்தில் பிள்ளைவரம் தருவதாகவும் கூறினார். இதைக்கேட்ட மன்னன் ஓர் அழகிய பொம்மை ஒன்றைத் தன் மகனாகக் கருதி வளர்த்தார்.

இதே காலத்தில் அரவிந்தன் என்பவர் தொண்டித் துறைமுகப் பகுதியில் வாழ்ந்துவந்தார். பல தொழில்கள் செய்தும் லாபம் ஏற்படாது நஷ்டமே சந்தித்தவன் வேறுவழியின்றி காயவைத்த மீன்களை வாங்கி மதுரை நகர் சென்று விற்று வயிற்றுப் பிழைப்பை நடத்தத் தீர்மானித்தார். துறைமுகத்தில் மீனவர்களிடம் மீனை வாங்கிக் காயவைத்து அவற்றை எடுத்துக்கொண்டு மதுரையை நோக்கிப் பயணித்தான். கானப்பேரெயில் எனப்பட்ட காளையார்கோயிலை அடைந்து அங்கிருந்த அம்மன் திருக்குளக்கரையில் ஓய்வெடுக்க அமர்ந்தார்.

அப்போது அவன் முன்பாக அம்மன் ஒரு சிறுமிபோலத் தோன்றினாள். அந்தச் சிறுமி அரவிந்தனிடம், ``ஏன் காய்ந்த மீன்களை விற்கிறாய்... அவற்றை இந்தக் குளத்தில் போட்டுவிட்டு, இந்தக் குளக்கரைக் கற்களை அள்ளிக்கொண்டுபோ” என்றாள். அரவிந்தனுக்கு அவள் கிண்டல் செய்கிறாள் என்று தோன்றியது. ஆனால், அப்போது அவன் கொண்டுவந்த மூட்டையில் அசைவு தெரிந்தது. மூட்டையை அவிழ்த்துப் பார்த்தபோது காயவித்திருந்த மீன்கள் எல்லாம் உயிரோடு துள்ளின. இதைக் கண்ட அரவிந்தன் அதிர்ச்சி அடைந்து அந்தச் சிறுமி நின்ற இடத்தைப் பார்த்தான். ஆனால், அங்கு சிறுமியில்லை. அவள் மாயமாக மறைந்திருந்தாள். அரவிந்தனுக்கு உடல் சிலிர்த்தது. உடனே அந்தச் சிறுமி சொன்னதுபோலவே மீன்களைக் குளத்தில் போட்டுவிட்டுக் குளக்கரைக் கற்களைப் பொறுக்கி மூட்டையாகக் கட்டிக்கொண்டு மதுரை நோக்கி நடந்தான்.


மதுரை எல்லையை அடைந்ததும் அவன் மூட்டையை அவிழ்க்கக் கற்கள் அனைத்தும் பொன்னும் மணியுமாக மின்னின. அந்தக் கால வரி விதிமுறைகளின்படி ஆறில் ஒருபங்கை அவன் அரசனுக்கு வரியாகக் கட்டினான். இத்தனை பெரிய செல்வம் எப்படி ஒருவருக்குக் கிடைத்தது என்று மன்னன் விசாரிக்க, நடந்தவற்றை அரவிந்தன் மறைக்காமல் சொன்னான். இதைக்கேட்ட மன்னன் கற்களே பொன்னாகும் என்றால் என் பொய்ப்பிள்ளை மெய்ப்பிள்ளையாகாதா என்று ஆவல் கொண்டு அந்தக் குளக்கரைக்கு வந்தான். குளத்தில் பொம்மையை இறக்கி வைத்து காளீஸ்வரரையும் சொர்ணவல்லி அம்பாளையும் வேண்டிக்கொண்டான். அடுத்த நிமிடம், பொம்மை பிள்ளையானது. குளத்திலிருந்து சிவநாமம் சொல்லியபடி அந்தக் குழந்தை வெளியேறியது. இந்த அதிசயத்தைக் கண்ட மக்கள் ஈசனைத் துதித்தனர். அந்தச் சிறுவனே வீரசேனப் பொற்பாண்டியன் என்கின்றன நூல்கள்.திருமுறை அடங்கிய ஓலைகளை அப்படியே நம்பிகளிடம் ஒப்படைத்த மன்னன், அவற்றைத் தொகுத்துத் தரும்படி வேண்டிக்கொண்டார். அதன்படி தேவார- திருவாசகங்களைத் தொகுத்துத் தமிழுக்கும் சைவத்துக்கும் மாபெரும் தொண்டாற்றினார் நம்பிகள்.

அந்நிய மதங்களின் செல்வாக்கால் புகழ்மங்கியிருந்த சைவ சமயத்தை மீண்டும் பெரும்புகழோடு நிறுவியவர்கள் சமயக் குரவர் நால்வர். அவர்களின் பக்தி நெறியும் தமிழ்மொழியும் திருமுறைகளாகித் தமிழ்வேதங்களாகப் போற்றப்பட்டன. ஆனால் காலப்போக்கில் அந்தத் திருமுறைகள் வழக்கிலிருந்து மறைந்தன. தேசங்கள் பலவற்றையும் வென்ற மாமன்னன் ராஜராஜசோழனின் மனதில் சைவத் திருமுறைகளைத் தேடிக் கண்டடைந்து தொகுக்க முடியவில்லையே என்ற கவலை இருந்தது. அதைத் தீர்க்க வழி தேடினான். அப்போது நம்பியாண்டார் நம்பி குறித்துக் கேள்விப்பட்டு அவரை தரிசிக்கப் பொள்ளாப் பிள்ளையார் கோயிலுக்கு வந்தான்.

நம்பியாண்டார் நம்பி சிறுவயதுமுதலே பொள்ளாப் பிள்ளையாரின்மீது பக்தியும் நம்பிக்கையும் கொண்டவர். நம்பி சிறுபிள்ளையாக இருக்கும்போதே அவரோடு திருவிளையாடல் புரிந்து காட்சி கொடுத்து ஆட்கொண்டவர் பொள்ளாப் பிள்ளையார். நேருக்கு நேராய்த் தோன்றி நம்பியோடு உரையாடுபவர். மன்னன் ராஜராஜனின் மனக் குறிப்பை அறிந்து அதைப் பிள்ளையாரிடம் கூறி சைவத் திருமுறைகள் இருக்கும் இடத்தைக் காட்டியருளுமாறு வேண்டினார் நம்பிகள்.


உடனே பிள்ளையார், தமிழ்வேதங்களைத் தொகுக்க இதுவே தருணம் என்பதைச் சொல்லி, திருமுறைகள் இருக்கும் இடத்தைச் சொல்லியருளினார். 

'தில்லை நடராஜப் பெருமான் அருளும் தலத்தில் தென்மேற்கு மண்டபத்தில், கை இலச்சினை (முத்திரை) கொண்ட அடையாளத்துடன் சுவடிகள் இருக்கும்' எனக் கூறியருளினார் விநாயகப் பெருமான்!

இந்தத் தகவலை நம்பியாண்டார் நம்பி மன்னனுக்குத் தெரிவித்தார். மாமன்னன் இதை அறிந்து மனம் நெகிழ்ந்து நம்பியையும் உடன் அழைத்துக்கொண்டு தில்லைப்பதிக்கு விரைந்தார். விநாயகப் பெருமான் கூறிய இடத்தில் புற்றால் மூடியிருந்த ஓலைச்சுவடிகளைக் கண்டு சிலிர்த்தார் நம்பிகள். தில்லைவாழ் அந்தணர்கள் விருப்பப்படி சைவ மூவருக்கு அங்கே திருமேனிகளை ஸ்தாபித்து வணங்கினான் ராஜராஜன்.

அங்கு திருமுறை காட்டிய விநாயகருக்கும் சந்நிதி அமைந்து வழிபட்டனர். திருமுறை அடங்கிய ஓலைகளை அப்படியே நம்பிகளிடம் ஒப்படைத்த மன்னன், அவற்றைத் தொகுத்துத் தரும்படி வேண்டிக்கொண்டார். 

அதன்படி தேவார- திருவாசகங்களைத் தொகுத்துத் தமிழுக்கும் சைவத்துக்கும் மாபெரும் தொண்டாற்றினார் நம்பிகள். 

இத்தகைய சிறப்புகளையுடைய நம்பியாண்டார் நம்பிகளின் குருபூஜை தினம் வைகாசிமாதம் புனர்பூச நட்சத்திர நாளில் கொண்டாடப்படுகிறது.


Rate this content
Log in

Similar tamil story from Fantasy