கடவுள் என்னை மன்னிப்பாராக
கடவுள் என்னை மன்னிப்பாராக


ஒரு நாள் என் கணவர் குளித்துக் கொண்டிருந்தார் அப்போது அவர் செல்போன் மணி அடித்ததுநாமும் அடிக்கிறதே என்று அதை எடுத்தேன் மறுமுனையில் இருந்து ஒரு இனிமையான பெண் குரல்கேட்டதும் பகீரென்று இருந்தது எனக்குஎன் குரலைக் கேட்டதும் அந்தப் பெண் போனை கட் பண்ணி விட்டாள்நான் மறுபடி அந்த பெண்ணிற்கு போன் செய்து ஹலோ என்றேன்அவளோ ராங் நம்பர் நின்று கட் செய்து விட்டாள்என் கணவர் குளித்து வந்ததும் நான் விடாமல் நோண்டி நோண்டி கேட்டேன் யார் அந்த பெண் எதற்காக உங்களுக்கு போன் செய்தாள் என்றுஅவளோ அவரோதெரியாது மா யாராவது ராங் நம்பர் ஆகியிருக்கும் என்று கூறிவிட்டார்
பிறகு அலுவலகம் சென்று விட்டார் அன்று முழுவதும் ஒரே வேதனை எனக்குமாலை திரும்பி வந்தார்நான் அவருடன் பேசவில்லை ஒரே கோபம் எனக்கு எங்கே என் குழந்தைகளையும் என்னையும் விட்டு விட்டு ஓடிச் சென்று விடுவார்களோ அந்த பெண்ணுடன் என்று பயம் யாருக்கும் சாதாரணமாக வரத்தானே செய்யும்அன்று இரவும் நாங்கள் இருவரும் பேசிக் கொள்ளவே இல்லை மனம் முழுவதும் பயம் பாதிப்புமறுநாள் காலை அவர் என்னிடம் வந்து நான் வீட்டின் மீது சத்தியம் செய்கிறேன் எனக்கு யாருடனும் தொடர்பு இல்லை என்றால் நான் உடனே பட்டென்றுகுடிகாரன் தினம் சத்தியம் தான் செய்து கொடுக்கிறான் நாளை முதல் குடிக்க மாட்டேன் என்று கோர்டில் எல்லோரும் வீட்டை மீது சத்தியம் தான் செய்கிறார்கள்
அந்த சத்தியத்தை யார் காப்பாற்றுகிறார்கள் இந்த பொய் சத்தியம் எல்லாம் என்னிடம் வேண்டாம் என்று என்று கூறி விட்டேன்ஆனாலும் பித்துப் பிடித்தவள் போல் இருந்தேன் என் கணவர் என்னை விட்டு விலகி செல்கிறாரோ என்ற மன பயம்மாலை என் செல்போன் அலறியது எடுத்துப் பேசினால் என் கணவரின் அண்ணி சினேகா நீ ஒன்றும் கவலைப்படாதே நான் தான் எனக்குத் தெரிந்த ஒரு நண்பரின் மகளை உன் கணவரிடம் வேலை நிமித்தமாக அனுப்பினேன் அதனால் உன் வீட்டில் குழப்பம் என்று கேள்விப்பட்டேன் சாரிமா என்றாள் எனினும் சந்தேக புத்தியை நானே நொந்துகொண்டேன்அப்பாவி கணவர் மீது அநியாயமாக பழி போட துடித்தேனே என்று நினைத்து ஏங்கினேன் கடவுள் என்னை மன்னிப்பாராக