anuradha nazeer

Action

3  

anuradha nazeer

Action

கடல்கன்னி part 4

கடல்கன்னி part 4

2 mins
153


கடல்கன்னி part 4


பல நாட்டுப்புற கதைகள் தேவதைகளுக்கும் (மனித வடிவத்தை எடுத்துக் கொள்ளக்கூடியவர்கள்) மற்றும் ஆண்களுக்கும் இடையிலான திருமணங்களை பதிவு செய்கின்றன. பெரும்பாலானவற்றில், மனிதன் தேவதை தொப்பி அல்லது பெல்ட், அவளது சீப்பு அல்லது கண்ணாடியைத் திருடுகிறான். பொருள்கள் மறைக்கப்பட்டிருக்கும் போது அவள் அவனுடன் சந்தோஷமாக வாழ்கிறாள்; அவள் மீண்டும்  அவற்றை கண்டால் அவள் உடனேயே கடலுக்குத் திரும்புகிறாள். சில மாறுபாடுகளில் திருமணம் ஒப்புக் கொள்ளப்பட்ட சில நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படும் போது நீடிக்கும், மேலும் நிபந்தனைகள் உடைக்கப் படும் போது அது முடிகிறது.

ஆவலுடன் மீன லோசினி யும் திலீபனும் அந்த கிழ வியை நோக்கிச் சென்றார்கள். கிழ வி யும் இவர்கள் வருகைக்காக காத்திருந்தது போல் வர வேற்றாள்.

யார் நீங்கள் ??? எதற்காக 

எங்களைத் தொடர் கிறீர்கள் ??

திலீபன் கேட்டான் .கிழ வி யும் சிரித்துக் கொண்டே என்னை சந்தேக படாதே .

நான் நான் கடலரசன் குடும்பத்திற்கு மிகவும் வேண்டியவள்

மீன லோசினி யை நான் காப்பாற்று வதற்காகவே அவளை நிழல் போல பின் தொடர்கின்றேன் என்றாள்.


என்ன விஷயம் என்று திலீபன் கேட்டான் .

வா ருங்கள் அருகிலுள்ள தடாகத்தில் உட்கார்ந்துகொண்டு பேசுவோம் என்றாள் கிழவி.


மூவரும் மதியம் உணவு அருந்திய அந்த தடாக படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டு பேசினார்கள்.


கிழவி சொன்னாள், போன ஜென்மத்தில் நீங்கள் இருவரும் கணவன் மனைவி.


அப்போது நடந்த ஒரு சம்பவம் நீங்கள் இருவரும் பிரிவதற்கு காரணமாக இருந்தது ..,என்றாள்.

உடனே என்ன சம்பவம் என்று மீன லோசினி யும் திலீபனும் ஒரே குரலில் கேட்டார்கள் .

கிழவி விரிவாக அந்த கதையை சொல்ல ஆரம்பித்தார்.


போன ஜென்மத்தில் மீன லோசினியின் பெயர் அற்புத லோசனி .அவளை சுயம் வர த்திற்காக பல மன்னவர் கள் கடலரசன் ஏற்பாட்டின் பேரில் வந்திருந்தார்கள்.


வந்திருந்தவர்களை நீங்கள் ஏதாவது அதிசயம் செய்தால் தான் என் மகள் அற்புத லோசனி யை கட்டித் தருவேன் என்று அவள் அப்பா சொல்லிவிட்டார்கள். எனவே பலரும் பலவிதமாக முயன்று கொண்டிருக்கையில்நீ


பல அற்புத பொருட்களை கொண்டு வந்தாய் .எனவே அவளு க்கு உன்னை கட்டி கொடுத்து விட்டனர்.


எனவே தான் இந்த ஜென்மத்தில் நீங்கள் மறுபடியும் பிறந்து ஒருவரை ஒருவர் மண ம் செய்ய இருக்கின்றனர்


நான் உங்கள் இருவருக்கும் துணை புரிந்து ,உங்களை மண ம் மு டிக்கச் செய்து ஆசீர்வதிப்பேன் என்றாள்.

மீன லோசினியும் திலீபனும் போன ஜென்ம கதைக் கேட்க

மிகவு ம் ஆவலாய் இருந்தனர் .

கிழவி கதையை  தொடர்ந்தார் .

தி க் விஜயன் காட்டில் தன் குதிரையுடன் வேட்டையாட போய்க்கொண்டு இருந்தான்.


வழியில் ஒரு மந்திரவாதி உட்கார்ந்து கொண்டு இருந்தான்.


போன ஜென்மத்தில் உங்கள் நாட்டில் இளவரசனை மந்திரவாதி ஒருவன் பிடித்துக் கொண்டு போய்விட்டான் .அவனை கடலுக்கு அடியில் ஒரு


பாதுகாப்பான அரங்கிற்குள் மறைத்து வைத்தான் .எவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை . அனைவரும் வருத்தமுடன் இருந்தனர்.

இந்த நேரத்தில்தான் திக்விஜய்யை உன் தகப்பனார் பார்க்க நேரிட்டது.


அவனிடம் உன் தந்தை நாட்டின் நிலைமையைக் கூறி இளவரசனை பிடித்து மறைத்து வைத்து விட்டனர். இளவரசன் இல்லாவிடில் இந்த நாட்டை யார் பாதுகாப்பார்கள்?? என்று வருத்தத்துடன் கூறியதற்கு விஜயன் நான் போய் இளவரசனை மீட்டு வருகிறேன் என்று தைரியமுடன் புறப்பட்டான்.

சில விவரங்கள் கேட்டான்.

1 கொடுமைப் படு கொடுமைப்படுத்தினா னா???

2 யாரையும் துன்புறுத்தினானா???

3 ஏதேனும் கெடுதல் செய்தானா???


இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் பதில் இல்லை என்றே வந்தது .

உடனே திக்விஜயன் கூறினான் அவன் கொடுமை படுத்தக்கூடிய கொடுங்கோலன் அல்ல.


அவன் தனிமையில் வாடுகிறான் .

அவனுக்கு நட்பு தேவைப்படுகிறது .அதனால் தான் அவ்வாறு கடத்திப் போய் இருக்கிறான் .நான் சென்று மீட்டு வருகிறேன். யாரும் கலங்க வேண்டாம் என்றான்.

இப்போது மன்னர் திக்விஜய் யை பார்த்து சில கேள்விகள் கேட்டார். உனக்கு பயம் என்பது உண்டா ???என்று கேட்டார். அதற்கு திக்விஜய் இல்லை ..எனக்கு பயம் என்பதே சிறுபிள்ளை முதலே கிடையாது என்றான்..


நான் இயற்கையை நேசிப்பவன். இயற்கைக்கு எந்த விதத்திலும் துன்பம் தந்ததில்லை. எனவே இயற்கையை கண்டு எனக்கு பயம் கிடையாது என்றான்.


இயற்கை நமக்கு நன்மையே செய்யும் என்பதை நான் நம்புவேன் என்றும் கூறினான்.


இவர் சொன்னதையெல்லாம் கேட்ட மன்னன் இவன் மீது நம்பிக்கை கொண்டு உன்னுடன் என் படைவீரர்களையும் அனுப்புகிறேன். சென்று வெற்றி பெற்று வா என்றான் .அதற்கு திக்விஜய் என் மீது எனக்கு அலாதியான நம்பிக்கை இருக்கிறது. அபாரமான நம்பிக்கை இருக்கிறது. எனவே என் உதவிக்கு யாரும் வேண்டாம். என்னை அனுமதியுங்கள் .ஆசிர்வதியுங்கள் .அது போதும் என்று கூறிப் புறப்பட்டான்.



Rate this content
Log in

Similar tamil story from Action