anuradha nazeer

Action

4  

anuradha nazeer

Action

கடல்கன்னி part 3

கடல்கன்னி part 3

1 min
226


மீன லோசனி மிகவும் உற்சாகமாகவும், ஆர்வமாகவும் இருந்தாள் .திடீரென்று ஒரு கனமான புயல், பலத்த காற்று ,வீசியது. அவள் மனதில் ஆயிரம் கற்பனைகள். .அழகான ஆண்  தான் திலீபன் .  .

அவள் மனதில் நினைத்த எதிர் பார்ப்பை விட அவன் மிகவும் அழகாக இருக்கிறான். ஆனால் திலீபன் படகு வரும் போது ஒரு கடுமையான புயலால் அவன் இழுத்துச் செல்லப்பட்டான், அவள் கடல் வழியாக வரும்போது பார்த்த தில் அவர்  தண்ணீரில் மூழ்கினார், அவரைப் பாதுகாக்க அவள் விரும்பினாள்.

 இளவரசனை அசைத்தாள். ,திலீபனுக்கு முந்தாணை யால் வீசி விட்டாள். 

நான் உன்னுடன் இருக்க விரும்புகிறேன் லோசனி,.

.காதல் என்பது பிரபஞ்சத்தில் உள்ள அழகான விஷயம், அது என்ன ஒரு நல்ல உணர்வு. .இறுதியாக இளவரசர் எழுந்து கண்களைத் திறந்தார், அவர் மீன லோசனியைப் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார், ஆனால் அவர் மிகவும் சோர்வாக இருந்தார், பின்னர் தேவதை தன் மந்திர சக்தியைக் கொண்டு வந்து அவரது நெற்றியில் ஒரு மருந்து தடவினாள் .நான் எங்கே இருக்கிறேன் ??

என்ன ஆயிற்று????என்றான் திலீபன் ..


கிளி இருவறையும் மாறி மாறி பார்த்தது . வாருங்கள் அவள்

 வெகு  அருகி லொரு நந்தவனம் உள்ளது .

அங்கு சென்று பேசுவோம் என்றாள். 

திலீபன்  மீன லோசனி கையை பிடித்து நடந்த போது அவள் வெட்கத்தால்

ஆட் கொள்ளப் பட்டாள் . ஆனால் ஸ்பரிஸம் சுகமாக இருந்தது.

இது தான் முதன் முதலாக ஒரு ஆடவன் கை யவள் மேல் படுவது ,வெட்கம் மேலீட்டால் கன்னங் குங்கும பூப்போல் சிவந்தது .

இருவரும் பார்த்தனர் .பார்த்து கொண்டே இருந்தனர் .உன் குரல் இவ்வளவு 

இனிமையாய் இருக்கின்றதே .உனக்கு  பாட தெரியுமா???? என்றான் திலீபன்.

மன்னருக்கு யாழ் மீட்ட தெரியுமா என எதிர் கேள்வி கேட்டாள் மீன லோசனி.

ம்ம் ஆ னால் யாழுக்கு எங்கே போவது என்றான் திலீபன்.


 மீன லோசனி. உடனே கையை நீட்டியதும் யாழ் வந்தது ..தேவ கானம் தான் . பாடல் 

ஏழு  உலகிற்கும் அதி அற்புதமாய் கேட்டு இருக்கும் .

செவிக் குண வாகி விட்டது . இனி வயிற்றிக்கு என்றான் .

உடனே மீன லோசனி தன் வலது கையை நீட்டியதும் ஒரு தட்டு நிறைய தேவலோக கனிகள்  பால் தாம்பூலம் எல்லாம் வந்தது .

இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஊட்டி மகிழ்ந்தனர்.

கிளியும் அவர்களுடன் உண்டு   மகிழ்ந்தது.

இப்போது திலீபன் மீன லோசனியிடம் கேட்டான் உன் அப்பா நம் திருமணத்திற்கு சம்மதிப்பாரா??? நான் உன்னை மணம் முடிக்க விரும்புகிறேன். மனதார நேசிக்கிறேன் என்றான். என் அ ப்பா ஒரு போதும்  சம்மதிக்கவே மாட்டா ர்.மேலும் மனிதர்களைக்  க ண்டாலே அவருக்கு பிடிக்கவே பிடிக்காது என்றாள்.

மேலும்  அ ப்பா சொன்ன  அனைத்தை யும் சொன்னாள்.

நான் எப்படியாவ து  அ ப்பா சம்மதம் வாங்கி விடுகிறேன் .

இல்லா விடினும் நான் உங்களைத் தான் மணம் முடிப்பேன் ,

இது உறுதி என்றாள்.அப்போதுதான் மீனலோசனி கவனித்தால் சற்று தூரத்தில் ஒரு மரத்தின் பின்னாலிருந்து யாரோ இவர்களை உற்று நோக்குவது புரிந்தது.

ஒருவேளை என் அப்பாவாக இருக்குமோ தான் என்ன செய்கிறோம் என்பதை வேவு பார்ப்பதற்காக யாரையேனும் அனுப்பி இருப்பாரோ என்று நினைத்தாள்.

ஆனால் அப்பா  அப்படிப் பட்டவர்  கிடையாதே. கண்டிப்பாக இது அப்பாவின் வேலையாக இருக்காது .எதுவாக இருந்தாலும் நேருக்கு நேர் இவளுடன் பேசித்தான் தீர்த்துக் கொள்வார் .இப்படி மட்டமான வேலையில் ஈடுபட மாட்டார்.

வேறு யாராக  இருக்கும் தனக்கு வேண்டியவர் யார் இருக்கிறார்கள்,

வேண்டா தவர்கள் யார் இருக்கிறார்கள்,  என்று யோசித்தாள்


அப்போதுதான் திலீபனும் அங்கே கவனித்தான் யாரோ ஒருவர் இருந்ததை, பார்க்கவே அருவருப்பாக இருந்தது அவளை பார்த்தாலே ஏதோ ஒரு சூனி ய  கிழ வி போல் இருந்தது .எதற்காக என்னை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறார் என்று அவனுக்கு புரியவில்லை உடனே மீன லோசினிடம் கேட்டான் .யார் ??அந்த கிழ வியை உனக்கு தெரியுமா. ஏன் அந்தம்மா நம்மை மிகவும் உற்று குறு குறு என்று பார்க்கிறது என்று கேட்டான்.

மீன லோசினி நானும் அதைத் தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன் என்றாள்,.

வா போய்  பார்த்து  வருவோம் என கிளம்பினர்  இருவரும்.

 என்ன நடக்க போகின்றது  என்று  தெரியாமலே ????

 

 


Rate this content
Log in

Similar tamil story from Action