STORYMIRROR

anuradha nazeer

Action Classics Inspirational

4  

anuradha nazeer

Action Classics Inspirational

கற்க வேண்டிய பண்பு

கற்க வேண்டிய பண்பு

1 min
186

பேசும் தெய்வம் படத்தில் ஒரு காட்சியில் சிவாஜியின் நடிப்பு டைரக்டருக்கு திருப்தியில்லாததால் தொடர்ந்து ஒன்ஸ்மோர் கேட்க சிவாஜி டைரக்டரையே நடித்து காட்ட சொல்ல கே.எஸ்.ஜி நடித்து காட்ட பேக்கப் சொல்லி விட்டு சிவாஜி சென்று விட்டார்.தயாரிப்பாளரோ இந்த காட்சி முடிந்திருந்தால் படத்தை ரிலீஸ் செய்திருக்கலாம்.இனி சிவாஜியின் கால்சீட் கிடைக்க 6மாதமாகுமே என டைரக்டரிடம் வருத்தப்பட்டதோடு சிவாஜியிடம் ஒன்ஸ்மோர் கேட்கலாமா அவர் நடிப்பின் பல்கலைக்கழகம் என கடிந்து கொண்டார். இரவு கே.எஸ்.ஜி  போன் செய்த அவரது தம்பி சண்முகம் அண்ணன் நாளை காலை 7மணிக்கு சூட்டிங் வருவார் என்று கூறினார்.


மறுநாள் டைரக்டர் எதிர்பார்த்த நடிப்பை சிவாஜி தர அவரை கட்டியணைத்த டைரக்டர் இதைத் தான் நான் எதிர்பார்த்தேன் என்று கூறினார். சிவாஜியோ இத்தனை ஆண்டுகள் நான் நடித்து வருகிறேன். ஆனால் நேற்று நீங்கள் எதிர்பார்த்த நடிப்பை இன்று தர நான் கண்ணாடி முன் நின்று பயிற்சி எடுத்தேன் என்று கூறியதிலிருந்து கௌரவம் மற்றும் ஈகோ பார்க்காமல் நடிக்கும் கலைஞன் சிவாஜி.இன்றுள்ள முண்ணனி நடிகர்கள் கற்க வேண்டிய பண்பு இது.சிவாஜி சார் மாதிரி நடிக்க முடியாது’ என்பார்கள். ‘சிவாஜி சார் தான் செட்டுக்கு முத ஆளா வருவாரு’ என்பார்கள். ‘சிவாஜி சார் சம்பள விஷயத்துல கறார் காட்ட மாட்டா ர் ’ என்பார்கள். ‘சிவாஜி சார், அந்தக் கேரக்டராவே மாறிடுவார் ’ என்பார்கள். ‘சிவாஜி சார், விளம்பரப் படுத்திக்காமல் எத்தனையோ உதவிகள் செய்திருக்கார்’ என்பார்கள். ‘சிவாஜி சார் அப்படி என்கரேஜ் பண்ணி நடிக்க வைப்பார் ’ என்பார்கள். ‘சிவாஜி சார், எல்லார் கிட்டயும் தாயா பிள்ளையா பழகுவார்’ என்பார்கள். ‘சிவாஜி சார், வீட்டுக்கு யார் வந்தாலும் சாப்பிட வைச்சுத்தான் அனுப்புவார்’ என்பார்கள். 



Rate this content
Log in

Similar tamil story from Action