anuradha nazeer

Abstract Inspirational

4.2  

anuradha nazeer

Abstract Inspirational

கரோனா

கரோனா

1 min
11.6K


: கரோனாவில் இருந்து தப்ப புதிய குடை கண்டுபிடித்த பிஹார் இளைஞர்

என்ன வினித் கரோனா வந்தாலும் வந்தது.வெளியே வரக்கூடாது என்றுதான் அரசாங்க உத்தரவு .நீ வாட்ஸ்அப் போனில் கூட வரமாட்டேன் என்கிறாயே. அப்படி என்னதான் செய்து கொண்டிருக்கிறாய்?

வினித்: ஏனெனில் நான்। கரோனா காரணமாக மக்களை பாதிக்காத வண்ணம் புதிய குடை தயாரிப்பில் ஈடுபட்டு இருந்தேன் .அதனால்தான்யாருடனும் தொடர்பு கொள்ள முடியவில்லை.ஆனாலும் நாட்டு மக்களுக்கு பயனுள்ள வகையில் ஒரு புதிய குடை தயாரித்தேன் என்பது மனதுக்கு சற்று இதமாக இருக்கிறது.

: கரோனா வைரஸில் இருந்து தப்ப பிஹார் மாநில இளைஞர் ஒரு புதிய குடை கண்டுபிடித்துள்ளார். தேசிய தொழில் ஆய்வுக் கவுன்சில்(சிஎஸ்ஐஆர்) அங்கீகாரத்திற்காக அனுப்பப்பட்டுள்ளது.

உலகயே அச்சுறுத்தும் கரோனாவில் இருந்த தப்ப முதன்முறையாக இந்தியாவில் நாடு முழுவதிலும் ஊரடங்கு உத்தரவு அமலாகி வருகிறது. ஏப்ரல் 14 வரை நீட்டித்து வந்தாலும் அந்நாட்களில் அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியில் செல்ல வேண்டிய நிலையும் உள்ளது.


அவ்வாறு செல்பவர்களுக்கு பாதுகாப்பளிக்கும் வகையில் பிஹாரில் கரோனா குடை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை அம்மாநிலத்தின் அவுரங்காபாத் மாவட்டத்தின் பர்தவுலியின் தேவ்ஹரா எனும் கிராமத்தின் வினித் குமார் தயாரித்துள்ளார்.

சாதாரணமாக மழைக்கும் பிடிக்கும் குடையில் சில மாறுதல்கள் செய்யப்பட்டு அது உருவாகி உள்ளது. இதன் பொத்தானை அமுக்கியவுடன் குடை விரிந்து திறக்கும்,

இத்துடன் குடையை சுற்றிலும் கால்வரை தொங்கியபடி பிளாஸ்டிக் காகிதமும் விரிந்தது விடும். அதேசமயம் குடையின் மேல்பகுதியில் வைக்கப்பட்டுள்ள பூச்சிக்கொல்லி மருந்தும் தெளிக்கப்பட்டுவிடும்.

அதன் தேவை மேலும் வேண்டும்நிலையில் மற்றொரு முறை அதன் பொத்தானை அமுக்கி பூச்சிக்கொல்லி மருந்தை தெளிக்கச் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் வினித் குமார் கூறும்போது, ‘இக்குடையை சிஎஸ்ஐஆர் நிறுவனத்தின் தலைமையகத்தின் அங்கீகரத்திற்கு டெல்லி அனுப்பியுள்ளேன். இந்த தகவலை விவரித்து அந்நிறுவன அதிகாரிகளுக்கு மெயிலும் எழுதியுள்ளேன்.’ எனத் தெரிவித்தார்.

: இதன் விலையை ரூ.300 என நிர்ணயித்துள்ள வினித் குமார், அவரது பகுதியின்ல் இளம் விஞ்ஞானி என்றழைக்கப்படுகிறார், இதற்கு முன் பிளாஸ்டிக்கில் வினித் பெட்ரோல் தயாரித்து அதுவும் ஆய்வில் இருப்பதாகக் கூறுகிறார்.

கேட்பதற்கும், பார்ப்பதற்கும் சற்று நகைச்சுவையாக இருந்தாலும் இந்த கரோனா குடை பயன்படுத்தி பார்த்தால் தன பலன் தெரியும் நிலையில் அமைக்கப்பட்டுள்ளது.


Rate this content
Log in

Similar tamil story from Abstract