கொரோனவிலிருந்து முழுமையாக குணம
கொரோனவிலிருந்து முழுமையாக குணம


கேரளாவில் கொரோனவிலிருந்து முழுமையாக குணமாகி வீடு திரும்பிய நபர்
கேரளவில் கொரோனாவில் இருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பிய நபரை மருத்துவமனையில் உள்ள அனைவரும் கைதட்டி உற்சாகமளிக்கும் காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கொரோனா வைரஸினால் அதிகம் பாதிக்கப்பட்ட முன்னணி மாநிலங்களில் கேரளமும் ஒன்று. அங்கு காசர்கோட் மாவட்டத்தில் மட்டுமே அதிகபட்சமாக 115 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், காசர்கோட் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றில் இருந்து முதல் நபர் ஒருவர் குணமடைந்துள்ளார்.
அவரை மருத்துவர்கள் மகிழ்ச்சியுடன் கைதட்டி வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.