கொரோனா பீதி
கொரோனா பீதி


கொரோனா பீதியால் ஆலயங்கள் மூடப்பட்டதும் கடவுளே இல்லை என்று கூச்சலிட்டனர் சிலர்...இருக்கு என்று நம்புபவருக்கும் சிவன் இருக்கிறார்...இல்லை என மறுப்பவருக்கும் அவன் இருக்கிறார்... மனித வாழ்விற்கு ஒவ்வாத செயல்களையும் எதிரான செயல்ளையும் செய்துவிட்டு நவ்வவன் போல தயங்காமல் கோவிலுக்குள் சென்றவர்கள் திருந்துவதற்கு எத்தனையோ வாய்ப்புகள் கொடுத்தார் கடவுள்...ஆலயத்திற்குள்ளேயே அரசியல் வந்தது...பொறுக்க மாட்டாத கடவுள் போங்கடா உங்கள் முகத்திலயே முழிக்க மாட்டேன் என மனிதர்களை வெளியே தள்ளி ஆலயங்களுக்கு பூட்டு போட்டுக் கொண்டார்...ஆனாலும் மனிதன் மீது பேரன்பும் பெருங்கணையும் கொண்டுள்ள இறைவன் மனிதர்களை புதிப்பித்து உலக வாழ்விற்கு ஏற்றவர்களாக ஆக்க விரும்பினார்...எத்தனையோ மறை நூல்கள் சொல்லியும் மனிதர்கள் திருந்தாததை கண்ட கடவுள் இனி ஆக்க செயல்களால் மனிதர்களிடத்தில் மாற்றம் கொண்டு வரமுடியாது என உணர்ந்தார்... அழிவு செயலால்தான் மட்டுமே மனிதனை புதிப்பிக்க முடியும் என எண்ணி கொரோனாவை கண்ணுக்கு தெரியாத வைரஸ் வடிவில் அனுப்பினார்... இறைவனின் பேரறிவு பாருங்கள் இந்த வைரஸ் மனிதனை தவிர வேறு உயிர்களை அழிக்காத வண்ணம் பார்த்துக் கொண்டார்...இனி ஒவ்வொரு மனிதனின் கடமையும் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்வது மட்டுமே அவன் வேலை.