anuradha nazeer

Fantasy

4.7  

anuradha nazeer

Fantasy

கொரோனா காலத்தில் தோள் கொடுத்தது

கொரோனா காலத்தில் தோள் கொடுத்தது

1 min
12K


மனவேதனையாயிடுச்சு!’ - பால்மாட்டை விற்று வைத்தியம் பார்த்த குடும்பத்துக்கு நீளும் உதவிக்கரம்

சர்க்கரை நோயால் தவிக்கும் அழகேந்திரன் குடும்பத்துக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கி உதவிக் கரம் நீட்ட சமூக அமைப்பு ஒன்று முடிவு செய்துள்ள நிலையில், அவருக்கு பல்வேறு தரப்பினரும் உதவி செய்துவருகிறார்கள்.

மதுரை மாவட்டம் மேலூர் எட்டிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அழகேந்திரன். கலப்பை தயார்செய்யும் தொழில் செய்துவந்த இவர், உடல்நிலை பாதிக்கப்பட்டதற்குப் பின் வீட்டிலேயே இருந்துவருகிறார்.


இதனால் அழகேந்திரனையும், அவர்களின் குழந்தைகளையும் அவரின் மனைவி பேச்சியம்மாள் கூலி வேலை செய்து காப்பாற்றிவந்தார். மேலும், அழகேந்திரனுக்கு சர்க்கரை நோய் அதிகமான காரணத்தால் அவருக்கு சிகிச்சையும் அளித்துவருகிறார். தங்களது வீட்டில் இருந்த பால் மாட்டை விற்று மருத்துவம் பார்க்கும் சூழலுக்கு வந்தார்.  


இந்த நிலையில், கரூர் இணைந்த கைகள் மற்றும் ஒன் ஸ்டெப் அமைப்புகள் சேர்ந்து அழகேந்திரன் குடும்பத்துக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவதாக முடிவு செய்து தற்போது முதல் ஆயிரத்தை வழங்கி உதவி செய்துள்ளனர்.திருவான்மியூரில் வசித்து வரும் சமூக ஆர்வலர் சத்யா, செல்வசுரேஷ், நாமக்க

இதுபோல் ல் செண்பக முருகன், பேராசிரியர் பாலா உள்ளிட்டோர் சிறிய பண உதவிகளைச் செய்துள்ளனர். அழகேந்திரன் குடும்பத்தின் முழுமையான கஷ்டம் தீரவில்லை என்றாலும் தற்போது கொரோனா காலத்தில் தோள் கொடுத்தது போல் உதவி கிடைத்துள்ளதை சமூக ஆர்வலர்கள் பாரட்டினர்.

இது குறித்து இணைந்த கைகள் அமைப்பைச் சேர்ந்த சாதிக், ``சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட அழகேந்திரன் குடும்பத்தை பார்த்தது மிகவும் மன வேதனையை ஏற்படுத்தியது. அவர்களின் நிலையை உணரமுடிந்தது. அதனால் மாதம் 1000 ரூபாய் வழங்கலாம் என முடிவு செய்து முதல் மாத பணத்தை அவர்களின் நேரடி வங்கி கணக்குக்கு  வழங்கி உதவி செய்துள்ளனர்.


Rate this content
Log in

Similar tamil story from Fantasy